Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி வணிக வளாக கடைகள் யாருக்கு ஒதுக்கீடு? மேயர் விளக்கம்

Print PDF

தினமணி 14.10.2010

மாநகராட்சி வணிக வளாக கடைகள் யாருக்கு ஒதுக்கீடு? மேயர் விளக்கம்

சென்னை, அக்.13: உண்மையான சாலையோர வியாபாரிகளுக்கு மட்டுமே மாநகராட்சியின் வணிக வளாக கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்று மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் சாலையோர வியாபாரிகளுக்கான வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையம் எதிரிலும், சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரிலும், பூங்கா ரயில் நிலையம் அருகிலும், விக்டோரியா அரங்கத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக அல்லிக்குளம் வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தியாகராய நகரில் உள்ள தியாகராய சாலை, உஸ்மான் சாலை, சிவப்பிரகாசம் சாலை ஆகிய சாலைகளில் உள்ள நடைபாதை வியாபாரிகளுக்கு பாண்டி பஜாரிலும், அயனாவரம் பாலவாயல் மார்க்கெட் சுற்றியுள்ளவர்களுக்கு அதன் அருகிலும், ராயபுரம் மணியக்கார சத்திரத் தெருவில் நடைபாதை வியாபாரிகளுக்கு அந்தப் பகுதியிலும் ஹாக்கர்ஸ் கமிட்டி தலைவர் நீதிபதி ராமமூர்த்தி ஆணைப்படி வணிக வளாகங்கள் கட்டப்பட்டன.

ராயபுரம் மணியக்கார சத்திரத்தெருவில் 117 பேர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில் சில புகார்கள் வந்தன. இதையடுத்து, சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு அலுவலர் மூலம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் நேரிடையாக ஆய்வு செய்யப்பட்டது. இதில் 101 பேர்கள் மட்டுமே உண்மையான பயனாளிகள் என தெரியவந்துள்ளது.

அதேபோல பாண்டி பஜாரில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும் அயனாவரம் பாலவாயல் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்களின் உண்மையான பயனாளிகள் விழிப்புப்பணி அலுவலர் மூலம் அந்தந்த பகுதி வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் ஆய்வு செய்து, பட்டியல் தேர்வு செய்து, ஹாக்கர்ஸ் கமிட்டி நீதிபதி ராமமூர்த்தி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

மீதமுள்ள கடைகள் அவரிடம் அனுமதி பெற்று, திறந்தவெளி ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும். சென்னை மாநகராட்சி கட்டியுள்ள வணிக வளாகங்கள் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு ஒருபோதும் சேர வாய்ப்பு இல்லாத வகையில் உண்மையான பயனாளிகளுக்கு கடைகள் குறைபாடுமின்றியும், கால தாமதமின்றியும், உரிய வழிமுறைகளின்படி கிடைத்திட உரிய வழிவகைகள் உறுதியாக மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

குப்பை அள்ளுவதற்காக புதிய லாரி

Print PDF

தினமணி 14.10.2010

குப்பை அள்ளுவதற்காக புதிய லாரி

திருக்கோவிலூர், அக். 13: திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு புதிதாக வாங்கப்பட்ட லாரி குப்பை அள்ளும் பணிக்காக அண்மையில் வழங்கப்பட்டது.

÷திருக்கோவிலூர் நகரப் பகுதியில் அன்றாடம் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை அப்புறப்படுத்தி, உரக்கிடங்கிற்கு குப்பைகளை எடுத்துச்செல்ல போதிய வாகன வசதியின்றி பேருராட்சி துப்புரவு பணியாளர்கள் அவதிப்பட்டனர்.

÷இதையடுத்து குப்பை ஏற்றிச் செல்வதற்காக | 10 லட்சம் செலவில் புதிதாக லாரி வாங்கப்பட்டது. இதனை துப்புரவுப் பணிக்காக ஒப்படைக்கும் விழாவாக நடைபெற்றது. பேருராட்சித் தலைவர் ஆர். ஆண்டாள் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.

அப்போது முன்னாள் பேருராட்சித் தலைவர் டி. செல்வராஜ், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், கவுன்சிலர் டி. குணா மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

 

ஊட்டிமேட்டுப்பாளையம் சாலையில் 21 இடங்களில் புதிய மழைநீர் கால்வாய்

Print PDF

தினமலர் 14.10.2010

ஊட்டிமேட்டுப்பாளையம் சாலையில் 21 இடங்களில் புதிய மழைநீர் கால்வாய்

ஊட்டி : ""ஊட்டி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 21 இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது,'' என நீலகிரி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.ஊட்டி-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழையால் சாலையில் மந்தாடா மற்றும் எல்லநள்ளி பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை சீரமைத்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் காணிக்கராஜ் நகர் பகுதியில் மீண்டும் இச்சாலை பழுதடைந்தது. தற்போது அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி இந்த சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு இலகு ரக வாகன போக்குவரத்து மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் மழையால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள 21 பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது; ஊட்டி-குன்னூர் சாலையில் மழை நீரால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் ஆய்வு செய்துள்ளனர். இதில் மழையால் சேதம் ஏற்படும் என 21 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வெள்ள நீர் சாலையில் ஓடாமல் இருக்க மழை நீர் கால்வாய் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இப்பணிகள் விரைவில் துவக்கப்படும். மேலும் பருவ மழை காலத்தில் ஊட்டி நகராட்சி மற்றும் கோத்தகிரி சாலையில் மண் அரிப்பு ஏற்படும் பகுதிகள் கண்டறிப்பட்டு, அப்பகுதிகளில் மழை நீர் கால்வாய்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் குறித்து தகவல் அளிக்க கட்டுபாட்டு அறை 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறினார்.

 


Page 121 of 238