Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருவொற்றியூரில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் மேயர் சைதை துரைசாமி தகவல்

Print PDF

தினத்தந்தி               24.06.2013

திருவொற்றியூரில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் மேயர் சைதை துரைசாமி தகவல்


திருவொற்றியூரில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.

தொடக்க விழா

திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட திருவொற்றியூர் எண்ணூர் பகுதிகளில் ரூ.3..73 கோடி செலவில் 1,363 மின்விளக்குகள் சென்னை மாநகராட்சி சார்பில்.அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மேயர் சிறப்பு நிதியிலிருந்து தாழங்குப்பம், திருவொற்றியூர் குப்பம் பகுதியில் 2 உயர் மின்கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையம் அருகே ரூ.42 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் நவீன சுடுகாடு புணரமைக்கப்பட்டுள்ளது.இவற்றின் தொடக்க விழா திருவொற்றியூர் தேரடியில் மண்டல குழு தலைவர் மு.தனரமேஷ் தலைமையில் நடைபெற்றது. திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.குப்பன் முன்னிலை வகித்தார்.விழாவில் மேயர் சைதை துரைசாமி கலந்து கொண்டு மின்விளக்குகளை இயக்கி வைத்து பேசியதாவது:–

உள்விளையாட்டு அரங்கம்

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளின் தரத்தை உயர்த்தி சென்னை மாநகராட்சிக்கு இணையாக மாற்ற முதல்–அமைச்சர் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கியுள்ளார். 110 விதியின் கீழ் ரூ.300 கோடி செலவில் 1 லட்சத்து 10 ஆயிரம் தெருவிளக்குகள் அமைய இருக்கிறது. இதில் திருவொற்றியூர் மண்டலத்தில் மட்டும் 10 ஆயிரம் மின்விளக்குகள் அமைய உள்ளன. அதேபோன்று தரமான சாலைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. திருவொற்றியூர் மயானம் சீரமைக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் பகுதியில் சர்வதேச தரத்தில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. 2 இடங்களில் நவீன மீன் மார்க்கெட், நவீன திருமண மண்டபங்கள் என முதல்வர் உத்தரவின் பேரில் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்றைக்கு அம்மா உணவகம் சரித்திரம் படைக்கிறது. செப்டம்பர் மாதத்திலிருந்து 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. 3 வேளைகளுக்கும் சேர்த்து 25 ரூபாய் இருந்தால் போதும் வயிறு நிறைய சாப்பிடலாம் என்ற நிலையை உலகத்தில் எங்கும் இல்லாத வகையில் முதல்–அமைச்சர் உருவாக்கியுள்ளார்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் எம்.எல்.ஏ.ஆறுமுகம், கவுன்சிலர்கள் மற்றும் நகர நி£வாகிகள் கலந்து கொண்டனர்.

 

மேலப்பாளையத்தில் ரூ.9½ கோடியில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கிவைத்தார்

Print PDF

தினத்தந்தி               21.06.2013

மேலப்பாளையத்தில் ரூ.9½ கோடியில் புதிய பைப் லைன் அமைக்கும் பணி மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கிவைத்தார்


மேலப்பாளையத்தில் ரூ.9½ கோடியில் புதிய பைப் லைன் அமைக்கும் பணியை நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த் தொடங்கி வைத்தார்.

புதிய பைப் லைன்

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலப்பகுதியில் குடிநீர் குழாய்கள் பதித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறாமல் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு குடிநீர் வீணாகச்சென்றன. எனவே புதிய குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைஏற்று ரூ.9 கோடியே 44 லட்சத்தில் கொண்டாநகரம் தலைமை நீர் ஏற்று நிலையத்தில் இருந்து மேலப்பாளையம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய குழாய்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

தொடக்க விழா

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகராட்சி துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன் தலைமை தாங்கினார். ஆணையாளர் த.மோகன், மண்டல தலைவர்கள் ஹைதர்அலி, எம்.சி.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேயர் விஜிலாசத்யானந்த், குழாய்கள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் மாநகர பொறியாளர் ஜெய்சேவியர், உதவி ஆணையாளர் அனிதா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, கவுன்சிலர்கள் ஆறுமுகம், பாஸ்கர், ஜோசப், டேனியல் ஆபிரகாம், ஹயாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ரூ. 9.44 கோடியில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்

Print PDF

தினமணி               21.06.2013

ரூ. 9.44 கோடியில் புதிய  குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ. 9.44 கோடி மதிப்பீட்டில் 20 கி.மீ. தொலைவுக்கு புதிய பிரதான குடிநீர் குழாய் பதிக்கும் பணியை மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

  திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் பகுதிக்கு கொண்டாநகரம் நீரேற்று நிலையத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவிலான ஏசி குழாய் மூலம் நீரேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இக்குழாய் ஏசி குழாயாக இருப்பதால் அதிகமான இடங்களில் உடைப்புகள் ஏற்பட்டு பெருமளவு நீர் வீணாகி வருகிறது.

 மேலும், பாளையங்கோட்டை மண்டலத்தில் சீவலப்பேரி சாலையில் இருந்து தியாகராஜநகர் வரையுள்ள 4 கி.மீ. தொலைவிலான குழாய்களும் ஏசி குழாயாக இருப்பதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது.   எனவே இந்த 20 கி.மீ. தொலைவிலான பழுதடைந்த ஏசி குழாய்களை மாற்றிவிட்டு புதிதாக நவீன இரும்பு குழாய்களை பதிக்க ரூ. 9 கோடிக்கு பிரேரனை தயார் செய்து அரசுக்கு அனுப்பி அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியின் உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணி, மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ரூ. 9.44 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.

இதையடுத்து புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின. மேலப்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை மேயர் பூ.ஜகநாதன், ஆணையர் (பொறுப்பு) த. மோகன், மண்டலத் தலைவர்கள் ஹைதர் அலி (மேலப்பாளையம்), எம்.சி. ராஜன் (பாளையங்கோட்டை), மாநகராட்சி பொறியாளர் ஜெய்சேவியர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.    

பழைய பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு,  புதிய நவீன குழாய்கள் பதிக்கப்படுவதன் மூலம் 16 வார்டுகளில் வசிக்கும் 1,22,714 மக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 59 of 238