Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Print PDF

தினமணி           23.08.2012

பாதாள சாக்கடை திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர், ஆக. 22: திருமழிசை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி புதன்கிழமை ஆய்வு செய்தார்.

திருமழிசை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் ரூ.20.47 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தம் 90 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன.

தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் திறந்தவெளி திறவிட மானிய திட்டத்தில் எல்.டி.எம். நகரில் ரூ.20 லட்சம் செலவில் பூங்கா கட்டப்பட்டு வருகிறது.

மேலும் பூந்தமல்லி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் நவீன ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி நேரில் ஆய்வு செய்தார். பணிகளை துரிதமாக மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் அனந்தசயனம், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் முருகேசன், பேரூராட்சித் தலைவர் அமுதா முனுசாமி, கவுன்சிலர்கள் முனுசாமி, மாலதி கருணா, சங்கர், செயல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

குப்பை சேகரிப்புக்கு ஆயிரம் தொட்டிகள்

Print PDF

தினமணி           23.08.2012

குப்பை சேகரிப்புக்கு ஆயிரம் தொட்டிகள்

பண்ருட்டி, ஆக. 22: பண்ருட்டி கடைவீதி மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் கழிவுகளை போட்டு வைப்பதற்காக ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் பிளாஸ்டிக் தொட்டிகளை வியாபாரிகளுக்கு நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் செவ்வாய்க்கிழமை வழங்கினார்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி முக்கிய வியாபார நகரம்.பண்ருட்டி கடை வீதி மற்றும் மார்க்கெட் பகுதியில் இருந்து நாள் ஒன்றுக்கு 8 டன் அளவுக்கு கழிவுகள் நகர நிர்வாகத்தால் அகற்றப்படுகிறது.

கடைவீதி மற்றும் மார்க்கெட் பகுதி இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் குப்பைகள் அள்ளப்படுவது வழக்கம்.

காலையில் கடைத் திறக்கும் வியாபாரிகள் கழிவுகளை சாலையில் கொட்டி வந்தனர். இதனால் குப்பைகள் காற்றில் பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.

மேலும் மார்க்கெட் பகுதியில் இறைச்சி மற்றும் காய்கறிக் கழிவுகள் கொட்டப்படுவதால் கால்நடைகளும், நாய்களும் சுற்றித் திரிந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு சுகாதாரமும் சீர்கேடாகிறது.

இதை அறிந்த பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் ஒவ்வொரு கடைகளுக்கும் குப்பைத் தொட்டிகள் வழங்க தீர்மானித்தார்.

இதைத் தொடர்ந்து ரூ.500 மதிப்பில் 1000 பிளாஸ்டிக் தொட்டிகளை வாங்கி வியாபாரிகளிடம் குப்பைக் கொட்டி வைக்க வழங்கினார்.

இதற்கான விழா நகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நகர்மன்றத் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி குப்பைத் தொட்டிகளை வழங்கினார். காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜா பெற்றுக் கொண்டார்.

ஆணையர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர் பி.குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஆர்.ராஜதுரை, எம்.முருகன், எஸ்.அப்துல்பாரி, வேல்முருகன், ரமேஷ்குமார், முன்னாள் ரோட்டரித் தலைவர் மதன்சந்த், வர்த்தக சங்கம் டி.சண்முகம், வி.வீரப்பன், காய்கறி வியாபாரிகள் சங்கச் செயலர் சேகர், பொருளர் உதயகுமார், அபீஸ், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குப்பை அள்ளும் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 500 டிரை சைக்கிள்கள்மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினகரன்      23.08.2012

குப்பை அள்ளும் பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் 500 டிரை சைக்கிள்கள்மாநகராட்சி ஏற்பாடு

சென்னை,: விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளும் பணி மாநகராட்சி மற்றும் தனியார் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளுக்கு லாரிகள், பொக்லைன்கள் போன்ற இயந்திரங்களும் மனித உழைப்பும் உள்ளது என்றாலும் பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் தேங்கியே இருக்கின்றன.

இதையடுத்து தற்காலிக பணியாளர்களை நியமிக்க மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் குப்பை அள்ளும் பணிக்காக பாடி கட்டிய 500 டிரை சைக்கிள்களை ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநகராட்சிக்கு குப்பை அள்ளும் பணிக்கு 500 டிரை சைக்கிள்கள் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிரை சைக்கிள்களை அளிப்பதற்கு சம்பந்தப்பட்ட டிரை சைக்கிள் தயாரிக்கும் கம்பெனி, அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து டெண்டர்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநகராட்சியின் டெக்னிக்கல் புளு பிரிண்ட் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களோடு மட்டுமே டிரை சைக்கிள்கள் இருத்தல் வேண்டும். டிரை சைக்கிள்களில் குப்பை அள்ளிச்செல்லும் வகையில் பாடி கட்டியிருத்தல் வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட டிரை சைக்கிள்களை மாநகராட்சியின் பொறியியல் பிரிவினர் சோதனை செய்து ஒப்புதல் அளித்த பின்னரே பணிகளுக்கு பயன்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட டிரை சைக்கிள் உற்பத்தியாளர் கடந்த 2009-10, 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் ஆண்டுக்கு ரூ.30 லட்சத்துக்கு வர்த்தகம் புரிந்திருக்க வேண்டும். இந்த காலங்களில் மாநகராட்சி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 300 டிரை சைக்கிள்கள் சப்ளை செய்திருக்க வேண்டும். அத்தகைய நிறுவனத்தார் இந்த காண்டிராக்ட் டெண்டரில் பங்கேற்கலாம். இந்த டெண் டர்கள் வரும் 31ம் தேதி திறக்கப்படுகின்றன. டெண்டர்கள் இறுதி செய்யப் பட்டு, பெறப்படும் டிரை சைக்கிள்கள் குப்பை அள்ளும் பணிக்கு பயன்படுத்தப்படும். இதனால் பணிகள் துரிதப்படும்.

 


Page 78 of 238