Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் உருவாகும் மேத்தா நகர் பாலத்துக்கு ரூ 1.87 கோடி ஒதுக்கீடு மாநகராட்சி தீர்மானம்

Print PDF

தினகரன் 29.09.2010

தயாநிதி மாறன் தொகுதி நிதியில் உருவாகும் மேத்தா நகர் பாலத்துக்கு ரூ 1.87 கோடி ஒதுக்கீடு மாநகராட்சி தீர்மானம்

சென்னை, செப்.29: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் சூளைமேடு மேத்தா நகர் பாலத்துக்கு ரூ1.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூடத்தில் நேற்று நடந்தது. பின் னர் மேயர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், மத்திய ஜவுளித்துறை அமைச்சருமான தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேத்தா நகர் ஆபீசர்ஸ் காலனி முதல் தெரு & வெங்கடாசலபதி தெருவையும் இணைத்து பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பாலம் ரூ3.37 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந்த பணிக்காக, மாநகராட்சி மூலதன நிதியில் இருந்தும் ரூ1.87 கோடி ஒதுக்கீடு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் பல் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இது தவிர தென்சென்னைக்கு தேனாம்பேட்டையில் ஒன்றும், வடசென் னையில் தண்டையார்பேட்டையில் ஒன்றும் கடந்த நிதியாண்டில் புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு ஏழை மக்களிடம் நல்ல வர வேற்புள்ளது.

இதுபோன்ற பல் மருத்துவமனைகள் மேலும் தேவை என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

அதன்படி, இளங்கோநகர்(வார்டு 36), செம்பியம் (51), டி.பி.சத்திரம் (69), புதுப்பேட்டை (82), நுங்கம்பாக்கம் (108), கோட்டூர்புரம் (138), வேளச்சேரி (153) ஆகிய 7 இடங்களில் பல் மருத்துவமனைகள் திறக்கப்படும். மிக பழமையான கோடம்பாக்கம் மேம்பாலம் ரூ3.92 கோடி செலவில் பழுது பார்க்கும் பணிக்கான அனுமதி வழங்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் கூறினார்.

 

பொதுமக்கள் எதிர்பார்ப்பு சிதம்பரத்தில் புதிய பாதாள சாக்கடை பணிகள் துவங்குவது எப்போது ?

Print PDF

தினகரன் 28.09.2010

பொதுமக்கள் எதிர்பார்ப்பு சிதம்பரத்தில் புதிய பாதாள சாக்கடை பணிகள் துவங்குவது எப்போது ?

சிதம்பரம் செப். 28: மாநகரங்கள், நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவருவதற்கு முன்பே சுமார் 60 வருடங்களுக்கு முன்பு சிதம்பரம் நகராட்சியால் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந் தது. மாவட்ட தலைநகரான கடலூரிலேயே தற்போது தான் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் 1962&ஆம் ஆண்டில் அப்போது உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

 இங்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நடராஜர்கோவில், அருகில் பிச்சாவரம் சுற்றுலா மையம், புகழ்பெற்ற கோவில்கள் உள்ளதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் இங்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். மக்கள் தொகையும் அதிகரித்துள்ளது. இதனால் விடுதிகள், வர்த்தக நிறுவனங்களும் அதிகமாக உள்ளன. இந்நிலையில் மக்கள் தொகை அதிகரிப்பால் பழைய பாதாள சாக்கடைகள் நிரம்பியும், ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுவதும் வாடிக்கையாகிவிட்டது. தற்போதுள்ள மக்கள் தொகை ஏற்ப தமிழக அரசு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக ரூ.44 கோடியில் புதிய பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது.

இப்பணிகள் துவங்கப்படாமலேயே உள் ளது. தற்போது மழை கால மாக உள்ளதால் பாதாள சாக்கடைகள் பொங்கி மழைநீரில் கலந்து சாலை யில் தண்ணீர் நிற்பதால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இந்த கழிவுநீர் மழைநீருடன் கலந்து பாலமான், மற்றும் ஓமக்குளத்தில் கலப்பதால் அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட குழாய்கள் துரு பிடித்து உடைப்புகள் ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்துவருகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் வரும் அபாயம் உள்ளது. புதிய பதாளா சாக்கடை திட்டப் பணிகள் துவங்கப்பட உள்ள தால் சிதம்பரத்தில் புதிய சாலைகள் போட படா மலேயே உள்ளது. ஆகையால் உடனடியாக புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்னர். துவங்கபடுமா என சிதம்பரம் நகர பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

 

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் வாகன பார்க்கிங் வசதி தேவை

Print PDF

தினகரன் 28.09.2010

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் வாகன பார்க்கிங் வசதி தேவை

வாலாஜாபாத், செப் 28: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம், ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். அவர்கள் சைக்கிள், பைக் மூலம் வாலாஜாபாத் வந்து, தங்கள் செல்ல வேண்டிய பகுதிக்கு பஸ் மூலம் செல்கின்றனர்.

வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் வாகனம் நிறுத்த வசதி இல்லை. அருகில் உள்ள கடைகள் முன்பு வாகனத்தை நிறுத்துகின்றனர். இரவு நேரத்தில் திரும்பிவர தாமதமானால் வாகனம் என்ன ஆகுமோ என்ற பயத்திலேயே வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்துதரவேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


Page 135 of 238