Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

துப்புரவுப் பணி வாகனம் வழங்கும் விழா

Print PDF

தினமணி                     03.09.2012

துப்புரவுப் பணி வாகனம் வழங்கும் விழா

பண்ருட்டி, செப். 2: பண்ருட்டி நகராட்சியின் பொது சுகாதாரப் பணிக்குத் துப்புரவு வாகனங்கள் வழங்கும் விழா நகராட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.


÷நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் பண்ருட்டி நகராட்சிக்கு டம்பர் பிளேசர்-1, டிப்பர் லாரி-1, டிப்பர் ஆட்டோக்கள்-3, மூன்று சக்கர குப்பை அள்ளும் சைக்கிள்-15 மற்றும் குப்பை பெட்டிகள்-10 பெறப்பட்டுள்ளது.

÷பொது சுகாதாரப் பணிக்கு இவற்றை வழங்கும் விழாவுக்கு நகர் மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஊரகத் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், புதிய வாகனங்களின் சாவிகளை ஊழியர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.

÷ஆணையர் க.உமாமகேஷ்வரி முன்னிலை வகித்தார். துப்புரவு அலுவலர் பி.குமார் வரவேற்றார். துணைத் தலைவர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகராட்சி பொறியாளர் ஆர்.ராதா நன்றி கூறினார்.
 

திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.57 லட்சத்தில் 3 குப்பை லாரிகள்

Print PDF
தினமணி                     30.08.2012

திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.57 லட்சத்தில் 3 குப்பை லாரிகள்

திருவண்ணாமலை, ஆக. 29: திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூ.57 லட்சத்தில் வாங்கப்பட்டுள்ள அதிநவீன குப்பை லாரிகளின் இயக்கத்தை புதன்கிழமை நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை நகராட்சி ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் 2011-2012 திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளில் ஈடுபடுத்த இந்த லாரிகள் அண்மையில் வாங்கப்பட்டன.

ரூ.57 லட்சம் மதிப்புள்ள 3 அதிநவீன காம்பேக்டர் லாரிகளை இயக்கி வைக்கும் விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இவ் விழாவில், நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் இந்த லாரிகளை கொடியசைத்து இயக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி, 6-வது வார்டு கவுன்சிலர் ஜெ.எஸ்.செல்வம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Thursday, 30 August 2012 11:22
 

நாமக்கல் நகராட்சிக்கு 45 குப்பை தொட்டிகள்

Print PDF

தினமலர்              24.08.2012

நாமக்கல் நகராட்சிக்கு 45 குப்பை தொட்டிகள்

மக்கல்: நாமக்கல் நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அந்த தொட்டிகள், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளது.நாமக்கல் நகராட்சி, குப்பையில்லா நகராட்சியாக மாற்ற, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, வீடுகளில் சேகரமாகும் குப்பைகள், நேரடியாக பெறப்பட்டு அவை மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என தனியாக பிரித்து, பின், அவை லாரிகள் வெளியிடத்துக்கு கொண்டு சென்று அப்புறப்படுத்தப்படுகிறது.
 
திறந்த வெளி லாரி மூலம் குப்பைகள் கொண்டு செல்லும்போது, காற்றில் பறந்து மாசு ஏற்படுத்துகிறது. அதை தவிர்க்கும் வகையில், பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அந்த திட்டத்தில், 24 லட்சம் ரூபாய் மதிப்பில், 45 குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அந்த குப்பைத் தொட்டிகள், நகராட்சிக்கு உட்பட்ட, 39 வார்டுகளில் வைக்கப்பட உள்ளது. அவற்றை எடுத்துச் செல்வதற்காக பிரத்யோகமாக இரு லாரிகள் வாங்கப்பட்டுள்ளது.
 
இந்த லாரிகள் மூலம் குப்பைத் தொட்டிகள் எடுத்துச் செல்லும்போது, குப்பைகள் காற்றில் பறந்து விழாது. பாதுகாப்பான முறையில் குப்பை அகற்ற முடியும். ஒரு வாரத்தில், அவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து, நகராட்சி சேர்மன் கரிகாலன் கூறுகையில், ""நகராட்சியுடன் இணைக்கப்பட்ட வார்டு உட்பட அனைத்து வார்டுகளிலும், புதிதாக வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் வைக்கபட உள்ளது. அவற்றில் கொட்டப்படும் குப்பைகள் பாதுகாப்பான முறையில் லாரிகள் மூலம் அகற்றப்படும். மேலும், காப்பேக்டர் எனும் லாரியும் வாங்கப்பட உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் இவை பெறப்பட்டுள்ளது,'' என்றார்.
 


Page 77 of 238