Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 5 கோடியே 70 லட்சம் செலவில் சென்னையில் 7 இடங்களில் லிப்டுடன் நடை மேம்பாலம்; மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

Print PDF

மாலை மலர் 30.08.2010

ரூ. 5 கோடியே 70 லட்சம் செலவில் சென்னையில் 7 இடங்களில் லிப்டுடன் நடை மேம்பாலம்; மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ரூ. 5 கோடியே 70 லட்சம் செலவில் சென்னையில் 7 இடங்களில்
 
 லிப்டுடன் நடை மேம்பாலம்;
 
 மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

சென்னை, ஆக. 30- சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் தாலுகா ஆபீஸ் சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்படும் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலப் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பிறகு அவர் கூறியதாவது:-

துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நுங்கம்பாக்கம், ஸ்டர்லிங் சாலையில் ஏற்கனவே ரூ. 70 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை திறந்து வைத்துள்ளார்.

பொதுமக்கள் சாலைகளை கடப்பதற்காக நடை மேம்பாலங்கள் மாநகராட்சி மூலம் கட்டப்படுகிறது. முதியவர்கள் பயன்பாட்டிற்காக லிப்டுடன் கூடிய நடைமேம்பாலங்கள் கட்டப்படுகிறது.

சென்னை ராயப்புரம் பீச் ரெயில்வே நிலையம் அருகில் ராஜாஜி சாலையில் ரூ. 70 லட்சத்திலும், எழும்பூர் ரெயில்வே நிலையம் அருகில் காந்தி இர்வீன் சாலையில் ரூ. 90 லட்சத்திலும், பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ரூ. 80 லட்சத்திலும், அடையார் துர்காபாய் தேஷ்முக் சாலை யில் ரூ. 80 லட்சத்திலும், வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பில் ரூ. 80 லட்சத்திலும், வாலாஜா சாலை- காயிதே மில்லத் சாலை சந்திப்பில் ரூ. 80 லட்சத்திலும் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்க திட்டமிட்டு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை தாலுகா ஆபீஸ் சாலையில் ரூ. 90 லட்சம் செலவில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. நடைமேம்பாலப்பணி செப்டம்பர் மாதத்தில் முடிக்கப்படும்.

லிப்ட் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். ஆகமொத்தம் சென்னை மாநகரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக 7 இடங்களில் லிப்டுடன் கூடிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் ரூ. 5 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது.

இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்த ஆய்வில் மன்ற உறுப்பினர் எம். மகேஷ்குமார், மண்டல அலுவலர் என்.எஸ்.பிரேம்நாத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Last Updated on Monday, 30 August 2010 11:49
 

சமுதாயக் கூடம் திறப்பு

Print PDF

தினமணி 30.08.2010

சமுதாயக் கூடம் திறப்பு

பெரியகுளம், ஆக. 29: பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், அங்கன்வாடிக் கட்டடம் ஆகியவற்றின் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட அதிமுக செயலர் தங்க தமிழ்செல்வன் விழாவிற்குத் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எம்.செல்லமுத்து முன்னிலை வகித்தார். கெங்குவார்பட்டி பேரூராட்சித் தலைவர் ஏ.காட்டுராஜா வரவேற்றார்.கெங்குவார்பட்டி பேரூராட்சியைச் சேர்நத அம்சாபுரம், கோட்டார்பட்டி ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடம், அங்கன்வாடிக் கட்டடம் மற்றும் ஜி.கல்லுப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடிக் கட்டடம் ஆகியவற்றை முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட நிர்வாகிகள் என்.நல்லவேலுச்சாமி, எம்.அபுதாஹீர், சட்டப் பேரவை தொகுதிச் செயலர் என்.ஆண்டி, இணைச் செயலர் கே.ஜெயா கதிர்காமு, ஒன்றிய நிர்வாகிகள் வி.பிச்சைமணி (இலக்கியஅணி), என்.வி.சின்னச்சாமி, தாமரை கருப்பசாமி, கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர் ஏ.கலை அழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

புதை சாக்கடை திட்டப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு

Print PDF

தினமணி 27.08.2010

புதை சாக்கடை திட்டப் பணி டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்: அமைச்சர் உத்தரவு

திருவண்ணாமலை, ஆக. 26: திருவண்ணாமலை நகரில் புதை சாக்கடை திட்டப்பணிகளை டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என உணவுத் துறை அமைச்சர் எ..வேலு உத்தரவிட்டுள்ளார்.

|58 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் வேலு பேசியது:

திருவண்ணாமலை நகரில் புதை சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என்பது 30 ஆண்டுக்கால கனவாகும். பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் நகராட்சி நிர்வாகம் பங்குத் தொகை அளிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு நகரங்களில் புதை சாக்கடை பணிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகின்றன. அவற்றை ஒப்பிடும்போது திருவண்ணாமலை நகரில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதுவரை 95 சதவீதம் திட்டப்பணிகள் முடிந்துள்ளன.

திருவண்ணாமலை நகருக்கு பெüர்ணமி கிரிவலத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பணிகளை மேற்கொள்வதில் சிறிது பிரச்னை உள்ளது. புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் கெட்ட பெயர் உண்டாகும். எனவே, அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து இத்திட்டப் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும். புதை சாக்கடை திட்டப்பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டால் தேவையான நிதியை பெற்றுத் தரவும் தயாராக உள்ளேன் என்றார் வேலு.

 


Page 148 of 238