Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.15 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: தாராபுரத்தில் குடிநீர் குழாய்களை பதிக்கும் பணி தீவிரம்

Print PDF

தினத்தந்தி               25.06.2013

ரூ.15 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம்: தாராபுரத்தில் குடிநீர் குழாய்களை பதிக்கும் பணி தீவிரம்

 

தாராபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் திட்ட அபிவிருத்தி பணியின் கீழ் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீர் குழாய்களை பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குடிநீர் வினியோகம்

தாராபுரம் நகராட்சிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அமராவதி குடிநீர் திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இதில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் நாள் ஒன்றுக்கு 45 லட்சம் லிட்டர் குடிநீரும், அமராவதி குடிநீர் திட்டம் வழியாக தினமும் 35 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட 2 திட்டங்கள் மூலம் நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சியால் முடியவில்லை. கோடை காலங்களில் அமராவதி திட்டம் கைவிட்ட நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பற்றாக்குறை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது.

மின்தடை, குழாய் உடைப்பு மற்றும் தண்ணீர் திருட்டு போன்ற காரணங்களால் தாராபுரம் நகராட்சிக்கு குடிநீர் வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. நாள் ஒன்றுக்கு 80 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படும் தாராபுரத்திற்கு வறட்சியின்போது அமராவதி திட்டம் கைவிட்ட நிலையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 30 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைத்தது. இதனால் நகர் முழுவதும் குடிநீரை சீராக நகராட்சி நிர்வாகத்தால் வினியோகம் செய்யமுடியவில்லை.

புதிய திட்டம்

எனவே நகரில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கவும், எதிர்கால மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் ரூ.14.74 கோடி செலவில் சிறிய மற்றும் நடுத்தர நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தாராபுரம் நகராட்சி குடிநீர் அபிவிருத்திதிட்டம் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இதில் மத்திய அரசின் பங்கு ரூ.7 கோடியே 34 லட்சத்து 63 ஆயிரமாகும். மாநில அரசின் பங்கு ரூ.91 லட்சத்து 30 ஆயிரமாகும். நகராட்சி பங்கு ரூ.91 லட்சத்து 30 ஆயிரம். இந்த திட்டத்திற்கு மானியம் 5 கோடி 55 லட்சத்து 71 ஆயிரமாகும்.

இந்த நிதி முலம் அமராவதி ஆற்றில் நீர்சேகரிப்பு கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுதல், குடிநீர் உந்து பணிக்கு மோட்டார் வாங்குதல், குடிநீர் பகிர்மான குழாய்களை பதித்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

அமராவதி ஆற்றில் இருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. அதே போல் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் குழாய்கள் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தில் பதிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

135 லட்சம் லிட்டர் குடிநீர்

இந்த திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்போது நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு வராது என்றும் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் குடிநீர் கொடுக்க முடியும் என்றும், நகர் முழுவதும் சமச்சீரான குடிநீரை வினியோகம் செய்ய முடியும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

4 இடங்களில் நடைமேம்பாலங்கள்

Print PDF

தினமணி         25.06.2013

4 இடங்களில் நடைமேம்பாலங்கள்

திருச்சி மாநகராட்சிப் பகுதியில் மெயின்கார்டுகேட், சிந்தாமணி அண்ணாசிலை, மேலப்புதூர், மத்திய பேருந்து நிலையம்- ஆனந்த் ஹோட்டல் அருகில் ஆகிய 4 இடங்களில் பொதுமக்களின் வசதிக்காக நடை மேம்பாலங்களை அமைக்க அரசின் அனுமதியைப் பெற மாநகராட்சி மாமன்றம் ஒப்புதல் திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இதில், பொது-தனியார் கூட்டாண்மை (பிபிபி) முறையின்படி இந்த மேம்பாலங்களை அமைத்து, அவற்றில் விளம்பரங்களை அமைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கலாம் என்றும் தற்போது திட்டமிடப்பட்டுóள்ளது.

இந்தத் தீர்மானம் மாமன்றக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டபோது, தலைமை அஞ்சல் நிலையப் பகுதியில் ஒரு சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என கோட்டத் தலைவர் ஜெ. சீனிவாசன் கோரிக்கைவிடுத்தார்.

அதேபோல, ஜிகார்னர் பகுதியில் பொதுமக்கள் குழப்பத்தால் தொலைதூரம் கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அங்கும் சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சீனிவாசன்.

இந்த இரு கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 25 June 2013 08:52
 

அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3¼ கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி               24.06.2013

அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3¼ கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்


அந்தியூர் பேரூராட்சியில் ரூ.3¼ கோடியில் புதிய குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தொடங்கி வைத்தார்.

நலத்திட்ட உதவிகள்...

அந்தியூர் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடக்கவிழா, 10 வணிக வளாக கடைகள் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சண்முகம் தலைமை தாங்கினார். எஸ்.எஸ்.ரமணீதரன் எம்.எல்.ஏ., அந்தியூர் பேரூராட்சி தலைவர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அப்பாநாயக்கர், துணைத்தலைவர் சன்ரைஸ் சிவக்குமார், பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ரூ.3¼ கோடியில் புதிய குடிநீர் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய வணிக வளாகத்தை திறந்துவைத்தும், 176 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.24 லட்சத்து 85 ஆயிரம் கடன் உதவியும், வேளாண்மைத்துறை மூலம் 45 லட்சத்து 416 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

ரூ.20 கோடி மதிப்பில்...

விழாவில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது:–

தமிழக அரசு பதவி ஏற்ற 2 ஆண்டுகளில் 2 லட்சத்து 53 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்தியூர் பகுதியில் மணியாச்சி பள்ளத்தில் ரூ.10 கோடி செலவில் பாலம், ரூ.2 கோடி செலவில் தாலுகா கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

அந்தியூர் தொகுதிக்கு மட்டும் ரூ.20 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.கணேஷ், கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் மதிவாணன், மாவட்ட மாணவரணி தலைவர் சண்முகானந்தம், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணை செயலாளர் முனுசாமிநாயுடு, பாலுசாமி, வெங்கடாசலம், இ.எம்.ஆர்.ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் கவுன்சிலர்கள் கலந்துகொண்டார்கள். முன்னதாக பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கலைவாணன் வரவேற்று பேசினார். முடிவில் பேரூராட்சி செயல் அதிகாரி கருப்பண்ணன் நன்றி கூறினார்.

 


Page 58 of 238