Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தெற்கு தில்லியில்குப்பைகளை அள்ள 375 புதிய ரிக்ஷாக்கள்

Print PDF
தினமணி       06.08.2013

தெற்கு தில்லியில்குப்பைகளை அள்ள 375 புதிய ரிக்ஷாக்கள்


குறுகிய தெருக்களில் உள்ள குடியிருப்புகளில் குப்பைகளை சேகரிக்க 375 புதிய ரிக்ஷாக்களை தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. இதற்கான நிகழ்ச்சி தெற்கு தில்லி மாநகராட்சி தலைமை அலுவலகமான சிவிக் சென்டரில் நடைபெற்றது.

இது தொடர்பாக தெற்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் ராஜேஷ் கெலாட் கூறியது:

பச்சை வண்ணம் பூசப்பட்ட ரிக்ஷாக்களில் ஓட்டுநரின் செல்போன் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பைகள் தொடர்பான புகார்களை அந்த எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

டிப்பர் வண்டிகள் செல்ல முடியாத தெருக்களில் இந்த ரிக்ஷாக்கள் சென்று குப்பைகளைச் சேரிக்கும் என்றார் கெலாட்.
 

வாலாஜாபாத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தமிழ் முரசு             01.08.2013

வாலாஜாபாத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பேரூராட்சியில் தீர்மானம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது என்று பேரூராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சி தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோவிந்தம்மாள் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முனியாண்டி, மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  அரசின் திட்டப்பணிகள் பற்றி விவாதித்தனர்.

கவுன்சிலர்கள் பேசுகையில், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும், குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய கட்டுமானப்பணி நடக்கும் வீடுகளில் அனுமதி பெற்று இருக்கிறார்களா? என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதில் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட சேர்க்காடு பகுதி, எஸ்.பி.கோயில் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது, வல்லப்பாக்கம் பகுதியில் புதிய குடிநீர் பைப்லைன் அமைப்பது, தாசப்ப சுபேதா தெருவில் விடுபட்டுள்ள சிமென்ட் சாலையை அமைப்பது, வி.வி.கோயில் தெருவில் உள்ள குழந்தைகள் மையத்துக்கு மின்சார இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

நகராட்சிப் பள்ளிக்கு மேஜைகள்

Print PDF

தினமணி               01.08.2013 

நகராட்சிப் பள்ளிக்கு மேஜைகள்

கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் மேஜைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 இப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் வீராச்சாமி தலைமை வகித்தார். கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம், ரோட்டரி மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், பள்ளி கிராம கல்விக் குழுத் தலைவர் கருணாநிதி, பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், நகராட்சிப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மற்றும் 2-ம் இடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், மாற்றுத் திறனாளி மாணவிக்கு ஊக்கப்பரிசும், பள்ளி மாணவர்களுக்கு மேஜைகளும் வழங்கப்பட்டன.

 விழாவில், கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற செயலர் சீனிவாசன் கல்வி மேம்பாட்டு பயிற்சி குறித்துப் பேசினார். விழாவில், ரோட்டரி சங்க மாவட்ட துணைத் தலைவர் முத்துசெல்வம், பொருளாளர் பரமேஸ்வரன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் பாபு, லட்சுமணப்பெருமாள், விக்னேஸ்வரன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 பள்ளித் தலைமையாசிரியை அப்பனசாமி வரவேற்றார். ரோட்டரி சங்கச் செயலர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி நன்றி கூறினார்.

 


Page 55 of 238