Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே சுரங்க நடைபாதை பணி விரைவில் முடியும்

Print PDF

தினகரன் 09.09.2010

பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே சுரங்க நடைபாதை பணி விரைவில் முடியும்

பொள்ளாச்சி, செப். 9: பொள்ளாச்சியில் பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுரங்க நடைபாதை கட்டும் பணி இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து சீராகும் அளவிற்கு முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இட நெருக் கடி காரணமாக பஸ்களும், பொதுமக்களும் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட் டது. இதன் காரணமாக பல ஆண்டு திட்டமான புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி முடிக்கப்பட்டது. இவ்விரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே பாலக்காடு ரோட் டில் போக்குவரத்து மிகுந்து காணப்படுவதால் பயணிகள் இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சென்று வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் துவங்கியது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சுரங்க நடைபாதையை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ. 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டது.

இம்மாத இறுதியில் போக்குவரத்து சீராகும் விசர்ஜன ஊர்வலத்திற்கு தற்காலிக அனுமதி

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சப்&கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விசர்ஜன ஊர்வலத்திற்குள் சுரங்க நடைபாதை பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என்று ஆர்.டி.. அழகிரிசாமி தெரிவித்தார். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், பாதுகாப்பு காரணமாக விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்காக மட்டும் அந்த வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிகமாக மேற்படி பகுதியில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும். அதன் பிறகு தொடர்ந்து பணிகள் மேற்கொண்டு இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இப்பிரச்னைக்கு தீர்வு காண இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சுரங்க நடைபாதையை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதுதொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ. 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடும் தயார் செய்யப்பட்டு அரசிடம் அனுமதி பெறப்பட்டது.

இதனையடுத்து, சுரங்க நடைபாதை கட்டும் பணி யினை நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைத்தது. இப்பணி துவங்குவதற்கு முன்பு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ராஜாமில் ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரோடுகள் வழியாக திருப்பி விடப்பட்டன. தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் இரு பஸ் ஸ்டாண்டுகளுக்கும் இடையே சுரங்க நடைபாதை கட்டும் பணியினை துவக்கினர். இப்பணி குறிப்பட்ட காலத்திற்கு மேல் ஆகியும் முடிவடையாததால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்து பொதுமக்கள் அவதிப்படத் துவங்கினர்.ஆகவே, இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இந்நிலையில், இப்பணி இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து சீராகும் அளவிற்கு முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சுரங்க நடைபாதை அமைக்கும் பணி கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்டது. 6 மாத காலத்திற்குள் இப்பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மேற்படி இடத்தில் பாறைகள் அதிகம் இருந்ததாலும், ரோட்டின் இரு புறங்களிலும் கட்டுமான பொருட்களை போட்டு வைப்பதில் பயணிகளுக்கும், இரு புறமும் உள்ள கடைக்காரர்களுக்கும் இடையூறு ஏற்பட்டதாலும் இப்பணினை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலவில்லை.இருந்தபோதிலும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இம்மாத இறுதிக்குள் போக்குவரத்து சீராகும் அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பிறகு பக்கவாட்டிலும், நுழைவு மற்றும் வெளியறும் பகுதிகளிலும் கான்கிரீட்டுகள் அமைப்பது, சுரங்க நடைபாதைக்குள் டைல்ஸ்கள் பதிக்கும் பணி, மின் இணைப்பு உள்ளிட்ட பணிகள் வேகமாக செய்து அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மாத இறுதிக்குள் சுரங்க நடைபாதை பணிகள் முழுமை பெறும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

அம்பத்தூர் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு குப்பை தொட்டி

Print PDF

தினகரன் 09.09.2010

அம்பத்தூர் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு குப்பை தொட்டி

ஆவடி, செப். 9: அம்பத்தூர் நகராட்சி சார்பில், ரூ32 லட்சம் செலவில் சுகாதாரப் பணிக்காக 200 குப்பை தொட்டிகள் வழங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 75 குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நேற்று நடந்தது.

நகராட்சி தலைவர் கே.என்.சேகர் தலைமை வகித்து, 10 வார்டுகளுக்கு குப்பை தொட்டிகளை வழங்கினார். பொறியாளர் ரவி, சுகாதார அதிகாரி மணிமாறன், உறுப்பினர்கள் ஜான், அஞ்சா சந்தானம், காயத்ரி மகேந்திரன், தனலட்சுமி மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி 125 குப்பை தொட்டிகள் மற்ற வார்டுகளுக்கு வழங்கப்பட உள்ளதாக நகராட்சி தலைவர் சேகர் தெரிவித்தார்.

 

கூடலூர் பேரூராட்சி புதிய அலுவலகம் கட்ட பூமி பூஜை

Print PDF

தினமணி 06.09.2010

கூடலூர் பேரூராட்சி புதிய அலுவலகம் கட்ட பூமி பூஜை

பெ.நா.பாளையம்,செப்.5: பெரியநாயக்கன்பாளையம் அடுத்த கூடலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சியில் 76.90 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றிற்கான பூமி பூஜைகள் வெள்ளிக்கிழமை நடந்தன.

கவுண்டம்பாளையத்தில் தற்போது அலுவலகம் செயல்பட்டு வரும் கட்டடத்தில் மிகுந்த இடப்பற்றாக்குறை நிலவுகிறது. பேரூராட்சிக்குச் சொந்தமான டிராக்டர் போன்ற வாகனங்கள் வேறொரிடத்தில் நிறுத்தப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு அனைத்துப் பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சாமிசெட்டிபாளையத்தில் உள்ள நேருநகரில் 20 லட்சம் செலவில் புதிய அலுவலகம் கட்டப்படுகிறது. இது தவிர கோவனூர் மெயின் ரோட்டிலிருந்து விஜயாநகர் வரை 12 லட்சத்திலும், சாமையன் நகரில் 6.80 லட்சம் செலவில் தார் சாலைகள் அமைக்கப்படுகின்றன. பாரதி நகரில் 16 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டப்படுவதோடு, குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 7 லடசம் செலவில் கான்கிரீட் சாலையும் போடப்படுகிறது.

சி.எஸ்.ஐ நகர் மற்றும் வெங்கடாசலபதி நகரில் 5 லட்சத்தில் புதிய ஆழ்குழாய்க் கிணறுகள் தோண்டப்படுவதோடு, திருமலைநாயக்கன் பாளையத்தில் உள்ள மயானம் 9.50 லட்சத்தில் மேம்பாடு செய்யப்படுகின்றது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அரசு ஒதுக்கீடு செய்த 50 லட்சம் போக மீதமுள்ள தொகை பேரூராட்சியின் பொதுநிதியின் மூலம் செலவிடப்படுகிறது.

இப்பணிகளுக்கென நடந்த பூமி பூஜை நிகழ்ச்சிகளுக்கு பேரூராட்சித் தலைவர் பாப்பண்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கே.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சுந்தரராஜன், செல்வராஜ், மருதாசலம், செல்வி மற்றும் அலுவலக எழுத்தர் நசீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 


Page 143 of 238