Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மேயர் தகவல் மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்காக கலர் டிவி

Print PDF

தினகரன் 04.09.2010

மேயர் தகவல் மாநகராட்சி மருத்துவமனைகளில் புறநோயாளிகளுக்காக கலர் டிவி

வேளச்சேரி, செப். 4: மாநகராட்சி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய புறநோயாளிகள் பிரிவில் கலர் டி.வி.வைக்கப்படும் என்று மேயர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தரமணியில் 12,468 பேருக்கு இலவச கலர் டி.வி. வழங்கும் விழா நேற்று நடந்தது. மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) பாலாஜி தலைமை வகித்தார். உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

இலவச கலர் டி.வி.க்களை வழங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

அரசு சார்பில் இதுவரை 1 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரம் கலர் டிவிக்கள் வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக டிவி வழங்கப்படும். குடிசை பகுதிகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரமணி பகுதியில் பெரும்பாலான தெருக்களில் சிமென்ட் சாலை போடப்பட்டுள்ளது. சொந்தமாக பட்டா நிலம், அரசு ஒதுக்கீடு பெற்ற வீட்டு மனைகளுக்கு மத்திய, மாநில அரசு நிதியுடன் வீடு கட்டுவதற்கு மாநகராட்சி ரூ1 லட்சத்து 17 ஆயிரம் வழங்குகிறது. முதலில் நீங்கள் ரூ13ஆயிரம் செலவழித்து அஸ்திவாரம் போட வேண்டும். இந்த திட்டத்தில் இந்த பகுதியை சேர்ந்த 26 பேர் பயன் அடைந்துள்ளனர்.

154வது வார்டுக்கு உட்பட்டவர்கள், இங்குள்ள வார்டு அலுவலகத்திலேயே சொத்துவரி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ2.5 கோடி செலவில் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதுவரை தமிழில் பெயர் வைத்த 3 ஆயிரத்து 500 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் உள்ளது. நடப்பு ஆண்டில் 17 ஆயிரம் முதல் 18 ஆயிரம் குழந்தைகள் வரை பிறந்துள்ளது. 93 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இசிஜி, சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் 167 மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள புறநோயாளிகள் பிரிவில் கலர் டிவி வைக்கப்படும். அதில் காமெடி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பப்படும். டாக்டரை பார்ப்பதற்கு முன்பு வரை நோயாளிகள் இதை கண்டுகளிக்கலாம்.

இவ்வாறு மேயர் பேசினார்.

விழாவில், துணை மேயர் சத்தியபாமா, எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மண்டல குழு தலைவர் ஜெயராமன், வார்டு உறுப்பினர் மீனாட்சி வெங்கட்ராமன், வேளச்சேரி பகுதி திமுக செயலாளர் மு.ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். செயற்பொறியாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

 

குப்பை சேகரிக்கும் வண்டி பணியாளரிடம் ஒப்படைப்பு

Print PDF

தினமலர் 03.09.2010

குப்பை சேகரிக்கும் வண்டி பணியாளரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி சார்பில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் குப்பை சேரிக்கும் வண்டி வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டது. குப்பை சேகரிக்கும் வண்டியை நகராட்சி தலைவர் ராஜா துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைத்தார்.

அதன்பின், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள நகர மக்களின் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பையை சேகரித்து பெரம்பலூர் அருகிலுள்ள கவுல்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிக்கும் கிடங்கில் சேகரிக்க உள்ளது.

அதனடிப்படையில் தற்போது எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான ஐம்பது குப்பை சேகரிக்கும் வண்டி நான்கு லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்த வண்டி மூலம் நகராட்சி துப்புரவு பணியாளர் மக்களின் வீடுகளுக்கு சென்று குப்பை சேகரிக்க உள்ளனர். இந்த வண்டியில் உள்ள பச்சை பெட்டியில் மக்கும் குப்பையும், சிகப்பு பெட்டியில் மக்காத குப்பையும் சேகரிக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் நகரை தூய்மையாக வைத்துக்கொள்ள இந்த வாகனங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நகராட்சி ஆணையர் (பொ) கருணாகரன், துணை தலைவர் முகுந்தன், கவுன்சிலர்கள் கருணாநிதி, சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் பன்னீர்செல்வம், பணி மேற்பார்வையாளர்கள் ராகவன், கோபி, மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 03 September 2010 09:40
 

கொளத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ.20 லட்சத்தில் தரை தளம்

Print PDF

தினமலர் 02.09.2010

கொளத்தூர் பஸ் ஸ்டாண்டில் ரூ.20 லட்சத்தில் தரை தளம்

மேட்டூர்: கொளத்தூர் பஸ் ஸ்டாண்டில் 20 லட்சம் ரூபாய் செலவில் தரை தளம் அமைக்கப்படுகிறது. அதற்காக பூமிபூஜை நேற்று நடந்தது. குண்டும், குழியுமாக காணப்பட்ட கொளத்தூர் பஸ் ஸ்டாண்டில் தரைதளம் அமைக்க டவுன் பஞ்., 20 லட்சம் ரூபாய் அரசு ஒதுக்கீடு செய்தது. தரை தளம் அமைப்பதற்காக பூமிபூஜை நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில் தி.மு.., மாவட்ட பொருளாளர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணி, டவுன் பஞ்., தலைவர் நடராஜன், டவுன் பஞ்., தி.மு.., செயலாளர் சதாசிவம், கவுன்சிலர்கள் உள்பட ஏராளமானோர் பூஜையில் பங்கேற்றனர்.

 


Page 145 of 238