Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பெரம்பூரில் அழகிய பூங்காவுடன் நவீன ஆட்டிறைச்சி கூடம்

Print PDF

தினமலர் 06.10.2010

பெரம்பூரில் அழகிய பூங்காவுடன் நவீன ஆட்டிறைச்சி கூடம்

பெரம்பூர்: "நவீன முறையில் அழகிய பூங்காவுடன், 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் பெரம்பூர் ஆட்டிறைச்சிக் கூடம், வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும்' என, மேயர் தெரிவித்தார்.

பெரம்பூரில் நவீன முறையில் அழகிய பூங்காவுடன், 48 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் ஆட்டிறைச்சிக் கூடத்தை சென்னை மேயர் சுப்ரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் இந்த ஆட்டிறைச்சிக் கூடம் 1903ம் ஆண்டு கட்டப்பட்டது. பழைமையான இந்த கூடம், 48 கோடி ரூபாய் செலவில் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது. 9.4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடத்தில், 4 ஏக்கர் பரப்பளவில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள இடத்தில் அழகி பூங்காவுடன், மேலும் மூன்று பகுதிகளில் குளிர்சாதன வசதியும், இரண்டு லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும் நிலையமும் அமைக்கப்படுகிறது. அதன் மூலம் நவீன தொழில் நுட்பத்துடன் இறைச்சிக்காக பிராணிகள் வெட்டப்படும் போது, வெளியேறும் கழிவுகள் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாமல் சுத்திகரிக்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு 250 ஆடுகள் வெட்டும் திட்டத்தை மாற்றி, வியாபாரிகளின் கோரிக்கையின்படி 500 ஆடுகளும், 60 மாடுகளும் வெட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாடுகளை வெட்ட தனியாக வசதி செய்து தரப்படும். இறைச்சிகளை விற்பதற்காக 20க்கும் மேற்பட்ட சிறிய வியாபாரிகளுக்கு வணிக வளாகம் கட்டித் தரப்படும். ஆய்வகம், மழைநீர் வடிகால்வாய், பயோ பில்டர், குளிர்சாதன வசதிகள் மற்றும் அழகிய பூங்காவுடன் கட்டப்படும் இந்த நவீன ஆட்டிறைச்சி கூடம் வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு நிகழ்ச்சியில் வி.எஸ்.பாபு எம்.எல்.., மண்டல குழுத்தலைவர் கன்னியப்பன், தலைமை பொறியாளர் விஜயகுமார் உட்பட பலர் இருந்தனர்..

 

பராமரிப்பின்றி பாழாகிறது கடலூர் நகராட்சி பூங்கா

Print PDF

தினமலர் 06.10.2010

பராமரிப்பின்றி பாழாகிறது கடலூர் நகராட்சி பூங்கா

கடலூர்: கடலூர் நகராட்சியால் 37.50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக் கப்பட்ட சுப்ராயலு ரெட்டியார் பூங்கா உரிய பராமரிப்பின்றி சீரழிந்து வருகிறது.கடலூர் நகர மக்கள் குடும்பத் துடன் பொழுது போக்கிட இடம் இல்லாத குறையை போக்கிடும் பொருட்டு கடந்த 2004-05ம் ஆண்டு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம் அருகே நகராட்சிக்கு சொந்தமான பூங்காவை சீரமைக்க அப்போதைய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி பொது நிதி 28 லட்சம் ரூபாய், ராஷ்டிரிய சம்விக்யா யோஜனா திட்டத்தில் 4 லட்சம், சிறுசேமிப்பு ஊக்கத் தொகையில் 3.90 லட்சம், இரண்டாவது மாநில நிதிக்குழு பரிந்துரையில் 1.60 லட்சம் ரூபாய் என மொத்தம் 37 லட்சத்து 50 ரூபாய் செலவில் நகராட்சி நிர்வாகத்தால் புனரமைக்கப்பட்டது.

அதில் வயோதிகர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை, சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்திட ஊஞ்சல்கள், யானை, ஒட்டகச்சிவிங்கி போன்ற விலங் குகள் வடிவிலும், பல அடுக்கு சறுக்கு மரங்கள், சுழல் சறுக்கு மரங்கள், "சீசா' உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் நிறுவப்பட் டன. மேலும், அனைவரையும் கவரும் வகையில் "டால்பின்', "நத்தை' வடிவில் வண்ணமையமான நீரூற்றுகள் அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி திறக்கப்பட்டது.பல லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட இந்த அழகிய பூங் காவிற்கு மக்கள் கூட்டம் வருகை அதிகரித்தது. பூங்காவை தொடர்ந்து பராமரிப்பதற்காக நகராட்சி நிர்வாகத்தால் நுழைவு கட்டணமாக ஒரு ரூபாய் வசூலிக்கப்பட்டது.

பின்னர் இந்த கட்டணத்தை 2 ரூபாயாக உயர்த்தப்பட்டது.கட்டணத்தை உயர்த்தி வருவாய் ஈட்டுவதில் கவனம் செலுத்திய தற்போதைய நகராட்சி நிர்வாகம் பூங்காவை தொடர்ந்து பராமரிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் பூங்காவில் சிறுவர்கள் விளையாட அமைக் கப்பட்டுள்ள பெரும்பாலான சாதனங்கள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நீரூற்றும் இயங்காமல் பொம்மைகள் மட்டும் காட்சிப் பொருளாக உள்ளது. மின் விளக்குகளும் சரியாக எரிவதில்லை.சிறுவர்கள் அதிகம் விளையாடும் ஊஞ்சல் பகுதியில் ஏற்பட்ட பள்ளத்தில் மணல் கொட்டி மூடக்கூட நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. இதன் காரணமாக ஊஞ்சல் பகுதியில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. வேறு வழியின்றி சேற்றிலேயே சிறுவர்கள் விளையாட வேண்டியுள்ளது. இதன் காரணமாக பூங்காவிற்கு பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.பல லட்சம் ரூபாய் செலவில் திட்டங்களை கொண்டு வர ஆர்வம் காட்டும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளும், அதனை தொடர்ந்து பராமரித்திட ஆர்வம் காட்டாதது ஏனோ தெரியவில்லை.

 

உழவர்சந்தை வடிவில் சென்ட்ரல் மார்க்கெட்டில் 1090 புதிய கடைகள் தயார் மாநகராட்சியில் இன்று ஏலம்

Print PDF

தினகரன் 06.10.2010

உழவர்சந்தை வடிவில் சென்ட்ரல் மார்க்கெட்டில் 1090 புதிய கடைகள் தயார் மாநகராட்சியில் இன்று ஏலம்

மதுரை, அக். 6: மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் ஆயிரத்து 90 கடைகள் உழவர் சந்தை வடிவில் தயாராகி உள்ளன. இந்த கடைகளுக்கு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஏலம் நடக்கிறது. மதுரை மாட்டுத்தாவணியில் நிறுவப்பட்டுள்ள சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் 524 கட்டிட கடைகள் வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டு செயல்படுகிறது. புதிதாக தரையில் கான்கிரீட் தளம், மேற்கூரையுடன் உழவர் சந்தை வடி வில் ஆயிரத்து 90 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகள் ஒவ்வொன்றுக்கும் டெபாசிட் ரூ. 50 ஆயிரம், மாத வாடகை ரூ.700 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து கடைகளும் இன்று (அக்.6) காலை 10.30 மணி முதல் மாநகராட்சி அலுவலகத்தில் பகிரங்க ஏலம் நடைபெறும் என ஆணையாளர் செபாஸ்டின் அறிவித்துள்ளார். மாநகராட்சி அலுவலகத்தில் 3 இடங்களில் ஏலம் நடக்கி றது. டெபாசிட் ரூ. 50 ஆயி ரம் ஆணையாளர் பெயரில் வங்கியில் டிடி எடுத்து, மாநகராட்சியில் முன்பதிவு செய்துள்ளவர்கள் மட்டும் ஏலத்தில் அனுமதிக்கப்படுவர். ஏலம் நடத்தும் அதிகாரியிடம் யாராவது பிரச்சினையில் ஈடுபட்டால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. டெபாசிட் தொகை மூலம் ரூ. 5 கோடியே 45 லட்சம், வாடகையாக மாதம் ரூ. 8 லட்சம் என மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.

 


Page 130 of 238