Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கிங் சர்கிள் மேம்பாலம் திட்டமிட்டப்படி ஜனவரியில் செயல்பட துவங்கும்

Print PDF

தினகரன் 06.09.2010

கிங் சர்கிள் மேம்பாலம் திட்டமிட்டப்படி ஜனவரியில் செயல்பட துவங்கும்

கிங் சர்கிள், செப். 6 : கிங் சர்கிளில் புதிதாக கட்டப் பட்டு வரும் மேம்பால பணி கள் வரும் டிசம்பர் மாதத் திற்குள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாகன போக்குவரத் திற்கு திறந்து வைக்கப்படு மென மும்பை பெரு நகர வளர்ச்சிக் ஆணைய அதி காரிகள் தெரிவித்தனர்.

கிங் சர்கிளில் 79 கோடி ரூபாய் செலவில் 1,500 மீட்டர் நீளத்திற்கு துல்புலே சவுக்கில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 1.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலம் 17 மீட்டர் அகலமுடையது. வடக்கு நோக்கி செல் லும் நானாலால் மேம் பாலத்தை இணைக்கும் வித மாக இந்த பாலம் கட்டப்ப டுகிறது. இப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் நிறை வடைந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக் கப்படுமென எம்.எம்.ஆர்.டி.. அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பையில் ஏற்கனவே புதிதாக 6 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தாகூர் காம்ப்ளக்ஸ், தீன் தோஷி, உள்ளூர் விமான நிலையம் அருகில், நவ்கர் ஜங்சன், ஹிந்த்மாதா ஜங் சன் மற்றும் சயான் ஆகிய 6 இடங்களில் ஏற்கனவே புதிய மேம் பாலங் கள் கட்டப்பட்டு வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

குப்பையை விரைவாக அகற்ற 23 ஹாலேஜ் டிப்பர் லாரி மாநகராட்சி வாங்குகிறது தானே மூடி திறக்கும் வசதி கொண்டது

Print PDF

தினகரன்    06.09.2010

குப்பையை விரைவாக அகற்ற 23 ஹாலேஜ் டிப்பர் லாரி மாநகராட்சி வாங்குகிறது தானே மூடி திறக்கும் வசதி கொண்டது

சென்னை, செப்.6: விரைவாக குப்பையை அகற்றி எடுத்துச் செல்வதற்காக ரூ5.21 கோடி செலவில் தானாக மூடி திறக்கும் மேற்புற கதவுகளுடன் கூடிய 23 ஹாலேஜ் டிப்பர் லாரிகளை மாநகராட்சி வாங்குகிறது.

புளியந்தோப்பு, ஐஸ்அவுஸ், கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 4 மண்டலங்களிலும் நீல்மெட்டல் பனால்கா என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ள வார்டுகளில் சரியான முறையில் குப்பை அகற்றுவதில்லை என்று தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.

அதன் அடிப்படையில், இந்த 4 மண்டலங்களிலும் மாநகராட்சியே துப்புரவுப் பணியை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது. இந்த பகுதிகளில் குப்பையை அகற்றி குப்பை மாற்று வளாகத்திற்கு விரைவாக எடுத்துச் செல்வதற்காக தானாக மூடி திறக்கும் மேற்புற கதவுகளுடன் கூடிய ஹாலேஜ் டிப்பர் லாரிகளைகோடம்பாக்கத்திற்கு 10, ஐஸ் அவுசுக்கு 5, புளியந்தோப்பு மற்றும் அடையாறுக்கு 8 என ரூ5.21 கோடி செலவில் 23 லாரிகளை மாநகராட்சி வாங்கவுள்ளது. இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் 18 கன மீட்டர் கொள்ளளவு கொண்டதாக இருக்கும். வாகனங்களை வாங்குவதற்காக மன்ற கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

 

மாநகராட்சி புதிய பூமார்க்கெட் கடைகள் ரூழ25 லட்சத்திற்கு ஏலம் மீன் மார்க்கெட் மறு ஏலம் விட முடிவு

Print PDF

தினகரன் 04.09.2010

மாநகராட்சி புதிய பூமார்க்கெட் கடைகள் ரூழ25 லட்சத்திற்கு ஏலம் மீன் மார்க்கெட் மறு ஏலம் விட முடிவு

கோவை, செப். 4: கோவை மாநகராட்சிக்கு சொந்த மான புதிய பூமார்க்கெட் மற்றும் மீன் மார்க்கெட் கடைகளுக்கான ஏலம் நேற்று நடந்தது.

கோவை மேட்டுப்பாளை யம் ரோட்டில் மாநகராட்சி சார்பில் பூமார்க்கெட் அரு கில் நவீன பூமார்க்கெட் கடை கள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட இவ் வளாகம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது. இதற்கான மின் மற்றும் ஓபன் டெண்டர் நேற்று விடப்பட்டது. மொத்தமுள்ள 45 கடைகளும் ரூ.25 லட்சத்திற்கு (ஒரு ஆண்டிற்கு) ஏலம் போனது.

உக்கடத்தில் மாநகராட்சி மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. செல்வபுரம் பை பாஸ் ரோட்டில் 68 கடைக ளுடன் புதிய மீன் மார்க்கெட் வளாகம் அமைக்கப்பட்டுள் ளது. இதற்கான டெண்டர் (மின் மற்றும் ஓபன்) நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த 68 கடைகளும் ரூ.19 லட்சத்திற்கே ஏலத்தில் கேட்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்ணயித்த தொகையை விட (ரூ.20 லட்சம்) குறைவாக கேட்கப்பட்டுள்ளதால் மீன் மார்க் கெட் மறு ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 144 of 238