Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.7 லட்சத்தில் நடைபாதை

Print PDF

தினகரன் 22.09.2010

ரூ.7 லட்சத்தில் நடைபாதை

குன்னூர், செப்.22: குன்னூரை அடுத்துள்ள உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட கீழ்பாரதி நகரில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலின்போது கதர்வாரிய துறை அமைச்சர் ராமச்சந்திரன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததையடுத்து கீழ்பாரதி நகரில் இருந்து மேல்பாரதி நகர் செல்லும் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமைக்க அரசு சார்பில் தற்போது ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சருக்கு அப்பகுதி மக்கள் சார்பில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி மகாலிங்கம், கிளை செயலாளர் முத்து ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

 

"மாநகராட்சியில் கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும்'

Print PDF

தினமணி 21.09.2010

"மாநகராட்சியில் கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும்'

திருச்சி,​​ செப்.​ 20:​ திருச்சி மாநகராட்சியில் வார்டுக்கு தலா இரண்டு வீதம் 120 கொசு மருந்தடிக்கும் கருவிகள் விரைவில் வாங்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் தா.​ சவுண்டையா.

​ ​ இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:

​ ​ மழைக்காலம் தொடங்கிவிட்டதை அடுத்து,​​ திருச்சி மாநகராட்சி சார்பில் 60 புகை மருந்தடிக்கும் கருவிகளும்,​​ 60 தெளிப்பு மருந்தடிக்கும் கருவிகளும் வாங்கப்படவுள்ளன.​ ஏற்கெனவே,​​ 18 புகை மருந்தடிக்கும் இயந்திரங்களும்,​​ ஒரு பெரிய அளவிலான வாகன இயந்திரமும் இயங்கி வருகின்றன.

​ ​ ​ லார்வா நிலையிலேயே கொசுப் புழுக்களை அழிக்கும் வகையில்,​​ 400 கிலோ மருந்து வாங்கப்பட்டுள்ளது.​ 250 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து கொசுப்புழுக்கள் உள்ள கழிவுநீர்ப் பகுதிகளில் தெளித்தால்,​​ அவற்றை உள்கொள்ளும் கொசுக்களின் வயிற்றில் பாக்டீரியாக்கள் பெருமளவில் உற்பத்தியாகி கொசுப் புழுக்களைக் கொன்று விடும்.​ இந்த முறையில் தற்போது மாநகரப் பகுதிகளில் தீவிரமாக கொசு ஒழிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் சவுண்டையா. ​ ​ பேட்டியின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் கே.சி.​ சேரன் உடனிருந்தார்.

 

திறப்பு விழா

Print PDF

தினமலர்        21.09.2010

திறப்பு விழா

தர்மபுரி: தர்மபுரி நகராட்சியில் 2 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அண்ணாதுரை நூற்றாண்டு விழா நினைவு வளைவு திறப்பு விழா நடந்தது.கலெக்டர் அமுதா தலைமை வகித்து, நுழைவு வாயிலை திறந்த வைத்து பேசுகையில்,"" பழைய தர்மபுரியில் இருந்து அரசு மருத்துவமனை வரையில் 6 கோடி ரூபாயில் சாலை அகலப்படுத்தப்பட்டு தடுப்பு சுவருடன் கூடிய சென்னை அண்ணா சாலை போல அமைக்கப்டவுள்ளது. இப்பணிகள் முடிந்ததும் இரண்டாம் கட்டமாக அரசு மருத்துவமனை முதல் அதியமான்கோட்டை வரை சாலை அகல்படுத்தப்படும். இப்பணி ஒரு வாரத்தில் துவங்கப்படும். 50 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது. நகரில் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சாலைகள் செப்பனிடப்படும். நகராட்சியை சுற்றியுள்ள பஞ்சாயத்து பகுதிகளை நகராட்சியுடன் இணைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது' என்றார்.நகராட்சி தலைவர் ஆனந்தகுமார் ராஜா, கமிஷனர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 139 of 238