Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

புழுதிவாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் "ஐமாஸ்' விளக்குகள்

Print PDF

தினமலர் 08.10.2010

புழுதிவாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் "ஐமாஸ்' விளக்குகள்

புழுதிவாக்கம் : உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்று "ஐமாஸ்' விளக்குகள் இயக்கி வைக்கப்பட்டன.உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் ஏற்கனவே 25 லட்சம் ரூபாய் செலவில் புழுதிவாக்கம் ஆறாவது பிரதான சாலை, சாமி நகர் சந்திப்பு, பொன்னியம்மன் கோவில் - புழுதிவாக்கம் சந்திப்பு, மந்தவெளி தெரு, புழுதிவாக்கம் மயானம் ஆகிய இடங்களில், "ஐமாஸ்' விளக்குகள் அமைக்கப்பட்டன.இதற்கிடையே, பாலாஜி நகர் - பெருமாள் நகர் சந்திப்பு, அண்ணா சாலை - மதியழகன் தெரு சந்திப்பு, காமராஜ் சாலை - குபேர முனுசாமி தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் 15 லட்சம் ரூபாய் செலவில் மேலும் மூன்று, "ஐமாஸ்' விளக்குகள் அமைக்கப்பட்டன.உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சித் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த புதிய, "ஐமாஸ்' விளக்கு திறப்பு விழாவில், துணைத் தலைவர் மணிகண்டன் முன்னிலையில், தென்சென்னை எம்.பி., சிட்லபாக்கம் ராஜேந்திரன், "ஐமாஸ்' விளக்குகளை இயக்கி வைத்தார்.விழாவில் அவர் பேசும் போது, "தென்சென்னை தொகுதியில் பொதுமக்களின் எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னிடம் தெரிவிக்கலாம். புழுதிவாக்கம் பாலாஜி பிரதான சாலை - முருகப்பா தெரு சந்திப்பு, சதாசிவம் நகர் இரண்டாவது இணைப்பு சாலை - ராமலிங்கம் நகர் சந்திப்பில் இரண்டு, "ஐமாஸ்' விளக்குகள் விரைவில் அமைக்கப்படும்' என்றார்.

 

ரூ.8 கோடியில் "லிப்ட்'டுடன் கூடியநடைமேம்பாலம் அமைக்க திட்டம்

Print PDF

தினமலர் 08.10.2010

ரூ.8 கோடியில் "லிப்ட்'டுடன் கூடியநடைமேம்பாலம் அமைக்க திட்டம்

தாம்பரம் : தாம்பரம் சானடோரியம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய இடங்களில், பொதுமக்களின் வசதிக்காக தலா நான்கு கோடி ரூபாய் செலவில், "லிப்ட்'டுடன் கூடிய நவீன நடைமேம்பாலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தாம்பரம் சானடோரியம், "மெப்ஸ்' வளாகத்தில் ஏராளமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், செங்கல்பட்டு, அரக்கோணம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஸ்கள், ரயில்கள் மூலம் சானடோரியம் வந்து, அங்கிருந்து ஜி.எஸ்.டி., சாலையைக் கடந்து பணிக்கு செல்கின்றனர்.மேலும், சானடோரியத்தில் தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், தேசிய சித்த மருத்துவமனை ஆகியவையும் உள்ளன. இந்த இடங்களுக்கும் ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும் அதிக வாகன போக்குவரத்து கொண்ட ஜி.எஸ்.டி., சாலையை ஆபத்தான வகையில் கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது.ஜி.எஸ்.டி., சாலையை கடக்கும் போது பலர் விபத்துகளில் சிக்குகின்றனர். இதைத் தவிர்க்க, சானடோரியம் பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் வகையில் சுரங்கப்பாலமோ அல்லது நடைமேம்பாலமோ அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இந்நிலையில், மெப்ஸ் அருகே பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் ஒரு நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நான்கு கோடி ரூபாய் செலவில் "லிப்ட்'டுடன் கூடிய நவீன நடைமேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அரசிடம் நிர்வாக ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,"தாம்பரம் சானடோரியம், குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் ஜி.எஸ்.டி., சாலையை கடந்து செல்கின்றனர்.இதனால், நெரிசல் மட்டுமின்றி, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.இதை கருத்தில் கொண்டு, சானடோரியம் மற்றும் குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்ட் ஆகிய இரண்டு இடங்களில் தலா நான்கு கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் "லிப்ட்'டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் இந்தப் பணி துவக்கப்படும்' என்றனர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், "குரோம்பேட்டையில் லிப்ட் வசதியுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும், இதுவரை அங்கு நடைமேம்பாலம் அமைக்கப்படவில்லை. சானடோரியம் மெப்ஸ் வளாகத்தின் அருகில் நடைமேம்பாலம் கேட்டு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அங்கு மேம்பாலம் அமைக்க உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இது அறிவிப்போடு நில்லாமல், செயல்பாட்டிற்கு வரவேண்டும்' என்றனர்.

 

ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறப்பு

Print PDF

தினமலர் 08.10.2010

ரங்கராஜபுரம் மேம்பாலம் ஜனவரியில் திறப்பு

சென்னை : ""ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோடம்பாக்கம் - மாம்பலம் ரயில் நிலையங்களுக்கு இடையில், ரங்கராஜபுரம் பகுதியில் 23 கோடியே 76 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.தி.நகர் பசுல்லா சாலையில் இருந்து, கோடம்பாக்கம் செல்ல ரங்கராஜபுரத்தில் இறங்கும் வகையிலும், கோடம்பாக்கத்தில் இருந்து தி.நகர் செல்ல பசுல்லா சாலையில் இறங்கும் வகையிலும், "ஒய்' வடிவத்தில் இந்த மேம்பாலம் கட்டப்படுகிறது. சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து இப்பணியை மேற்கொள்கிறது.இந்த பணிகளை பார்வையிட்டபின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:ரங்கராஜபுரம் மேம்பாலத்தின் கட்டுமானப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். அதற்கு ஏற்றாற் போல், மாநகராட்சி மற்றும் ரயில்வே துறையின் பணிகள் வேகமாக நடக்கிறது. இந்த மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டால், ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் பெரிதும் குறையும்.இந்த நிர்வாகம் பொறுப்பேற்ற பின், ஆறு மேம்பாலங்களும் ஒரு சுரங்கப்பாதையும் திறக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் கட்டுமானப் பணி இரண்டு மாதத்தில் முடிவடையும். இது தவிர 10 க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் சுரங்கப் பாதைகள் கட்டும் பணி நடக்கிறது.வட சென்னையில், கணேச புரம், வியாசர்பாடி சங்க சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்களும் வில்லிவாக்கம் மற்றும் ஸ்டான்லி மருத்துவமனை அருகில் சுரங்கப் பாதை கட்டும் பணிகளும் நடக்கிறது.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் துணை கமிஷனர் (பணிகள்) தரேஷ் அகமத், தலைமைப் பொறியாளர் விஜயகுமார் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

 


Page 127 of 238