Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க கொம்யூன், நகராட்சிகளில் விளையாட்டு அரங்கம்

Print PDF

தினகரன்     11.08.2012

குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க கொம்யூன், நகராட்சிகளில் விளையாட்டு அரங்கம்

புதுச்சேரி, : குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக பயிற்சி தேவைப்படுவதால் கொம்யூன் மற்றும் நகராட்சிகளில் விளை யாட்டு அரங்கம் அமைக்க உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
 
புதுவை கவுண்டன் பாளையத்தில் குருவாலயா விளையாட்டு பயிற்சி மையம் மற்றும் இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பயிற்சி மையம் மற்றும் அரங்கத்தை திறந்து வைத்தார். விழாவில், அவர் பேசியதாவது:

குழந்தைகளுக்கு விளையாட்டில் அதிக பயிற்சி தேவைப்படுகிறது. இதற்காகத்தான் கொம்யூன் மற்றும் நகராட்சிகள் தோறும் ஒன்று அல்லது 2 விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சித்து வருகி றோம். மாகே, ஏனாம், காரைக்காலில் நல்ல உள்விளையாட்டு அரங்கம் உள்ளது. அதுபோல், சிறப் பான உள்விளையாட்டு அரங்கம் புதுவையில் இல்லை. குளிர்சாதன வசதியுடன் அரங்கம் இப்போது தான் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. எல்லா கிராமத்திலும் முறையான பயிற்சிக்கூடம் தேவை. ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை ஒரே நாடே பெறுகிறது. அதுவும் அது, நம்மைவிட சிறிய நாடாக இருக்கும். ஆகையால், எதையும் தாங்கும் சக்தியை உருவாக்கிக் கொள்ள வேண் டும். படிப்பு, கலை மட்டுமின்றி விளையாட்டுக் கும் முக்கியத்துவம் தர வேண் டும். திறமைகளை வளர்த் துக் கொள்ள வேண்டும். திறமையான வீரர்கள் உருவாக சரியான பயிற்சிக்கூடம் மற்றும் பயிற்சியாளர்கள் தேவை.

இங்கிருந்து பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வெற்றிபெற வேண்டும். ஒலிம்பிக்கிலும் பங்கேற்று சாதித்தால் அது புதுவைக்கு இன்னும் பெருமை சேர்க்கும்.  இவ்வாறு அவர் பேசினார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தியாகராஜன், முதல்வரின் பாராளுமன்ற செயலர் வைத்தியநாதன், அரசு கொறடா நேரு, பாசிக் சேர்மன் அசோக் ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், புதுவை பேட்மிட்டன் சங்க தலைவர் அரவிந்தன், செயலாளர் ஜெகதீசன், பொருளாளர் சிவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Last Updated on Monday, 13 August 2012 06:24
 

கோழிக் கழிவுகளை அகற்ற நவீன உபகரணங்கள்

Print PDF

தினமணி              11.08.2012

கோழிக் கழிவுகளை அகற்ற நவீன உபகரணங்கள்

கீழக்கரை, ஆக. 10: கீழக்கரையில் கோழிக் கழிவுகளை அகற்ற நவீன உபகரணங்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நகர்மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.கீழக்கரையில் கோழிக் கழிவுகளை அகற்ற கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் ரூ. 1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான தள்ளு வண்டிகள், கையுறைக் கழிவுகள், சேகரிக்கும் தொட்டிகள் முதலியன வழங்கப்பட்டன. 

நவீன    உபகரணங்களை நகர்மன்றத்  தலைவர்  ராவியத்துல்  கதரியா வழங்கினார்.நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஹாஜா முகைதீன், நகராட்சி ஆணையாளர் முஜிபுர்ரஹ்மான், எக்ஸ்னோரா அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசகர் தணிகாசலம், வெல்ஃபேர் அசோசியேசன் நிர்வாகி அஜிஸ் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

ரூ.55 லட்சம் கட்டட பணிகள் மேயர் திறந்துவைத்தார்

Print PDF

தினகரன்   08.08.2012

ரூ.55 லட்சம் கட்டட பணிகள் மேயர் திறந்துவைத்தார்

கோவை, : கோவையில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டட பணிகளை மேயர் செ.ம.வேலுசாமி திறந்துவைத்தார். கோவை மாநகராட்சி 25வது வார்டு தேவாங்கபேட்டை வீதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.20 லட்சத்தில் 6 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதே வார்டில் புரூக்பாண்ட் ரோடு சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார ஊழியர்களுக்கு ரூ.20 லட்சத்தில் 3 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. 80வது வார்டு ராஜவீதியில் ரூ.15 லட்சத்தில் மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவை, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ மலரவன் தலைமை தாங்கினார். கமிஷனர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார். மேயர் செ.ம.வேலுசாமி புதிய கட்டடங்களை திறந்துவைத்தார்.

விழாவில், துணை கமிகஷனர் சிவராசு, மத்திய மண்டல தலைவர் ஆதிநாராயணன், பணிக்குழு தலைவர் அம்மன் அர்ஜூனன், 25வது வார்டு கவுன்சிலர் ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 82 of 238