Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம் இயக்கம்

Print PDF

தினமணி            26.09.2013 

பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம் இயக்கம்

ஆலங்காயம் பேரூராட்சியில் பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் விதமாக அவற்றை தூளாக்கும் இயந்திரம்  இயக்கப்பட்டுள்ளது. இதை செயல் அலுவலர் வே.கோபாலன் செவ்வாய்க்கிழமை இயக்கிவைத்தார்.

வேலூர் மாவட்டத்திலேயே முதல்முறையாக ரூ.1 லட்சம் மதிப்பிலான இந்த இயந்திரம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா கந்தன், துணைத் தலைவர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

பல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி துவக்கம்

Print PDF

தினமணி            26.09.2013 

பல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணி துவக்கம்

பல்லடம் பேருந்து நிலையம் விரிவாக்கப் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

பல்லடம் நகராட்சி அறிஞர் அண்ணா மத்திய பேருந்து நிலையம் ரூ.1கோடியே 60 லட்சம் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

 இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு  பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பரமசிவம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர், துணைத்தலைவர் வைஸ் பி.கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் கே.ராதாகிருஷ்ணன் பூமி பூஜை நடத்தி பணிகளை துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.சண்முகம், நகராட்சி கவுன்சிலர்கள் அம்சவேணி, கிருஷ்ணகுமார், தர்மராஜ், குப்புராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

பூங்காக்களுக்கு தண்ணீர் விட ரூ. 2 கோடியில் லாரிகள்

Print PDF

தினமணி            26.09.2013 

பூங்காக்களுக்கு தண்ணீர் விட ரூ. 2 கோடியில் லாரிகள்

சென்னையில் உள்ள பூங்காக்களுக்கு தண்ணீர் விடும் பணிக்காக 10 தண்ணீர் லாரிகளை சென்னை மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளது.

மேலும் கட்டட இடிபாடுகளை அகற்றுவதற்காக 11 பொக்லைன் இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து மாநகராட்சி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகளில் சேரும் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிக்காக 11 பொக்லைன் இயந்திரங்களை ரூ. 2.13 கோடியில் மாநகராட்சி கொள்முதல் செய்துள்ளன.

இதேபோல, மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கு தண்ணீர் விடும் பணிக்கு 10 கனரக தண்ணீர் லாரிகள் ரூ. 1.90 கோடியில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.4.03 கோடி ஆகும். இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேயர் சைதை துரைசாமி மற்றும் ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 46 of 238