Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

Print PDF

தினமணி               02.09.2013

பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு ரூ.45 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகமானது கடந்த 1990-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த அலுவலகத்தில் பல்வேறு வசதிக் குறைபாடுகள் உள்ளது என்றும், பேரூராட்சிக்கென புதிய கட்டடத்தை அமைக்க வேண்டும் எனவும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.

இதனைத்தொடர்ந்து, பேரூராட்சித் தலைவர் முத்துகுமரன் தலைமையில் புதிய கட்டடத்துக்கான பூமி பூஜை அண்மையில் நடைபெற்றது.

இந்நிலையில் ரூ.45 லட்சம் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 

செஞ்சி கண்ணகி நகரில் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி               02.09.2013

செஞ்சி கண்ணகி நகரில் பூங்கா: பேரூராட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

செஞ்சி கண்ணகி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற செஞ்சி பேரூராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செஞ்சி பேரூராட்சி மன்றத்தின் சாதாரண கூட்டம் செஞ்சி பேரூராட்சி தலைவர் செஞ்சிமஸ்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். துணை தலைவர் இ.சங்கர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், செஞ்சி கண்ணகி நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைப்பது, நீர் நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பேரூராட்சிக்கு சொந்தமான ஏரி, குளம் மற்றும் ஊரணிகளை தூர்வாருவது, காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தெருவில் ரூ.36 லட்சத்திலும், எல்.டி.பேங்க் தெருவில் ரூ.70 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைப்பது. ஜாபர் பேக் தெருவில் உள்ள கிணற்றை தூர்வாரி மின் மோட்டார் பொருத்தி சின்டெக்ஸ் அமைப்பது, பூவாத்தம்மன், செல்லியம்மன் ஆலயத்திற்கு செல்ல மாற்று ஏற்பாடு செய்து தருமாறு செஞ்சி வட்டாட்சியரை கேட்டுக்கொள்வது,

செஞ்சி பி.ஏரிக்கரை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி வழக்குரைஞர் சக்திராஜன் அளித்துள்ள மனு குறித்து ஆய்வு செய்ததில் பி.ஏரி செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இது குறித்து ஊராட்சி ஒன்றியத்திற்கு தகவல் அளிப்பது, பி.ஏரிக்கரையின் உள்ளே நீர்பிடிப்பு பகுதியில் வீடு கட்டி வசிப்போரிடம் வீட்டு வரி இனி வசூல் செய்வது இல்லை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி மையம்

Print PDF

தினத்தந்தி              02.09.2013

திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி மையம்

 

 

 

 

 

திருச்சி மாநகராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி மையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது.

நவீன உடற்பயிற்சி மையம்

திருச்சி மாநகராட்சி 21-வது வார்டில் நவீன உடற்பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரி வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரும், அரசு தலைமை கொறடாவுமான மனோகரன் தொகுதி வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கினார். இதனை தொடர்ந்து மாநகராட்சியின் மூலம் வரகனேரி பெரியார் நகரில் தனியாக கட்டிடம் கட்டி அதில் நவீன உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த உடற்பயிற்சி மையத்தில் நவீன நடைபயிற்சி கருவி, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கான பயிற்சி செய்யும் கருவிகள், பளுதூக்கும் பயிற்சிக்கான சாதனங்கள் ஆகியவை வைக்கப்பட்டு உள்ளன. கழிவறை மற்றும் குளியல் அறை வசதியும் உள்ளது. இந்த பயிற்சி மையத்தை அரசு தலைமை கொறடா மனோகரன் திறந்து வைத்தார்.

சுய உதவி குழு பராமரிப்பு

இந்த பயிற்சி மையம் ஆண்கள் சுயஉதவி குழுவின் கட்டுப்பாட்டில் விடப்பட்டு பராமரிக்கப்படும் என்றும், இதனை பயன்படுத்தும் இளைஞர்களிடம் மாதா மாதம் குறைந்த அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அப்போது அரசு தலைமை கொறடா மனோகரன் தெரிவித்தார்.

விழாவில் மேயர் ஜெயா, துணை மேயர் மரியம்ஆசிக், கூட்டுறவு சங்கங்களின் இணைய தலைவர் வெல்லமண்டி நடராஜன், அரியமங்கலம் கோட்ட தலைவர் சீனிவாசன், துணை தலைவர் பத்மநாதன், கவுன்சிலர்கள் அய்யப்பன், முஸ்தபா, ராஜேந்திரன், பகுதி செயலாளர் கலீல்ரகுமான், அவைத்தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 49 of 238