Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மாநகராட்சி மைய அலுவலக முதல் தளம் திறப்பு

Print PDF

தினமணி 16.09.2010

மாநகராட்சி மைய அலுவலக முதல் தளம் திறப்பு

திருநெல்வேலி,செப்.15: திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் 50 லட்சத்தில் கட்டப்பட்ட முதல் தளம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமை வகித்து, புதிய முதல் தளத்தைத் திறந்துவைத்தார். துணை மேயர் கா. முத்துராமலிங்கம், ஆணையர் என். சுப்பையன் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவி ஆணையர் சுல்தானா, மண்டலத் தலைவர்கள் எஸ்.விஸ்வநாதன், எஸ்.எஸ். முகம்மது மைதீன், பாளை. வட்டாட்சியர் சங்கரசுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்

 

காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 15 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம்

Print PDF

தினமலர் 16.09.2010

காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ. 15 லட்சத்தில் கூடைப்பந்து மைதானம்

விழுப்புரம்: அண்ணாதுரை பிறந்த நாள் விழாவையொட்டி விழுப்புரம் காமராஜர் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் விஜயன் முன் னிலை வகித்தார்.

சேர்மன் ஜனகராஜ் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம், கணினி, அறிவியல் பாடங்களுக்கான வினா- வங்கி புத்தகத்தை வழங்கி பேசியதாவது: கடந்த 1996ம் ஆண்டிலிருந்து சேர் மன் பொறுப்பேற்ற நாள் முதல் இந் நாள் வரை இப்பள்ளிக்கு பல நல்ல திட்டங்களை வகுத்து தந்துள்ளேன். அமைச்சர் பொன்முடி, முதல்வருடன் பேசி விழுப்புரம் நகரில் சிமென்ட் சாலை அமைக்க 7.5 கோடி ரூபாய் நிதியை நகராட்சிக்கு பெற்று தந்துள்ளார். அடுத்த ஓராண்டிற்குள் விழுப்புரம் நகரம் சிமென்ட் சாலைகள் போடப்பட்டு புது பொலிவுடன் காணப்படும்.

இப்பள்ளிக்கு பல வசதிகள் செய்து தந்திருந்தாலும் மேலும் பள்ளிக்கு இருக்கைகள், மின்விளக்கு, 15 லட்சம் ரூபாய் செலவில் கூடைப் பந்து மைதா னம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஓராண்டிற்குள் செய்து தரப்படும். பள்ளி வாழ்க்கையில் மாணவர்கள் கஷ்டப் பட்டு படித்தால் அவர்கள் கல்லூரி படிப்பிற்கான சீட் வீடு தேடி வரும். நன்றாக படித்து வளமான வாழ்வை உருவாக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்மன் ஜனகராஜ் பேசினார். பள்ளி ஆசிரியர்கள் பழனி, பாலசுப்ரமணியன், சந்தானம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டடம்

Print PDF

தினமலர் 16.09.2010

மாநகராட்சி மைய அலுவலகத்தில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டடம்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தின் முதல் மாடியில் ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்.

நெல்லை மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் வ..சி.பிரதான கட்டடம் கட்டப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டதால் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் ரூ.5 கோடி செலவில் 42 ஆயிரத்து 646 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பணி விரைவில் துவங்கப்படவுள்ளது.

இந்த புதிய கட்டடம் கட்டுவதற்கு சுமார் 15 மாத காலங்கள் ஆவதால் பழைய கட்டடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களுக்காக மாற்று இட தேவையின் அவசியம் கருதி அண்ணா நூற்றாண்டு விழா கட்டடத்தின் முதல் தளத்தில் 5 ஆயிரத்து 345 சதுர அடி பரப்பளவில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் தலைமை வகித்து புதிய கட்டத்தை திறந்துவைத்தார். துணைமேயர் முத்துராமலிங்கம், கமிஷனர் சுப்பையன் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் விஸ்வநாதன், முகம்மதுமைதீன், கவுன்சிலர்கள் ப.ரா.வெங்கடேசன், நமச்சிவாயம் () கோபி, அப்துல்வகாப், சுரேஷ், வக்கீல் துரை, கந்தன், பேபிகோபால், அப்துல்காதர், ரேவதிஅசோக், மெடில்டா ஜோசப், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, சுலைகாபீவி, சைபுன்னிஷா, செயற்பொறியாளர் நாராயணன் நாயர், உதவிக்கமிஷனர்கள் சுல்தானா, கேசவதாஸ், தாசில்தார் சங்கரசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரூ.5 கோடியில் ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின் முதல் தள கட்டடம் மாமன்ற கூட்ட அரங்காக செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் தள கட்டடத்தில் கமிஷனர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை செயல்பட்டு வரவுள்ளது.

 


Page 141 of 238