Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

அவனியாபுரத்தில் ரூ.85 கோடியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட்

Print PDF

தினகரன்               23.11.2010

அவனியாபுரத்தில் ரூ.85 கோடியில் புதிய சென்ட்ரல் மார்க்கெட்

மதுரை, நவ. 23: மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகில் ரூ.85 கோடியில் சென்ட்ரல் மார்க்கெட் கட்டுவதற்கு வேளாண் விற்பனை வாரியத்திற்கு 26 ஏக்கர் நிலம் ஒதுக்கி மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இந்த மார்க்கெட்டை அவனியாபுரத்தில் அமைக்க மாநகராட்சி இடம் ஒதுக்கி உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கும் பூ மார்க்கெட்டுக்கும் இடையே மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடம் 26 ஏக்கர் உள்ளது. இதில் தமிழக அரசின் வேளாண் விற்பனை வாரியம் மூலம் ரூ.85 கோடியில் பெரிய அளவில் சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த திட்டம் அவனியாபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

மாட்டுத்தாவணியில் தற்போது ரூ.13 கோடியில் கட்டப்பட்ட சென்ட்ரல் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

எனவே மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திற்கும், பூ மார்க்கெட்டுக்கும் இடையில் புதிதாக சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க தேவை ஏற்படவில்லை. அந்த இடத்தில் மாநகராட்சி, பொதுமக்கள் தேவைக்கு தகுந்த மாதிரி புதிய திட்டம் செயல்படுத்த பரிசீலனையில் உள்ளது.

எனவே சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க வேளாண் விற்பனை வாரியத்திற்கு ஒப்புதல் அளித்து கடந்த பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட மாநகராட்சி தீர்மானம் ரத்து செய்யப்படுகிறது. இந்த இடத்திற்கு பதிலாக அவனியாபுரத்திலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 11ஏக்கர் 40 சென்ட் நிலத்தில் சென்ட்ரல் மார்க்கெட் கட்ட வேளாண் விற்பனை வாரியத்திற்கு 33ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறிய புகார்கள்:

அதிமுக சாலைமுத்து: மாடக்குளம் கண்மாயில் திறக்கப்பட்ட தண்ணீர் முத்துப்பட்டி கண்மாய்க்கு செல்ல முடியாமல் கால்வாயில் நிறைந்துள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

துணை மேயர் மன்னன்:

பொதுப்பணித்துறையினருடன் ஆலோசித்து அனைத்து கால்வாய் ஆக்கிரமிப்பையும் அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கணேசன்:

சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. தெருக்களில் மழை நீர் தேங்குகிறது. உடனே நடவடிக்கை தேவை.

காங்கிரஸ் சிலுவை:

தெருக்களில் மக்கள் நடக்க முடியாத அளவுக்கு சாலைகள் படுமோசமாக உள்ளன. உடனடியாக பேட்ச ஒர்க் பார்த்து சீர்படுத்த வேண்டும். கொசு ஒழிப்பு மருந்து 2 மாதமாக அடிக்கவில்லை. உடனே அடிக்க வேண்டும்.

மேற்கு மண்டல தலைவர் நாகராஜன்:

பைபாஸ் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளதை மக்கள் வரவேற்கிறார்கள். எல்லீஸ்நகரில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. வடிய செய்ய மாநகராட்சி நடவடிக்கை தேவை.

திமுக கவுன்சிலர் தம்பித்துரை:

எல்லீஸ்நகர் 70 அடி சாலையில் அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அங்கு நடமாடும் கழிப்பறை வாகனத்தை நிறுத்த வேண்டும்.

காங்கிரஸ் கவுன்சிலர் ரெங்கம்மாள்:

என்னை மக்கள் பணியாற்ற விடாமல், எனது வார்டிலுள்ள ஒருவர் வெட்டுவேன், குத்துவேன் என தொடர்ந்து மிரட்டுகிறார். எனக்கு பாதுகாப்பு தேவை.

இவ்வாறு விவாதம் நடந்தது.

 

அனைத்து வசதிகளுடன் வேலூர் பாலாற்றங்கரையில் ரூ1 கோடியில் நவீன எரிமேடை

Print PDF

தினகரன்                22.11.2010

அனைத்து வசதிகளுடன் வேலூர் பாலாற்றங்கரையில் ரூ1 கோடியில் நவீன எரிமேடை

வேலூர்,நவ.22: வேலூர் பாலாற்றங்கரையில் தியான மண்டபம் உட்பட அனைத்து வசதிகளுடன் ரூ1 கோடியில் கட்டப்பட்டுள்ள நவீன எரிமேடை விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

வேலூர் பாலாற்றங்கரையில் மாநகராட்சிக்கு சொந்தமான மயான தகனமேடை இருந்து வந்தது. விறகுகளால் எரியூட்டும்போது ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை போக்கும் வகையில், நவீன எரிமேடை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி மாநில அரசு மற்றும் மாநகராட்சி சேர்ந்து ரூ46 லட்சம் செலவில் நவீன எரிமேடை அமைப்பதற்கான பணிகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. அனைத்து பணிகளும் 6 மாதத்தில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் காண்டிராக்டர் பணிகளை விட்டு சென்றதால் கட்டிட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து பல கட்டங்களாக கூடுதல் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி சுற்றுசுவருடன் கூடிய நவீன எரிமேடை, தியான மேடை ஆகியவற்றுடன் கூடுதலாக ஒரு அறை, குளியலறை மற்றும் கழிவறை, சிற்பங்களுடன் கூடிய முன்மண்டபம் என இப்போது சுமார் ரூ1 கோடி மதிப்புள்ள கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எரிமேடையின் முன்பு நீரூற்றுடன் கூடிய அழகிய பூங்காவும் அமைக்கப்பட உள்ளது. மொத்தத்தில் 90 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. நவீன எரிமேடையில் விறகு கட்டைகளை எரித்து அதில் இருந்து கிடைக்கும் காஸ் பயன்படுத்தி எரியூட்டப்பட உள்ளது.

இதற்கான காஸ் பர்னர் மற்றும் மோட்டார் ஆகியவையும் வந்து விட்டது. அவற்றை பொருத்தி சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. இந்த மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் நவீன எரிமேடையை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

பாதாளச் சாக்கடை திட்டம் துரிதப்படுத்த ஆலோசனை

Print PDF

தினமலர்              20.11.2010

பாதாளச்  சாக்கடை திட்டம் துரிதப்படுத்த ஆலோசனை

கோவை : பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பான அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் வெங்கடாசலம் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், பாதாளச் சாக்கடை திட்டத்தை மேம்படுத்துவது, பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து மேயர் வெங்கடாசலம் கூறியதாவது:பாதாளச் சாக்கடை திட்டத்தை மேம்படுத்துவது மற்றும் துரிதப்படுத்துவது குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில், பாதாளச்சாக்கடை திட்டத்தில் உள்ள குறைகள், அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத விதத்தில் பணிகளை மேற்கொள்வது; அனைத்துப்பகுதிகளிலும் ஒரே சமயத்தில் பணிகளை மேற்கொண்டால், இடையூறு ஏற்படும் என்பதால், பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொரு இடமாக பணிகளைச் செய்வது; பணிகளை துவங்கி துரிதமாக முடிப்பதற்கான ஆயத்தம் செய்வது; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பாதாளச்சாக்கடை கட்டுமானப் பணி மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.குழி தோண்டும் போது, குவிக்கப்படும் மண்ணை, காலியாக உள்ள தனியார் "சைட்'களில் குவித்து வைத்து, "விரைவில் அப்புறப்படுத்தப்படும்' என தகவல் பலகையை அங்கு வைப்பது; சேறும் சகதியுமான இடங்களில், சேறை அப்புறப்படுத்திவிட்டு, கிணத்துமண் போட்டு சமப்படுத்துவது உள்ளிட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன, என்றார்.

 


Page 99 of 238