Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வந்தவாசியில் 22ம் தேதி திறக்கப்படும் புதிய பஸ் நிலைய அமைப்பு இறுதிகட்டப் பணிகள் தீவிரம்

Print PDF

தினகரன் 05.10.2010

வந்தவாசியில் 22ம் தேதி திறக்கப்படும் புதிய பஸ் நிலைய அமைப்பு இறுதிகட்டப் பணிகள் தீவிரம்

வந்தவாசி, அக்.5: வந்தவாசியில் புதிய பஸ் நிலையத்தை வரும் 22ம் தேதி தமிழக துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையடுத்து இறுதிகட்டப் பணிகளை அமைச்சர் எ..வேலு நேற்று ஆய்வு செய்தார்.

வந்தவாசி நகரில் ரூ4.50 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனை வருகிற 22ம் தேதி தமிழக துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.

இந்நிலையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் எ.. வேலு நேற்றுகாலை 8.45 மணியளவில் வந்தவாசி புதிய பஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது பேருந்து நிற்கும் இடத்தில் மேற்கூரைக்கும், கட்டிடத்திற்கும் இடைவெளி அதிகளவில் உள்ளதால் மழை பெய்யும்போது பயணிகள் அவதிப்படுவார்கள். எனவே, முழுவதும் இடைவெளி தெரியாமல் கூரை அமைக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள், தரை மற்றும் இருக்கைகள் தரமனதாக உள்ளதா? என அமைச்சர் ஆய்வு செய்தார். இதையடுத்து மீசநல்லூர் கிராமத்தில் ரூ2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுரத்தை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.

அவருடன், தி.மலை கலெக்டர் மு.ராஜேந்திரன், எம்எல்ஏ கமலக்கண்ணன், ஒன்றிய குழு தலைவர் கே.ஆர். சீதாபதி, எம்.எஸ். தரணிவேந்தன், முன்னாள் எம்பி துரை, முன்னாள் எம்எல்ஏ பாலஆனந்தன், நகராட்சி தலைவர் சீனிவாசன், ஆணையாளர் உசேன் பாரூக் மன்னர், பொறியாளர் மகாதேவன், நகர திமுக செயலாளர் லியாகத் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

 

ஈமக்கிரியை கட்டிடம் திறப்பு

Print PDF

தினகரன் 05.10.2010

ஈமக்கிரியை கட்டிடம் திறப்பு

பெரம்பலூர், அக். 5: பெரம்பலூர் நகராட்சியில் ஈமக்கிரியை கட்டிடத்தை மத்திய அமைச்சர் ராசா திறந்து வைத்தார்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் தெற்குகரையில் இறந்தவர்களுக்கு நடத்தப்படும் ஈமக்கிரியை சடங்கு நடத்தும் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் ராசா நேற்று திறந்து வைத்தார். அதைதொடர்ந்து தெப்பக்குளத்தை சுற்றிலும், பொதுமக்கள், சிறுவர்கள் நடந்து செல்லும் சிமென்ட் நடைபாதை அமைக்கவும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பருவமழை காரணமாக நகரில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளுக்கும், குப்பைகள் குவிந்து கிடக்கும் இடங்களுக்கும் சுகாதாரத்துறையினர் விரைந்து சென்று அப்புறப்படுத்தி தொற்றுநோய் பரவாமல் குடிதண்ணீரை சுகாதாரமாக வழங்க உத்தரவிட்டார். எம்எல்ஏ ராஜ்குமார், நகராட்சி தலைவர் இளையராஜா, துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர்(பொ) கருணாகரன், கவுன்சிலர்கள் பாரி, கனகராஜ், மாரிக்கண்ணன், ஜெயக்குமார், கருணாநிதி, ரமேஷ், ரஹமத்துல்லா, சிவக்குமார், ஈஸ்வரி, புவனேஷ்வரி, கண்ணகி, பொற்கொடி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். .

 

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல்லை மாநகராட்சிக்கு ரூ.11 லட்சத்தில் குடிநீர் லாரி

Print PDF

தினகரன் 05.10.2010

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் நெல்லை மாநகராட்சிக்கு ரூ.11 லட்சத்தில் குடிநீர் லாரி

நெல்லை மாநகராட்சிக்கு வாங்கப்பட்ட புதிய குடிநீர் லாரியை ராமசுப்பு எம்.பி தொடங்கி வைத்தார். அருகில் மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன், துணைமேயர் முத்துராமலிங்கம், ஆணையர் சுப்பையன் மற்றும் பலர்.

நெல்லை, அக்.5: எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி யில் வாங்கப்பட்ட புதிய குடிநீர் லாரி நேற்று நெல்லை மாநகராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் குடி நீர் விநியோகம் செய்ய போதிய லாரிகள் இல்லாமல் இருந்தது. இதுகுறித்து நெல் லை தொகுதி எம்.பி. ராமசுப்புவிடம் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய் தார். மாநகராட்சியில் ரூ.1.32 லட்சம் சேர்த்து, மொத்தம் ரூ.11.32 லட்சத் தில் புதிய குடிநீர் லாரி வாங்கப்பட்டது.

நெல்லை மாநகராட்சி யில் நேற்று நடந்த நிகழ்ச்சி யில் லாரியை ராமசுப்பு எம்.பி. மேயரிடம் ஒப்படைத்தார். கமிஷனர் சுப்பை யன், துணைமேயர் முத்துராமலிங்கம், மேலப்பாளையம் மண்டல தலைவர் மைதீன், காங். பிரமுகர்கள் அமீர் கான், சுத்தமல்லி முருகேசன், வாகை கணேசன், பேட்டை சுப்பிரமணியன், தச்சை முருகேசன், இஸ்மாயில், கவுன்சிலர்கள் கந்தன், அப்துல்வஹாப், தியாகராஜன், நமச்சிவாயம், பாண்டிக்குமார், பேபி கோபால், உமாபதிசிவன், ராஜேஸ்வரி, ரேவதி அசோக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்குடிநீர் வாகனம் மூலம் நெல்லையின் பல பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 


Page 132 of 238