Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நகராட்சிப் பள்ளி கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி              27.07.2013

நகராட்சிப் பள்ளி கட்டடம் திறப்பு

சிதம்பரம் மாலைக்கட்டித் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய வகுப்புறைக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். நகர்மன்றத்  துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார் முன்னிலை வகித்தார். நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் திறந்து வைத்தார். விழாவில் நகர்மன்ற உறுப்பினர் க.சீதாராமன், தலைமை ஆசிரியை பா.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நியாயவிலைக் கடை திறப்பு: சிதம்பரம் நகராட்சி 6-வது வார்டில் வாகிசநகர் 2-ஆவது பிரதான சாலையில் புதிய ரேஷன் கடை கட்டடத்தை நகர்மன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர் திறந்து வைத்தார்.  இந்நிகழ்ச்சியில், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ், நகரமன்ற உறுப்பினர் சுமதிமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களுக்கு ரூ. 2.99 கோடியில் இயந்திரங்கள்

Print PDF

தினமணி              27.07.2013

குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களுக்கு ரூ. 2.99 கோடியில் இயந்திரங்கள்

கழிவுநீரை அகற்றப் பயன்படுத்தப்படும் ஜெட்ராடிங் இயந்திரம் மற்றும் தூர்வாரும் இயந்திரங்களை சென்னைக் குடிநீர் வாரியத்தின் பகுதி அலுவலகங்களுக்கு தமிழக நகராட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி வெள்ளிக்கிழமை வழங்கினார்.

சென்னைக் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களுக்கு கழிவுநீர் அகற்றப் பயன்படுத்தும் ஜெட்ராடிங் இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி பங்கேற்று ரூ. 2.99 கோடி மதிப்பில் 7 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 12 தூர்வாறும் இயந்திரங்களை வழங்கினார்.

இந்த இயந்திரங்கள் ராயபுரம், தியாகராய நகர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, வில்லிவாக்கம், பெரம்பூர் மற்றும் எழும்பூர் பகுகளில் உள்ள கழிவுநீர்கள் அகற்றப் பயன்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் க. பனீந்திரரெட்டி, சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குநர் பி. சந்திர மோகன், பொறியியல் இயக்குநர் டி.வி. பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

திண்டிவனம் குப்பை கிடங்கில் ரூ.9 லட்சம் செலவில் சுற்றுச்சுவர்

Print PDF

தினமலர்             11.07.2013

திண்டிவனம் குப்பை கிடங்கில் ரூ.9 லட்சம் செலவில் சுற்றுச்சுவர்

திண்டிவனம் : திண்டிவனத்தில் குப்பை சேமிப்பு கிடங்கை சுற்றி 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மதில்சுவர் அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

திண்டிவனம் பகுதியில் குப்பைகளை முழுமையாக சேகரித்து அகற்ற முடியாமல் களையும் அள்ள முடியாமல் நகராட்சி நிர்வாகம் திணறி வருகின்றது.

இந்த நகராட்சியில் மொத்தம் தேவையான 210 ஊழியர்களுக்கு பதிலாக, தற்போது உள்ள 35 துப்புரவு ஊழியர்கள் மூலமே குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றது.

ஆள் பற்றாக்குறையை சமாளிக்க நகராட்சி நிர்வாகம் சுய உதவி குழு மூலம் 40 பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இப்பிரச்னை குறித்து நகராட்சி சேர்மன் வெங்கடேசன் கூறுகையில், திண்டிவனம் நகராட்சியில் கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும் நகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்படுகின்ற குப்பைகளை, மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறை தவிர்க்கும் வகையில் குப்பைகள் கொட்டிவைக்கும் பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் மதில் சுவர் அமைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

 


Page 57 of 238