Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் 22 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி

Print PDF

தினமலர் 04.10.2010

மாநகராட்சி தனிக்குடிநீர் திட்டத்தில் 22 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி

சேலம்: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் புதிதாக 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சியில் 283 கோடியே ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் தனிக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேக்கேஜாக திட்டப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

முதல் பேக்கேஜ் பணி 168 கோடியே ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் மேட்டூர் தொட்டில்பட்டி முதல் மாநகராட்சி எல்லை வரை ஐந்து சிப்பங்களாக மேற்கொள்ள பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.இரண்டாவது பேக்கேஜில் சேலம் மாநகர எல்லைக்குள் 22 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்டவும், குடிநீர் பிரதான மற்றும் பகிர்மான குழாய்கள் பதிக்கவும், ஏற்கனவே உள்ள குடிநீர் பகிர்மான குழாய்களை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு தண்ணீர் முதலீட்டு கழகத்தினரால் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. சிவதாபுரம், அரியாக்கவுண்டம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை லாரி மார்க்கெட், நெடுஞ்சாலை நகர், ஜாகீர் அம்மாப்பாளையம், மகேந்திரபுரி சின்னதிருப்பதி, சின்ன கொல்லப்பட்டி, சின்ன திருப்பதி, பெரிய புதூர், சொர்ணபுரி, அம்மாப்பேட்டை என்.ஜி.., காலனி, வித்யாநகர், வாய்க்கால்பட்டறை, சன்னியாசி குண்டு ஓந்தாப்பிள்ளை காடு, தாதகாப்பட்டி, பஞ்சதாங்கி ஏரி, எருமாப்பாளையம் மெயின்ரோடு, களரம்பட்டி மெயின்ரோடு, செல்லக்குட்டி கரடு, ஜாரி கொண்டலாம்பட்டி, குமரகிரி அடிவாரம் ஆகிய இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சி கூட்டத்தில் புதிய நீர்த்தேக்க தொட்டிகளை கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

மேட்டூர் நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அண்ணா பெயர்

Print PDF

தினகரன் 04.10.2010

மேட்டூர் நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அண்ணா பெயர்

மேட்டூர், அக்.4: மேட்டூர் நகராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அண்ணா பெயர் சூட்டுவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தென நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் நகரமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் காசிவிசுவநாதன், ஆணையர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் துவங்கியதும் மேட்டூர் நகர்பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக இரண்டு நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். எனவே, உடனடியாக உடைப்பை சரிசெய்து, குடிநீர் விநியோகத்தை சீர்செய்ய வேண்டுமென உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

மேட்டூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிட அரசிடம் அனுமதி கோருவது, 29வது வார்டில் ரூ7 லட்சம் செலவில் கான்கிரிட் சாலை, 8வது வார்டு இ.பி. காலனியில் ரூ1.9 லட்சம் செலவில் கான்கிரிட் சாலை அமைப்பது உள்ளிட்ட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

சிறுவர் பூங்கா திறப்பு

Print PDF

தினகரன் 29.09.2010

சிறுவர் பூங்கா திறப்பு

திருவொற்றியூர் செப். 29: திருவொற்றியூர் நகாரட்சி எண்ணூர் அனல் மின்நிலைய குடியிருப்பில் அமைச்சர் கே.பி.பி.சாமி தொகுதி மேம்பாட்டு நிதி ரூ5 லட்சம் செலவில் கலையரங்கமும், நகராட்சி சார்பில் ரூ5 லட்சத்தில் சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டன.

இதன் திறப்பு விழா நடந்தது.நகராட்சி துணை தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். அமைச்சர் கே.பி.பி.சாமி கலையரங்கம் மற்றும் சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். கவுன்சிலர் ஜெய்சங்கர் வரவேற்றார். அனல் மின்நிலைய தலைமை பொறியாளர் சாந்தகுமார். நகராட்சி ஆணையர் கலைச் செல்வன் மற்றும் கே.பி.சங்கர், திமுக நகரச் செயலாளர் தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

 


Page 134 of 238