Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மின்மயானம் ஏற்படுத்தும் முதல் பேரூராட்சி

Print PDF

தினமணி                       03.11.2010

மின்மயானம் ஏற்படுத்தும் முதல் பேரூராட்சி

மேட்டுப்பாளையம், நவ. 2: சிறுமுகை பேரூராட்சி சார்பில் ரூ. 1.25 கோடி மதிப்பில் மின்மயான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இத்திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் செயல்படுத்தும் முதல் பேரூராட்சி என்ற பெயரை சிறுமுகை பேரூராட்சி பெற்றுள்ளது.

இத்திட்ட கட்டுமானப் பணிக்கான மாதிரி வரைபடத்தை பேரூராட்சித் தலைவர் உதயகுமார் மற்றும் செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்டனர். கோவை மாவட்டம், சிறுமுகை பேரூராட்சிக்கு உட்பட்ட 10வது வார்டு ஜீவா நகரில் சுமார் 2 ஏக்கரில் உள்ள மயானத்தை சிறுமுகை மற்றும் சுற்றுப்புற கிராமமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, சிறுமுகை பேரூராட்சி சார்பில் மின்மயானம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் கட்டமாக, இதற்கான திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் உமாநாத் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இதற்கென ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து மக்கள் பங்களிப்புடன் மின்மயான திட்டத்தை செயல்படுத்த சிறுமுகை பேரூராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அமைச்சர் ராசா பரிந்துரையின்பேரில் ரூ. 21 லட்சம், தனியார், பொதுமக்கள் பங்களிப்பின் மூலம் ரூ. 64.50 லட்சம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ. 76 லட்சத்தில் மின்மயான கட்டடமும், ரூ. 40 லட்சம் செலவில் சுற்றுப்புற பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதற்கென பேரூராட்சித் தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் கண்காணிப்பாளர் முத்துசாமி மற்றும் கவுன்சிலர்கள் அடங்கிய குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, திருப்பூர் உட்பட பல பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மின்மயான திட்டங்களை பார்வையிட்டது. அதன் அடிப்படையில் ரூ. 1.25 கோடி மதிப்பில் சிறுமுகையில் மின்மயான திட்டம் அமைக்கப்பட்டு, மத்திய அமைச்சர் ராசா மின்மயான திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.

Last Updated on Thursday, 04 November 2010 04:13
 

பாதாள சாக்கடைத் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை

Print PDF

தினமணி                 03.11.2010

பாதாள சாக்கடைத் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை

செங்கல்பட்டு, நவ. 2: செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத்தின் சார்பில் நகர வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டம், லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு நகரை குப்பையில்லாத நகரமாக்க வேண்டும். நாள்தோறும் எல்லாப் பகுதிக்கும் குடிநீர் சீராகவும், சுகாதாரமாகவும் வழங்கவும், தெருவிளக்குகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

பாதாள சாக்கடைத் திட்டத்தை துரிதப்படுத்த தீர்மானம் நிறைவேற்றவும், மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் அமைந்துள்ள பஸ் பணிமனையை போக்குவரத்து இடையூறு கருதி மாற்று இடம் தேர்ந்தெடுத்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

நகராட்சி தொடர்ந்துள்ள மற்றும் நகராட்சிக்கு எதிராக தொடர்ந்துள்ள பலவழக்குகள் நிலுவையில் உள்ளன.

சரியான வழக்கறிஞரை நகராட்சி உடனடியாக நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும்படி செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத்தின் கடந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் அளித்த வேண்டுகோள் குறித்து பேசப்பட்டது.

செங்கல்பட்டு நகர வளர்ச்சி மன்றத் தலைவர் அரிமா முருகப்பா தலைமை வகித்தார். செயலர் ஏஜிடி துரைராஜ், அமைப்புச் செயலர் ராஜீ, துணைச் செயலர் சிவகுமார், லட்சுமி அம்மாள் கல்வியியல் கல்லூரி நிறுவனர் டாக்டர் ராமமூரத்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Last Updated on Thursday, 04 November 2010 04:13
 

கி.கிரியில் ரூ.33 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணி துவக்கம்

Print PDF

தினமலர்              03.11.2010

கி.கிரியில் ரூ.33 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணி துவக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 33 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் துவங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன்படி கிருஷ்ணகிரி நகரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக முதலில் 18 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

தற்போதைய நிலவரபடி பாதாள சாக்கடை திட்டத்திற்காக சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கான மதிப்பீடு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த 33 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தேவசமுத்திரம் ஏரியில் 7 கோடியே 2 லட்ச ரூபாய் மதிப்பில் சுத்தகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. நகரில் உள்ள 33 வார்டுகளில் ஒரே கட்டமாக பணிகள் செய்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் பணிகளை துவக்கினால் குடிநீர் விநியோகம், டெலிஃபோன் சேவை மற்றம் போக்குவரத்து வசதி முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உருவானது. இதனை போக்க ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பணிகளை ஒன்னரை ஆண்டுகளுக்குள் முடிக்க நகராட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்கான துவக்க விழா நடந்தது. எம்.எல்.., செங்குட்டுவன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பரிதநவாப், கமிஷனர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நவாப், எம்.எல்..,நரசிம்மன், வேப்பனப்பள்ளி யூனியன் சேர்மேன் முருகன், பர்கூர் யூனியன் சேர்மேன் ராஜேந்திரன். நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 04 November 2010 04:13
 


Page 108 of 238