Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.1.36 கோடியில் 29 பள்­ளி­களில் ஜென­ரேட்டர் அம­லுக்கு வந்­தது பட்ஜெட் அறி­விப்பு

Print PDF

தினமலர்          23.09.2013

ரூ.1.36 கோடியில் 29 பள்­ளி­களில் ஜென­ரேட்டர் அம­லுக்கு வந்­தது பட்ஜெட் அறி­விப்பு

சென்னை:சென்னை அரசு உயர்­நிலை, மேல்­நிலைப் பள்­ளி­களில் ஜென­ரேட்டர் நிறு­வப்­படும் என்ற கடந்த மாந­க­ராட்சி பட்­ஜெட்டின் முதல் அறி­விப்பு தற்­போது அம­லுக்கு வந்­துள்­ளது. முதல்­கட்­ட­மாக 21 பள்­ளி­களில் 1.36 கோடி ரூபாய் செலவில் ஜென­ரேட்டர் நிறுவ ஒப்­பந்தம் கோரப்­பட்­டுள்­ளது.

சென்னை மாந­க­ராட்சி உயர்­நிலை, மேல்­நிலைப் பள்­ளி­களில் ஆய்­வ­கங்கள் இருப்­பதால், தங்கு தடை­யின்றி மின்­சாரம் கிடைக்கும் வகையில் மாண­வர்கள் வச­திக்­காக ஜென­ரேட்டர் பொருத்­தப்­படும் என, கடந்த மாந­க­ராட்சி பட்­ஜெட்டில் முதல் அறி­விப்­பாக மேயர் கூறி­யி­ருந்தார்.

இதன்­படி சென்னை மாந­க­ராட்சி கட்­டுப்­பாட்டில் உள்ள 70 உயர்­நிலை, மேல்­நிலைப் பள்­ளி­களில், முதல்­கட்­ட­மாக 21 பள்­ளி­க­ளுக்கு ஜென­ரேட்டர் வாங்க, 1.36 கோடி ரூபாய்க்கு மாந­க­ராட்சி ஒப்­பந்த அறி­விப்பு வெளி­யிட்­டுள்­ளது.

இதில், அண்­ணா­நகர் மண்­ட­லத்தில் 7 பள்­ளிகள், திரு.வி.க., நகர் மண்­ட­லத்தில் 11 பள்­ளிகள், தேனாம்­பேட்டை மண்­ட­லத்தில் 11 பள்­ளிகள் இடம் பெற்­றுள்­ளன.

10 கி.வா., முதல் 62.5 கி.வா., வரை திறன் கொண்ட ஜென­ரேட்­டர்கள், பள்­ளி­களின் வச­திக்கு ஏற்ப வாங்­கப்­பட உள்­ளன.

மற்ற பள்­ளி­க­ளுக்கும் இந்த ஆண்டு இறு­திக்குள் ஜென­ரேட்­டர்கள் வாங்கி நிறு­வப்­படும் என்று மாந­க­ராட்சி மின்­துறை அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

 

ஈரோடு பஸ் நிலையத்தில் சுதந்திர தின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவு அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார்

Print PDF

தினத்தந்தி           23.09.2013

ஈரோடு பஸ் நிலையத்தில் சுதந்திர தின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவு அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார்

 

 

 

 

 

ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திரதின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் திறந்து வைத்தார்.

நுழைவு வாயில் வளைவு

ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சத்திரோடு வழியாக செல்லும் பஸ்கள் வெளியேறும் நுழைவு வாயிலில் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் செலவில் மாநகராட்சி சார்பில் சுதந்திர தின வெள்ளி விழா நுழைவு வாயில் வளைவு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிசாமி, ஆணையாளர் மு.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் திறந்து வைத்தார்

விழாவில் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நுழைவு வாயில் வளைவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாநகராட்சி என்ஜினீயர் ஆறுமுகம், மண்டல தலைவர் கேசவமூர்த்தி, 2–வது மண்டல உதவி ஆணையாளர் அசோக்குமார், கவுன்சிலர்கள் குப்புசாமி, விநாயகமூர்த்தி, நகர அ.தி.மு.க. மாணவர் அணி பொருளாளர் முருகானந்தம், சூரம்பட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் சூரம்பட்டி ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நுழைவு வாயில் வளைவு திறக்கப்பட்டதைத்தொடர்ந்து அந்த வழியாக அனைத்து பஸ்களும் செல்லத்தொடங்கின. இதனால் கடந்த 2 மாதங்களாக நாச்சியப்பா வீதியில் ஏற்பட்டு இருந்த போக்குவரத்து நெரிசல் முற்றிலும் நீங்கியது.

காங்கிரசார் கொண்டாட்டம்

ஈரோடு பஸ்நிலையத்தில் நுழைவு வாயில் வளைவு அமைக்க வேண்டும் என்று ஈரோடு நகராட்சியாக இருந்த போதே காங்கிரஸ் கவுன்சிலர் சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி தற்போது ஈரோடு பஸ்நிலையத்தில் சுதந்திரதின வெள்ளிவிழா நுழைவு வாயில் வளைவு அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.

இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. விடியல்சேகர் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை பொதுச்செயலாளர் கே.என்.பாஷா முன்னிலையில் காங்கிரசார் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மைப்பிரிவு துணைத்தலைவர் முகமதுஅர்சத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

 

புதிதாக ரூ.7 கோடியில் 16 இயந்திரங்கள்

Print PDF
தினமலர்            10.09.2013

புதிதாக ரூ.7 கோடியில் 16 இயந்திரங்கள்


சென்னை:கழிவுநீர் அடைப்பு நீக்கும் பணிக்காக, 7 கோடி ரூபாயில் புதிதாக, 16 இயந்திரங்கள், சென்னை குடிநீர் வாரியத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

சென்னை குடிநீர் வாரியத்தில், கழிவுநீர் அகற்றும் பணிக்காக, 3.6 கோடி ரூபாயில், பத்து ஜெட்ராடிங் இயந்திரங்களும், 2.33 கோடி ரூபாயில், ஜெட்டிங் கம் ஜங்ஷன் இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன.

புதிய வாகனங்கள், வண்ணாரப் பேட்டை, ஆர்.கே.நகர், ராயபுரம், வில்லிவாக்கம், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கு, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, பெரம்பூர் மற்றும் தி.நகர் பகுதிகளுக்கு, வழங்கப்படும் என, வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டில், 5.52 கோடி ரூபாயில், 62 துார்வாரும் இயந்திரங்களும், 2.35 கோடி ரூபாயில், 10 ஜெட்ராடிங் இயந்திரங்களும் வாங்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன.

சென்னையில், எங்கு பார்த்தாலும் சாலைகளில், கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, கூடுதலாக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை முறையாக பயன்படுத்தி, சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை கட்டுப்படுத்த வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.
 


Page 47 of 238