Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற புதிய வாகனங்கள்

Print PDF

தினமணி                19.08.2013

மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற புதிய வாகனங்கள்

மதுரை மாநகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்ற புதிதாக 16 வாகனங்கள் விநியோகிக்கப்பட்டன.

   மதுரை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டு பகுதிகளுக்கு குப்பை அள்ளத் தேவையான வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.10 கோடி மானியமாகப் பெறப்பட்டது.

    இதில், 50 டம்பர் பிளேசர் வாகனங்கள், 2 காம்பேக்டர் வாகனங்கள், 400 டம்பர் பின் மற்றும் 125 காம்பேக்டர் பின் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன.

   இதில், தலா 17 டம்பர் பிளேசர் வாகனங்கள் ஏற்கெனவே 2 கட்டங்களாக விநியோகிக்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், 3-ம் கட்டமாக 16 டம்பர் பிளேசர் வாகனங்கள் சனிக்கிழமை பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டன.

  இந்த வாகனங்களின் சாவிகளை அவற்றின் ஓட்டுநர்களிடம் மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, ஆணையர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் ஒப்படைத்தனர்.

  நிகழ்ச்சியில் பேசிய மேயர், புதிதாக வழங்கப்பட்ட 16 டம்பர் பிளேசர் வாகனங்களுடன் சேர்ந்து மொத்தம் 100 வாகனங்கள் மாநகராட்சியில் இயங்குகின்றன. இதன் மூலம் வார்டுக்கு ஒரு வாகனம் வீதம் குப்பை அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

 

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை

Print PDF

தினகரன்              16.08.2013

கழிவுநீர் வாய்க்கால் அமைக்க பூமி பூஜை


வில்லியனூர்: புதுவை உழவர்கரை தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படா மல் இருந்து வந்தது. இதனால் கழிவுநீர் ஆங் காங்கே தேங்கி கொசுத் தொல் லைகள் அதிக அளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இது சம்பந்தமாக அங்குள்ள மக்கள் அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் முறையிட்டனர்.

 அதனடிப்படையில் திருநகர் முதன்மை சாலையில் இருபக்கமும் கழிவுநீர் கால்வாய் கட்ட ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டது. பின்னர் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக நடந்த பூமி பூஜையை அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

 நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் அழகிரி, செயற்பொறியாளர் குணசேகரன், உதவி பொறியாளர் கலியவரதன், இளநிலை பொறியாளர் கருணாநிதி மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

உழவர்கரை நகராட்சிக்கு "காம்பாக்டர்" வாகனம்

Print PDF
தினமலர்               14.08.2013

உழவர்கரை நகராட்சிக்கு "காம்பாக்டர்" வாகனம்


புதுச்சேரி : குப்பை அகற்றும் பணிக்காக, காம்பாக்டர் வாகனத்தை, உழவர்கரை நகராட்சி வாங்க உள்ளது.

குப்பை அகற்றும் பணிக்கு தற்போது டிராக்டர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வீதிகளில் குவியும் குப்பைகளை, தொழிலாளர்கள் அகற்றி, டிராக்டர்களில் கொட்டுகின்றனர். டிராக்டர்கள் நிரம்பியவுடன், குப்பை கொட்டும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

குப்பைகளை விரைவாக அகற்றும் வகையில், "காம்பாக்டர்' எனப்படும் நவீன வாகனத்தை வாங்குவதற்கு, உழவர்கரை நகராட்சி ஆர்டர் அளித்துள்ளது. 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காம்பாக்டர், ஓரிரு வாரங்களில் வர உள்ளது.

இந்த வாகனம் மூலம் குப்பைகளை அகற்றுவதற்கு வசதியாக, மெகா சைஸ் குப்பைத் தொட்டிகள் 25 வாங்கப்பட்டுள்ளன. குப்பை அதிகம் சேரும் இடங்களில், இந்த குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். மெகா சைஸ் குப்பைத் தொட்டிகள் நிரம்பியவுடன், காம்பாக்டர் வாகனத்தில் இணைக்கப்பட்டு, குப்பைகள் காம்பாக்டருக்குள் கொட்டப்பட்டு, உடனுக்குடன் அகற்றப்படும்.
Last Updated on Wednesday, 14 August 2013 09:15
 


Page 53 of 238