Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கோடம்பாக்கம் மேம்பாலம் பலப்படுத்தும் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 22.10.2010

கோடம்பாக்கம் மேம்பாலம் பலப்படுத்தும் பணி துவக்கம்

சென்னை : கோடம்பாக்கம் மேம்பாலம் நான்கு கோடியே 74 லட்ச ரூபாய் செலவில், பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி, நேற்று மேற்கொள்ளப்பட்டது.நகரில் உள்ள பழைய மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகளை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.திரு.வி.., பாலம், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, சென்ட்ரல் ஸ்டான்லி மேம்பாலம் போன்ற பல மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் பலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதுபோல், 1965ம் ஆண்டு கட்டப்பட்ட கோடம்பாக்கம் மேம்பாலம் நான்கு கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பில், பலப்படுத்தி அழகுபடுத்தும் பணி நேற்று தொடங்கியது.பணியை தொடங்கி வைத்து மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:கடந்த 45 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கோடம்பாக்கம் மேம்பாலத்தில் தூண்கள், சுவர்கள் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.இந்த பாலத்தை வலிமைப்படுத்தி, அழகுபடுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அழகுபடுத்தும் பணி 12 மாதங்களில் முடிக்கப்படும்.மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் கலைநயம் மிக்க அழகிய ஓவியங்கள் வரையப்படும். சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஆறு மேம்பாலங்கள், ஒரு சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.மேலும், 10 இடங்களில் சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் கட்டும் பணி நடக்கிறது.அத்துடன் பழைய மேம்பாலங்களையும், சுரங்கப் பாதைகளையும் பலப்படுத்தி அழகுபடுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் துணை கமிஷனர் (பணிகள்) தரேஷ் அகமது, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

அரியலூரில் ரூ.27.50 கோடியில் பாதாள சாக்கடை

Print PDF
தினமலர் 21.10.2010

அரியலூரில் ரூ.27.50 கோடியில் பாதாள சாக்கடை

அரியலூர்: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அரசின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 8,515 குடிசை வீடு கான்கிரீட் வீடுகளாக மாற்றப்பட உள்ளன. அரியலூர் யூனியனில் 1,085 வீடுகளும், திருமானூர் யூனியனில் 1,357 வீடுகளும், செந்துறை யூனியனில் 890 வீடுகளும், ஜெயங்கொண்டம் யூனியனில் 1,575 வீடுகளும், ஆண்டிமடம் யூனியனில் 1,829 வீடுகளும், டி.பழூர் யூனியனில் 1,779 வீடுகளும் இத்திட்டத்தின் கீழ் குடிசை வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கான்கிரீட் வீடுகளாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக ஜெயங்கொண்டம் யூனியன் துளாரங்குறிச்சி பஞ்சாயத்து சூரியமணல் கிராமத்தில் கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் மருதம்பாள் என்ற பயனாளி தனது குடிசை வீட்டை கான்கிரீட் வீடா மாற்றம் செய்துள்ளார்.

இந்த வீட்டை மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராசா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அரியலூர் பஸ் ஸ்டாண்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் நடக்கவுள்ள உள்கட்டமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டி 12 மாற்றுத்திறனாளிக்கு 4,000 ரூபாய் மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி மற்றும் சோலார் சார்ஜரும் வழங்கினார்.மத்திய அமைச்சர் ராசா பேசியதாவது:அரியலூர் நகராட்சியில் அடிப்படை உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் திட்டத்தில் 70 லட்சம் ரூபாய் மானியம், நகராட்சி பொது நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாயும் சேர்த்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சிமெண்ட் தளம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்படுகிறது.அரியலூர் மாவட்டத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து வருகை புரியும் மக்களின் வசதிக்காக அரியலூர் பஸ் ஸ்டாண்ட் மேம்படுத்தப்படுகிறது. அரியலூரில் 27.50 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்டமும் தொடங்கப்படுகிறது. இதனால் 10ஆயிரத்து 400 குடியிருப்புவாசிகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி, டி.ஆர்.ஓ., பிச்சை, எம்.எல்.ஏ.,க்கள் பாளை அமரமூர்த்தி (அரியலூர்), சிவசங்கர் (ஆண்டிமடம்), ராஜேந்திரன் (ஜெயங்கொண்டம்), நகராட்சி தலைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

குற்றாலத்தில் ரூ.85 லட்சத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் துவக்கம்

Print PDF

தினமலர் 21.10.2010

குற்றாலத்தில் ரூ.85 லட்சத்தில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் துவக்கம்

தென்காசி : குற்றாலத்தில் சுற்றுலா வளர்ச்சி திட்டத்தில் 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட கலெக்டர் ஜெயராமன், தென்காசி எம்.எல்..கருப்பசாமி பாண்டியன் திறந்து வைத்தனர். குற்றாலம் டவுன் பஞ்.,பகுதியில் மத்திய சுற்றுலா வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டவுன் பஞ்.,அலுவலகம் அருகே சுற்றுலா வரவேற்பு மையம் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. ஐந்தருவி பகுதியில் சுற்றுலா வரவேற்பு மையம் 13 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. வைரம்ஸ் நகரில் 7 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய பூங்கா அமைக்கப்பட்டது. புலியருவியில் 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. சிறுவர் பூங்கா 14 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் செலவிலும், விஸ்வநாதராவ் பூங்கா 18 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்பட்டது.

இவற்றின் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தென்காசி எம்.எல்.. கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் ரேவதி, துணைத் தலைவர் ராமையா, நிர்வாக அதிகாரி ராசையா முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் ஜெயராமன் சுற்றுலா வரவேற்பு மையம், பூங்கா, நவீன கழிப்பிட கட்டடத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தென்காசி ஆர்.டி..சேதுராமன், டி.எஸ்.பி.ஸ்டாலின், சுற்றுலா அலுவலர், மாவட்ட கவுன்சிலர்கள் இசக்கி பாண்டியன், பரமசிவன், நகராட்சி சேர்மன்கள் தென்காசி கோமதிநாயகம், செங்கோட்டை ரகீம், தென்காசி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி, கல்லிடைக்குறிச்சி இசக்கி பாண்டியன், தென்காசி நகர தி.மு..செயலாளர் நடராஜன், மாவட்ட பிரதிநிதி பாலாமணி, குற்றாலம் டவுன் பஞ்.,பணி மேற்பார்வையாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 115 of 238