Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.18 லட்சத்தில் நவீன நகராட்சி கூடம்

Print PDF

தினமலர் 19.10.2010

ரூ.18 லட்சத்தில் நவீன நகராட்சி கூடம்

அனகாபுத்தூர் : அனகாபுத்தூர் நகராட்சியில், மாதாந்திர கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கம், 18 லட்ச ரூபாய் செலவில், "ஏசி' வசதியுடன் ஜொலிக்கிறது.அனகாபுத்தூர் நகராட்சிக்கு, 50 லட்ச ரூபாய் செலவில் புதிய நகராட்சி அலுவலக கட்டடம் சமீபத்தில் கட்டப்பட்டது. இதன் முதல் தளத்தில் மாதாந்திர நகராட்சி கூட்டம் நடக்கும் கூட்ட அரங்கம், குளுகுளு வசதியுடன், ஸ்டார் ஓட்டலில் இருக்கும் கூட்ட அரங்கத்தை போல, 18 லட்ச ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.வண்ண விளக்குகள், அழகிய பால்சீலிங் வேலைகள், சுவர்களில் ஓவியங்கள், வட்டவடிவிலான டீக் உட் மேஜைகள், ஜன்னல் களுக்கு அலங்கார திரைகள் என, பல்வேறு அம்சங்களும் இந்த அரங்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன.இந்த நகராட்சி கூடத்தை, மாதாந்திர கூட்டத்திற்கு மட்டுமல்லாமல், நகராட்சிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களுக்கும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

நகராட்சி பள்ளிக்கு: ரூ.ஒரு கோடியில் பிரமாண்ட கட்டடம்

Print PDF

தினமலர் 19.10.2010

நகராட்சி பள்ளிக்கு: ரூ.ஒரு கோடியில் பிரமாண்ட கட்டடம்

ஆலந்தூர் : ஆதம்பாக்கத்தில் தனியார் பள்ளிக்கு நிகராக பிரமாண்டமாக ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஒரு கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
ஆதம்பாக்கம், கருணீகர் தெருவில் 70 ஆண்டுகளாக ஓடுகளால் அமைந்த ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கியது.இங்கு 800 மாணவ, மாணவியர் வரை பயின்றனர். முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இரண்டு பிரிவுகளாகவும், ஆறாவது முதல் 8ம் வகுப்பு வரை மூன்று பிரிவுகளாகவும் இப்பள்ளி இயங்குகிறது.இப்பள்ளிக் கட்டடம் பாழடைந்ததால், தற்காலிகமாக ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் உள்ள ஒரு குறுகிய இடத்தில் செயல்படுகிறது.இந்நிலையில், புதிதாக பள்ளி கட்டடம் கட்டுவதற்கு ஆலந்தூர் நகராட்சி கல்வி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 1,362 சதுரடி நிலப்பரப்பில் கிழக்கு, மேற்கு என இரண்டு பிளாக்குகளிலும் 16 வகுப்பறைகள் கட்டப்பட்டன.இது தவிர பரிசோதனைக் கூடம், கூட்டரங்கம், நவீன கழிப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஊழியர்கள் அறை மற்றும் நாற்காலி, டேபிள்கள், மின்விசிறி, குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டப்பட்டது.தனியார் பள்ளிகளுக்கு நிக ராக புதிதாக கட்டிய ஆலந்தூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி வகுப்பறைகள் ஒவ்வொன்றும் பரந்து விரிந்துள்ளன.ஒரு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட நடுநிலைப் பள்ளியை சமீபத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.

 

திண்டிவனம் நகராட்சிக்கு ரூ 25 லட்சம் மதிப்பில் வேன், குப்பை தொட்டிகள் துப்புரவு அலுவலர்களிடம் ஒப்படைப்பு

Print PDF
தினகரன் 18.10.2010

திண்டிவனம் நகராட்சிக்கு ரூ 25 லட்சம் மதிப்பில் வேன், குப்பை தொட்டிகள் துப்புரவு அலுவலர்களிடம் ஒப்படைப்பு

திண்டிவனம், அக். 18: திண்டிவனம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வார்டில் உள்ள குப்பைகளை ஒரே இடத்தில் போட ஏதுவாக நகராட்சி சார்பில் வார்டுக்கு ஒரு குப்பைத் தொட்டி வீதம் 33 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இவைகளை லாரிகள் மூலம் சலவாதி சாலையில் உள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்கும் குப்பையில் இருந்து சுமார் 40 நாட்களில் உரம் தயாரிக்கின்றனர். இந்த குப்பைகளை பிரிக்க ஆட்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். மேலும் நேரமும் வீணாகிறது.

இதனால் ஒவ்வொரு வார்டிலும் கூடுதலாக ஒரு குப்பைத் தொட்டி வைக்க முடிவு செய்யப்பட்டது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என வைத்துவிட்டால் மக்கள் அதில் பிரித்து போட்டு விடுவர். இதனால் பிரிக்க ஏதுவாக இருக்கும்.

இதையொட்டி திடக்கழிவு மேலாண்மை 2008&2009 திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கூடுதலாக ஒரு வேன், 25 டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகள் வாங்கப்பட்டு திண்டிவனம் நகராட்சிக்கு கொண்டு வரப்பட்டது.

இதையொட்டி புதிதாக வாங்கப்பட்ட வேன், 25 டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகளை துப்பரவு அலுவலர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டிவனம் நகர மன்ற தலைவர் பூபாலன் தலைமை வகித்து, புதிய வேனுக்கான சாவியை துப்புரவு அலுவலர் பாலசந்திரனிடம் ஒப்படைத்தார். மேலும் அந்தந்த வார்டுகளுக்கான டம்பர் பிளேசர் குப்பை தொட்டிகளையும் வழங்கினார்.

இதில் துப்புரவு ஆய்வாளர் ராஜரத்தினம், நகர மன்ற உறுப்பினர்கள் முரளிதாஸ், முருகன், ஜெயராஜ், ஜெயக்குமார், மற்றும் மேற்பார்வையாளர்கள், வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்ட னர். திண்டிவனம் நகராட்சி சார்பில் ரூ25 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட புதிய வேன் மற்றும் குப்பைத் தொட்டிகளை நகர் மன்ற தலைவர் பூபாலன் துப்புரவு அலுவலர் பாலசந்திரனிடம் ஒப்படைத்தார்.

Last Updated on Monday, 18 October 2010 10:42
 


Page 119 of 238