Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

லிப்ட் வசதியுடன் சென்னையில் 7 நடைமேம்பாலங்கள்:மேயர் தகவல்

Print PDF

தினமலர் 31.08.2010

லிப்ட் வசதியுடன் சென்னையில் 7 நடைமேம்பாலங்கள்:மேயர் தகவல்

சென்னை:""சென்னையில் பாதசாரிகள் சாலையை குறுக்கே கடக்க வசதியாக, ஏழு இடங்களில் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.சைதாப்பேட்டை தாலுகா ஆபீஸ் சாலையில், மாஜிஸ்ரேட் கோர்ட் அருகில் 90 லட்ச ரூபாய் மதிப்பில், லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. ஐந்து, ஆறு மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட பணி மிகவும் மந்த கதியில் நடக்கிறது.

இந்நிலையில் மேயர், நடைமேம்பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்த போது கூறியதாவது:சைதாப்பேட்டை நடை மேம்பாலம் கட்டும் பணி செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். இதில், லிப்ட் வசதிகள் அமைக்கும் பணி நவம்பர் மாதத்திற்குள் முடிவுறும். இது போல், நகரில் மேலும் ஆறு இடங்களில் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்களை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு, ஒப்பந்தங்கள் கோரியுள்ளது.

ராஜாஜி சாலையில், பீச் ரயில் நிலையம் அருகில் 70 லட்ச ரூபாய் மதிப்பிலும், எழும்பூர் ரயில் நிலையம் அருகில், காந்தி இர்வின் சாலையில், 90 லட்ச ரூபாய் மதிப்பிலும் பாரிமுனை, என்.எஸ்.சி., போஸ் சாலையில் 80 லட்ச ரூபாயிலும், அடையார் தேஷ்முக் சாலையில் 80 லட்ச ரூபாயிலும், வாலாஜா சாலை- பெல்ஸ் சாøலா சந்திப்பில் 80 லட்ச ரூபாயிலும், வாலாஜா சாலை - காயிதே மில்லத் சாலை சந்திப்பில், 80 லட்ச ரூபாயிலும் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும். சென்னையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஐந்து கோடியே 70 லட்ச ரூபாய் செலவில், ஏழு இடங்களில் லிப்ட்டுடன் கூடிய நடை மேம்பாலங்கள் அமைக்கப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.

 

மாநகராட்சி தெற்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

Print PDF

தினகரன் 31.08.2010

மாநகராட்சி தெற்கு மண்டல புதிய அலுவலகம் திறப்பு

மதுரை, ஆக.31: மதுரை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்கான புதிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. மதுரை மேலமாரட் வீதியில் புதிய அலுவலகத்தை மேயர் தேன்மொழி திறந்து வைத்தார். மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், துணை மேயர் மன்னன் கலந்து கொண்டனர்.

கமிஷனர் செபாஸ்டின் கூறுகையில், ‘19 வார்டுகளை கொண்ட தெற்கு மண்டலத்திற்கான புதிய அலுவலகம் ரூ.2.25கோடி மதிப்பில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது கோட்டையில் இயங்கி வரும் தெற்குமண்டல அலுவலகம் இன்னும் 15நாட்களில் இந்த புதிய அலுவலகத்தில் முழுமையாக செயல்படும், என்றார். மண்டல தலைவர்கள் மாணிக்கம், குருசாமி, இசக்கிமுத்து, நாகராஜன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

ஏற வேண்டிய சிரமம் இல்லை 7 இடத்தில் லிப்டுடன் நடைமேம்பாலம்

Print PDF

தினகரன் 31.08.2010

ஏற வேண்டிய சிரமம் இல்லை 7 இடத்தில் லிப்டுடன் நடைமேம்பாலம்

சென்னை, ஆக. 31: மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் ரூ5 கோடியே 70 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் கட்டப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் தாலுகா ஆபீஸ் சாலையில் கட்டப்படும் லிப்டுடன் கூடிய நடைமேம்பால பணியை மேயர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நுங்கம்பாக்கம், ஸ்டர்லிங் சாலையில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ70 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள லிப்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை துணை முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே திறந்து வைத்துள்ளார்.

இதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, முதியவர்கள், பெண்கள் சாலையை கடக்கும் வகையில் சென்னையில் பல இடங்களில் லிப்ட் நடைமேம்பாலங்கள் கட்டப்படுகிறது.

ராயபுரம் பீச் ரயில் நிலையம் அருகே ரூ70 லட்சத்திலும், எழும்பூர் ரயில் நிலையம் அருகில் காந்தி இர்வின் சாலையில் ரூ90 லட்சத்திலும், பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில்

ரூ80 லட்சத்திலும், அடையார் துர்காபாய் தேஷ்முக் சாலையில் ரூ80 லட்சத்திலும், வாலாஜா சாலை & பெல்ஸ் சாலை சந்திப்பில் ரூ80 லட்சம், வாலாஜா சாலை & காயிதே மில்லத் சாலை சந்திப்பில் ரூ80 லட்சத்தில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. இப்படி 7 இடங்களில் ரூ5 கோடியே 70 லட்சம் செலவில் லிப்ட் நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது.

சைதாப்பேட்டையில் ரூ90 லட்சம் செலவில் லிப்ட் நடைமேம்பாலம் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நவம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

 


Page 147 of 238