Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

2.51 லட்சம் குப்பை கூடை வாங்க மாநகராட்சியில் டெண்டர் திறப்பு

Print PDF
 தினகரன் 18.10.2010

2.51 லட்சம் குப்பை கூடை வாங்க மாநகராட்சியில் டெண்டர் திறப்பு

 கோவை, அக்.18: கோவை மாநகராட்சியில் இலவசமாக 2.51 லட்சம் குப்பை கூடை வழங்க டெண்டர் திறக்கப்பட்டது. கோவை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் 93.50 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து போடுவதற்காக மாநகர் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக குப்பை கூடை வழங்க திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 4.58 லட்சம் குப்பை கூடை பெறப்பட்டது. அனைத்து குப்பை கூடைகளும் வீடு, வீடாக இலவசமாக வழங்கப்பட்டது. வெள்ளை, பச்சை நிறத்தில் உள்ள இந்த குப்பை கூடையில் குப்பை குவிக்கலாம். வெள்ளை நிற குப்பை கூடையில் மக்காத பிளாஸ்டிக், பீங்கான், கண்ணாடி பொருட்களை கொட்டலாம், பச்சை நிற குப்பை தொட்டியில் மக்குள் குப்பை கொட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.

குப்பை கூடைகள், போதுமானதாக இல்லை. வீடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மீண்டும் ஆய்வு செய்து அனைத்து வீடுகளுக்கும் குப்பை கூடை இலவசமாக வழங்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதற்கேற்ப மாநகராட்சி சார்பில் இ டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, மேற் பார்வை பொறியாளர் பூபதி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது. டெண்டரில், புதுடெல்லியை சேர்ந்த பிரபுதயாள் நிறு வனம், குஜராத்தை சேர்ந்த சின்டெக்ஸ் நிறுவனம் பங்கேற்றது. இதில் சின்டெக்ஸ் நிறுவனத்தின் டெண்டர் தொகை குறைவாக இருந்தது. இந்த டெண்டரை மாநகராட்சி அதிகாரிகள் நிபந்தனையுடன் ஏற்றனர். 1.30 கோடி ரூபாய் செலவில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 715 குப்பை கூடை என இரு ஜோடி (வெள்ளை, பச்சை நிறத்தில்) பெறப்படும். அதாவது 2 லட்சத்து 51 ஆயிரத்து 430 குப்பை கூடை வாங்கப்படும்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், " பச்சை நிற குப்பை கூடை விலை 56 ரூபாய், வெள்ளை நிற குப்பை கூடை விலை 58 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இம்முறை மூடி இன்றி குப்பை கூடை பெறப்படுகிறது. சுகாதார குழு மற்றும் வரும் மன்ற கூட்டத்தில் இலவச குப்பை கூடை தீர்மானம் கொண்டு வரப்படும். அதற்கு பின்னர் உடனடியாக குப்பை கூடை பெறப்படும்," என்றனர்.

 

பயன்பாட்டிற்கு வந்த வால்பாறை நகராட்சி பூங்கா

Print PDF

தினமலர் 15.10.2010

பயன்பாட்டிற்கு வந்த வால்பாறை நகராட்சி பூங்கா

வால்பாறை : வால்பாறை நகராட்சி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது.வால்பாறை நகராட்சி சார்பில் அண்ணாமறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்டு அருகில் "பூங்கா' கட்டப்பட்டது.கடந்த 7ம் தேதி இந்த பூங்காவை அமைச்சர் பழனிச்சாமி, சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் கோவைதங்கம், மாவட்ட கலெக்டர் உமாநாத் ஆகியோர் திறந்து வைத்தனர்.இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் குழந்தைகள் விளையாட தூரி, சறுக்கல் போன்றவையும், கண்களுக்கு குளிச்சியூட்டும் வகையில் பூவாக விரிந்துவரும் நீர்வீழச்சியும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த பூங்காவிற்குள் செல்ல எந்த வித கட்டணமும் இல்லை.

இதனிடையே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்த பூங்காவை வால்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் முதன் முதலாக பார்வையிட்டு, பல மணி நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.திறக்கும் நேரம் அறிவிப்பு இல்லை: வால்பாறை நகராட்சி சார்பில் இந்த பூங்கா திறக்கப்பட்டாலும், பரமரிக்க போதிய ஆள் இது வரை நியமிக்கப்படவில்லை. அதே போல் பூங்கா திறக்கும் நேரம் குறித்து, நகராட்சி நிர்வாகம் இது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் பூங்காவை சுற்றிப்பார்க்க வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.மேலும் எந்த வித கட்டணமும் இல்லை என்பதால், பராமரிக்க ஆள் இல்லை என்பதாலும் பூங்காவின் அழகு மாசுபடும் என்பது தான் உண்மை.

 

அமைச்சர் தகவல் பல்லாவரம் மேம்பாலத்தை 29ல் மு.க.ஸ்டாலின் திறக்கிறார்

Print PDF

தினகரன் 15.10.2010

அமைச்சர் தகவல் பல்லாவரம் மேம்பாலத்தை 29ல் மு..ஸ்டாலின் திறக்கிறார்

ஆலந்தூர், அக். 15: பல்லாவரம் மேம்பாலத்தை வருகிற 29ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்,

பல்லாவரம் நகராட்சி சார்பாக முதியோர் உதவித் தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி வழங்கும் விழா, கீழ்க்கட்டளை பஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் சாட்டர்ஜி தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் இ.கருணாநிதி, மாவட்ட ஊராட்சி தலைவர் துரைசாமி, பரங்கிமலை ஒன்றிய குழு தலைவர் ஏழுமலை, நகராட்சி துணைத் தலைவர் கருணா முன்னிலை வகித்தனர். தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் சவுரிராஜன் வரவேற்றார்.

விழாவில், 510 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 299 பேருக்கு திருமண நிதியுதவி, 849 பேருக்கு மகப்பேறு நிதியுதவி உட்பட ரூ1 கோடியே 22 லட்சத்து 46 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

பல்லாவரம் நகராட்சி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குரோம்பேட்டை ராதா நகரில் குறைந்த மின்னழுத்தத்தை போக்க ரூ8 கோடியில் 11 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், பல்லாவரத்தில் ரூ33 கோடி செலவில் 33 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவு பெறாத பகுதிகளில், விடுபட்ட பகுதிகளில் ரூ13.75 கோடியில் பணிகள் நடைபெற உள்ளது. வரும் 29ம் தேதி பல்லாவரம் மேம்பாலம் திறப்பு விழா நடைபெற உள்ளது. துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ10 கோடி நிதி ஒதுக்கி தந்துள்ளது. எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல்லாவரத்தில் உள்ள 42 வார்டுகளில் ரூ3 கோடியே 62 லட்சத்துக்கு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். பரங்கிமலை உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் வீரமணிகண்டன், நகராட்சி ஆணையர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலா, கவுன்சிலர்கள் முனுசாமி, சண்முகம், முருகையன், சிவகுமார், ஜெயகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 120 of 238