Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தானேயில் நவீன சுரங்கப்பாதை வரும் டிசம்பர் மாதம் திறப்பு

Print PDF

தினகரன் 16.11.2010

தானேயில் நவீன சுரங்கப்பாதை வரும் டிசம்பர் மாதம் திறப்பு

தானே, நவ. 16: தானேயில் கட்டப்பட்டு வரும் நவீன சுரங்கப்பாதை வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படுகிறது. தானேயில் வாகன போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக நிதின் சந்திப்பு பகுதி விளங்குகிறது. இதனால் இங்கு பாதசாரிகள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு இங்கு மாநகராட்சி சார்பில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இந்தப் பணி நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. இது பற்றி தானே மாநகராட்சி இன்ஜினியர் கே.டி.லாலா கூறியதாவது:

சுரங்கப் பாதையில் இன்னும் 17 மீட்டர் அளவுக்கே பணிகளை முடிக்க வேண்டிய பாக்கியுள்ளது. இந்த பணி நடப்பு மாத இறுதியில் முடிந்து விடும். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த சுரங்கப்பாதையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற சுரங்கப் பாதைகள் போல் இல்லாமல் இந்த சுரங்கப்பாதை நவீனமாக அமைக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றவர்கள் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு செல்ல இதில் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வருவாய் ஈட்டும் திட்டத்தின் கீழ் விளம்பரங்களையும் இந்த சுரங்கப்பாதையில் செய்து கொள்ளலாம். சுமார் 4.5 கோடி செலவில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதை திறக்கப்பட்டதும் பாதசாரிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்

 

முக்கியமான ஸ்டேஷன்களில் 10 புதிய நடைபாதை மேம்பாலம்

Print PDF

தினகரன்                 16.11.2010

முக்கியமான ஸ்டேஷன்களில் 10 புதிய நடைபாதை மேம்பாலம்

மும்பை, நவ.16: ரயில் பயணிகள் தண்டவாளங்களின் குறுக்கே நடந்து செல்வதை தடுப்பதற்காக முக்கியமான ரயில் நிலையங்களில் 10 புதிய நடைபாதை மேம்பால ங்களை கட்ட மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

தினசரி சுமார் 33 லட்சம் ரயில் பயணிகள் மத்திய ரயில்வே சர்வீஸ்களை பயன்படுத்தி வருகிறார்கள். அவர்கள் தண்டவாளங்களை கடந்து செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிரி ழக்கின்றனர். எனவே, கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள ரயில் நிலையங்களில் ரூ.10 கோடி செலவில் 10 புதிய நடைபாதை மேம்பாலங்களை கட்ட மத்திய ரயில்வே முடிவு செய்திருக்கிறது.

பரேல், வித்யவிஹார், திலக் நகர், கல்வா, திவா, அம்பர்நாத், பன்வேல், கோபர் மற்றும் கல்யாண் ஆகிய ரயில் நிலையங்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தானே ரயில் நிலையத்தில் கூடுதலாக இரண்டு நடைபாதை மேம்பாலங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு மேம்பாலம் 12 மீட்டர் அகலம் கொண்டதாக இருக்கும். கூட்டம் அதிகமாக உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் தற்போதுள்ள நடைபாதை மேம்பாலங்களில் அதிக அளவில் நெரிசல் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்ததை அடுத்து தானேயில் புதிதாக இரண்டு மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.

ரயில் நிலையங்களில் 10 புதிய நடைபாதை மேம்பாலங்களை கட்டுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் அடுத்த ஆண்டில் இந்த பாலங்கள் தயாராகி விடும் என்றும் அதிகாரிகள் கூறினர். ரயில் நிலையங்களில் இருந்து வெளியே வரும் பயணிகள் கூட்டம் சிரமமின்றி பல்வேறு சாலைகளுக்கும் பிரிந்து செல்வதற்கு வசதியாக மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் ஏராளமான ஆகாய நடைபாதைகளை கட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இடலாக்குடி வெள்ளாளர் தெருவில் ரூ3 லட்சத்தில் சமுதாய கூடம் ராஜன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

Print PDF

தினகரன்                  15.11.2010

இடலாக்குடி வெள்ளாளர் தெருவில் ரூ3 லட்சத்தில் சமுதாய கூடம் ராஜன் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்

நாகர்கோவில், நவ. 15: நாகர்கோவில் நகராட்சி 19வது வார்டு பகுதியில் இடலாக்குடி வெள்ளாளர்தெரு உள்ளது. இங்கு சமுதாய நல கூடம் கட்டி தரவேண்டும் என கவுன்சிலர் பியாசாஹாஜிபாபு தலைமையில் அப்பகுதி மக்கள் ராஜன் எம்.எல்.ஏவிடம் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற ராஜன் எம்.எல்.ஏ சமுதாய நலக்கூடம் கட்ட தனது சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ3 லட்சம் ஒதுக்கினார்.

இதை தொடர்ந்து சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று இடலாக்குடி வெள்ளாளர் தெருவில் நடந்தது.

விழாவிற்கு ஊர் நிர்வாகி மகாதேவன்பிள்ளை தலைமை வகித்தார். கவுன்சிலர் பியாசாஹாஜிபாபு முன்னிலை வகித்தார். 10வது வட்ட திமுக செயலாளர் ஹாஜிபாபு வரவேற்றார். ராஜன் எம்.எல்.ஏ அடிக்கல்நாட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் அருள்ராஜ், பாவலர் சித்திக், அப்துல்காதர், ஊர் தலைவர் சிவன்பிள்ளை, செயலாளர் இளங்கோவன், பொருளாளர் வீரமணி, முன்னாள் நிர்வாகிகள் பழனி, ராஜூ, மற்றும் ஜபகர்சாதிக், யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 103 of 238