Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே கீழ்பாலம்: பூமிபூஜையுடன் தொடங்கியது

Print PDF

தினமணி                   01.11.2010

ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே கீழ்பாலம்: பூமிபூஜையுடன் தொடங்கியது

ஒட்டன்சத்திரம், அக். 31: ஒட்டன்சத்திரத்தில் ரயில்வே கீழ்பாலம் அமைக்க பூமிபூஜை நடைபெற்று, பணிகள் தொடங்கியது.

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்திநகர், விஸ்வநாத நகர், வினோபா நகர், திடீர் நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நகருக்குள் வரவேண்டுமென்றால், ரயில்வே பாதையை கடந்து வரவேண்டும். ஆனால், தற்போது திண்டுக்கல்-கொச்சி இடையேயான ரயில்வே பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், ஒரு பக்கம் பாதை அடைக்கப்பட்டுவிட்டது. இதனால், அப்பகுதி மக்கள் நகருக்குள் வந்து செல்ல மிகவும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், கீழ்பாலம் அமைக்க வேண்டும் என்று, அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில், இவர்கள் இருவர் மேற்கொண்ட முயற்சியில், அப்பகுதியில் கீழ்பாலம் அமைக்க புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டு, பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா அர. சக்கரபாணி, மக்களவை உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தன், நகராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி கண்ணன், துணைத் தலைவர் வனிதா ஆறுமுகம், நகராட்சி ஆணையர் மூர்த்தி மற்றும் நகராட்சி கவுன்சிலர் கே. சுப்பிரமணி, சின்னம்மாள் கோபால் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

ஈரோட்டில் பூ மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம்

Print PDF

தினமலர்             01.11.2010

ஈரோட்டில் பூ மார்க்கெட் அமைக்கும் பணி தீவிரம்

ஈரோடு: ஈரோடு சின்ன மார்க்கெட்டில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் பூ மார்க்கெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு, சத்தி, அந்தியூர், பருவாச்சி உள்ளிட்ட பல இடங்களில் மல்லிகை பூக்களும், ஊட்டி, கொடைக்கானல், ஒசூர் உள்ளிட்ட பல இடங்களில் ரோஜா உட்பட பல்வேறு பூ வகைகளும் அறுவடை செய்யப்படுகின்றன. மல்லிகை பூக்களை பொருத்தவரை சத்தி, வெள்ளோடு ஆகிய இடங்களிலிருந்து பூக்கள் வரத்தாகின்றன.ஈரோட்டில் உள்ள தனியார் பூ கமிஷன் மண்டி உரிமையாளர்கள் பூக்களை மொத்தமாக வாங்கி, விற்பனை செய்கின்றனர். ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்துக்கு கட்டுப்பட்ட நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் மற்றும் சின்ன மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை செய்வதற்கென தனியாக பூ மார்க்கெட் இல்லை.சென்ற 2006ல் ஈரோட்டில் தனியாக பூ மார்க்கெட் அமைக்க வேண்டும் என அப்போதைய நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில், ஈரோடு அகில்மேடு வீதியில் சின்ன மார்க்கெட்டின் ஒரு பகுதியில் பூ மார்க்கெட்டுக்கு "ஷெட்' அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் துவக்கப்பட்ட "ஷெட்' அமைக்கும் பணிக்கு, மூன்று லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 800 சதுர அடி பரப்பளவில் நடந்து வரும் "ஷெட்' அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் திறப்பு விழா நடக்கும் என தெரிகிறது.ஈரோட்டில் அமையவுள்ள பூ மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால், "ஷெட்' அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

பேரூராட்சியில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரம்

Print PDF

தினமலர்            01.11.2010

பேரூராட்சியில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சியில் 32 லட்சம் ரூபாயில் புதிய அலுவலகம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. ஜமீன்ஊத்துக்குளி பேரூராட்சி அலுவலக கட்டடம் பழுதடைந்து, மழைக்கு ஒழுகுகிறது. பழைய அலுவலக கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது. கவுன்சில் கூட்டம், அலுவலக பயன்பாட்டிற்கு பழைய கட்டடம் போதுமானதாக இல்லாததால், புதிதாக அலுவலக கட்டடம் கட்டுவதற்கு தீர்மானம் செய்யப்பட்டது. பேரூராட்சி அலுவலக நுழைவாயிலில் அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கு, பகுதி- 2 திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாயும், பொது நிதியில் 8 லட்சம் ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. அலுவலகம் முன்பாக பூங்காவும், வெளிப்பகுதியில் கழிப்பிடமும் கட்ட மேலும் 8 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 28 லட்சம் ரூபாயில் புதிய பொழிவுடன் அலுவலக கட்டடம் கட்டப்படுகிறது. பேரூராட்சி செயல்அலுவலர் நாகமுத்து கூறுகையில், ""புதிய கட்டட பணிகள் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவு பெறும். புதிய அலுவலகம் கட்டடம் திறக்கப்பட்டதும், அலுவலகம் இடமாற்றம் செய்யப்படும். கவுன்சில் கூட்டமும் புதிய கட்டடத்தில் நடத்தப்படும். பழைய அலுவலக கட்டடம் ஆவண இருப்பு அறையாக பயன்படுத்தப்படும்'' என்றார்.

 


Page 110 of 238