Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பூரில் கட்டப்படுகிறது ரூ. 48 கோடி செலவில் நவீன இறைச்சிக் கூடம்

Print PDF

தினகரன்       10.01.2011

பெரம்பூரில் கட்டப்படுகிறது ரூ. 48 கோடி செலவில் நவீன இறைச்சிக் கூடம்

சென்னை, ஜன.10:

சென்னையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன இறைச்சி கூடம் பெரம்பூரில் கட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

சைதாப்பேட்டை, வில்லிவாக்கம் ஆகிய 2 இடங்களில் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் இறைச்சிக் கூடங்கள் கட்டப்பட்டுள்ளது. பெரம்பூரில் உள்ள இறைச்சிக் கூடம் 1903ம் ஆண்டு கட்டப்பட்டது.இதை மாற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன இறைச்சிக் கூடம் கட்டப்படு வருகிறது.

இங்கு ஆய்வகம், பொது கூடம், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள், பதப்படுத்தும் அறைகள், ஆடுகளை நவீன முறையில் வெட்டுவதற்கான தனி அறைகள், மாடுகள் வெட்டுவதற்கு தனி வசதி, வாகன நிறுத்துமிடம் இருக்கும். இறைச்சிக் கூடத்தை சுகாதாரமாக பராமரிக்கும் வகையில், அந்த வளாகத்திலேயே அழகிய பூங்காவும் உருவாக்கப்படுகிறது. 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடியும்.

ரூ. 48 கோடி செலவில் தனியார் மூலம் கட்டுதல், இயக்குதல், ஒப்படைத்தல் முறையில் இது கட்டப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 40 லட்சம் வருவாய் கிடைக்கும்.
 

கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரம்

Print PDF

தினகரன்      07.01.2011

கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரம்

கரூர், ஜன.7:

கரூர் நகராட்சி மிகவும் பழமை வாய்ந்த நகராட்சி யாக செயல்படுகிறது. தற்போது பழமையான கட்டடத்தில் கூட்ட அரங்க மான பெத்தாட்சி ஹால், நகர்மன்ற தலைவர் அறை, ஆணையர் அறை, மேலா ளர் அறை, கணினி அறை, வரி வசூலிப்பு அறை, சுகாதாரத்துறை மற்றும் துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.

கூட்டம் நடை பெறும் அரங்கமான பெத் தாட்சி ஹால் கடந்த 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. 83 வருட பாரம்பரிய பழமை வாய்ந்த இந்த கூட்ட அரங்கில்தான் தற்போதும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

83வருட பாரம்பரியம் மிக்க கரூர் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டடம் நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் கட்ட வேண்டும் எ ன்ற கோரிக்கை இருந்து வந் தது. அக்கோரிக்கை நிறை வேறும் விதமாக தற்போது அனைத்து அலுவலகங்களையும் ஒருங்கிணைத்து கூட்ட மன்றத்துடன் கூடிய புதிய கட்டடம் கரூர் நகராட்சிக்கு கட்டப்படுகிறது. நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள காலியிடத்தில் இந்த புதிய நகராட்சி அலுவலக கட்டடம் ரூ.1.45 கோடியில் கட்டப்படுகிறது. இரண்டு தளங்களுடன் கூடிய இந்த புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் கட்டடப்பணிகள் நிறைவுபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

பெருங்குடியில் ரூ.22 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர்            31.12.2010

பெருங்குடியில் ரூ.22 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவக்கம்

பெருங்குடி : பெருங்குடி பேரூராட்சியில் 22 கோடி ரூபாய் செலவிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் துவங்கியுள்ளன. இரண்டு ஆண்டிற்குள் இப்பணிகள் முடிக்கப்படவுள்ளன. சென்னை நகரை ஒட்டிய பெருங்குடி பேரூராட்சியில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. அங்கு 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். 15 வார்டுகள் உள்ளன. மேம்பால ரயில் திட்டம் வந்த பிறகு அங்கு குடியிருப்புகள் அதிகரித்தன. அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பு சலுகை மூலம் செயல்படுத்தப்பட்டன. பெருங்குடி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஜவகர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. பேரூராட்சிகளின் கமிஷனர், காஞ்சிபுரம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரால் பரிந்துரை செய்யப்பட்டு, பெருங்குடி பேரூராட்சியில் 22 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, டில்லியில் நகர்புற வளர்ச்சித்துறை செயலர் தலைமையில் கூட்டம் நடந்தது. பின், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, பெருங்குடியில் திட்டப் பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. இது குறித்து, பெருங்குடி பேரூராட்சி தலைவர் கந்தன் கூறுகையில்,"பெருங்குடி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முதல்கட்டமாக சி.பி.., காலனி, ராமப்பா நகர் மற்றும் திருமலை நகர் ஆகிய இடங்களில் துவக்கப்பட்டுள்ளன. பெருங்குடி, கந்தன்சாவடி, சீவரம் என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடக்கவுள்ளன. திட்டத்திற்கான செலவில், மத்திய அரசு 35 சதவீதமும் மாநில அரசு 15 சதவீதமும் பேரூராட்சியின் பங்கு 50 சதவீதமும் இருக்கும். பணிக்காலம் 24 மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 2012ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும். இப்பணிகளால் நகர்களில் சாலை தோண்டப்படும். இருப்பினும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.

 


Page 90 of 238