Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்

Print PDF

தினமணி 27.08.2010

பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்

கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.

கடலூர், ஆக. 26: கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை மட்டத்திலிருந்து 3 அடி வரை பள்ளத்துக்குள் போய்விட்டன.

2006-ம் ஆண்டு புதிய நகராட்சிக் கவுன்சில் பொறுப்பேற்றது. முந்தைய கவுன்சில் முயற்சியால் 2006-ல் நகரில் 100 சாலைகள் 4 கோடியில் அமைக்கப்பட்டன.

தார்த் தளம் அமைப்பதற்குள், பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுவதால், சாலைகள் போடக்கூடாது என்று, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். சாலைகள் ஒரு அடி உயரம் உயர்ந்ததுதான மிச்சம், பணிகள் நிறுத்தப்பட்டன.

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டி சிதைக்கப்பட்டன. அதில் அகற்றப்பட்ட மண் முழுவதும் சாலைகளிலேயே கொட்டி நிரவப்பட்டது. மழை பெய்ததும் சாலைகள் அனைத்தும் உழுத வயல்கள் போல் மாறின.

மக்கள் நடக்க முடியவில்லையே என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததால், கேப்பர் மலையில் இருந்து மீண்டும் களிமண் கலந்த சரளைக் கற்கள் கொண்டு வந்து சாலைகளில் கொட்டப்பட்டன.

இத்தகைய நடவடிக்கைகளால் சாலைகள் 2 அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டன. தற்போது மீண்டும் சாலைகள் அமைக்கும் திட்டத்தை நகராட்சி தொடங்க இருக்கிறது. முதல் கட்டமாக 50 கி.மீ. நீளச் சாலைகள் (நகரின் சாலைகள் மொத்த நீளம் சுமார் 200 கி.மீ.) அமைக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் து.தங்கராசு அறிவித்து உள்ளார்.

இச்சாலைகளும் 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல ஜல்லிகள் பரப்பி அதன்மீது தார்த்தளம் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்து இருக்கிறது. தார்ச்சாலை பழுதடைந்தால் அப்படியே தார்த்தளம் மட்டும் அமைக்க நகராட்சி காண்ட்ராக்டர்கள் வரமாட்டார்களாம். எப்போது சாலை அமைத்தாலும், 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல கருங்கல் ஜல்லி, அதற்கு மேல் தார்த்தளம் என்ற சாலைகளை அமைக்கத்தான் காண்ட்ராக்டர்கள் முன் வருகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.

நகராட்சியின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக கடலூரில் உள்ள 40 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், சாலை மட்டத்தில் இருந்து 2 அடி முதல் 3 அடி வரை, பள்ளத்துக்குள் போய்விட்டன. நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை நகருக்குள் பாய்ந்து கடலில் சங்கமிக்கின்றன. சுனாமியின் போது கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் கடல் நீர் புகுந்தது.

வீட்டுக் கழிவுகளை இணைக்கும் வகையில், 10 அடி முதல் 20 அடி ஆழமுள்ள 25 ஆயிரம் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் சாலைகளில் அமைக்கப்பட்டு, அவற்றில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு, மோட்டார் பம்புகளால் கழிவுநீர் உறிஞ்சப்படும் வகையில், பாதாளச் சாக்கடைத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சாலைகளில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இனி, மனிதர்கள் சுத்தம் செய்ய மாட்டார்கள், தொட்டியில் அடைப்பு ஏற்படாதவாறு மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி அறிவித்து உள்ளது. அடைப்பு ஏற்பட்டால் சாலைகளில் உள்ள சேகரிப்பு தொட்டிகளில் இருந்து, மனிதக் கழிவுகள் வழிந்தோடும் பட்சத்தில், பள்ளத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் அவை புகுவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்று, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

கடலூரில் 4 அடி தோண்டினால் நீர் ஊற்றெடுக்கும். இதனால் பாதாளச் சாக்கடை சேகரிப்பு தொட்டிகளுக்குள் இப்போதே, 1 குதிரைத் திறன் மோட்டார் மூலம் இறைக்கும் வகையில் நீர் சுரக்கிறது. சுரக்கும் நீரும் கழவு நீரும் சேர்ந்தால் அவற்றை எத்தனை திறன்கொண்ட மோட்டாராலும் வெளியேற்ற முடியாது.

கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் இதுகுறித்து கூறுகையில், சாலைகள் உயர்ந்ததால் எனது வீடும் 2 அடி பள்ளத்தில் போய்விட்டது.

பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப்பின், இதுபோன்ற நிலை சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இனி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

 

மாநகராட்சி திட்டச்சாலை நிலம் கபளீகரம்! திட்டங்கள் கேள்விக்குறி

Print PDF

தினமலர் 27.08.2010

மாநகராட்சி திட்டச்சாலை நிலம் கபளீகரம்! திட்டங்கள் கேள்விக்குறி

கோவை மாநகராட்சியில் புதிய "மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணி நடந்து வருகிறது; அடுத்த ஆண்டில் இது நடைமுறைக்கு வரும் வாய்ப்புள்ளது. புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது திட்டச் சாலைகள் அமைக்க, நகருக்குள் இடம் இருக்காது, என்ற நிலை உருவாகியுள்ளது. கோவை நகர முழுமைத் திட்டத்தில் குறிப்பிட் டுள்ள 125க்கும் அதிகமான உத்தேச திட்டச்சாலைகளில், 100க்கும் அதிகமான திட்டச்சாலைகளுக்கான இடங்கள் பெருமளவில் விற்கப்பட்டுள்ளன;

 மீதமிருக்கும் இடங்களும் கபளீகரம் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. கடந்த 18 ஆண்டுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே திட்டச்சாலைகள் அமைக் கப்பட்டுள்ளன. இன்னும் பல இடங்களில் திட்டச்சாலை அமைப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும், அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து தடுத்து வருகின்றனர். "விரிவு அபிவிருத்தித் திட்டம் மற்றும் மனைப் பிரிவுகளில் பொதுஒதுக்கீட்டு இடமாக ஒதுக்கப்பட்ட 10 சதவீத இடங்களை, வேறு பயன்பாட்டுக்கு மாற்றி அமைக்கக் கூடாது' என்று சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் தீர்ப்புகளில் பல முறை உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. இந்த தீர்ப்புகளை அமல்படுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை நிற்கிறது. மாநகராட்சியின் மெத்தனத்தால், உத்தேச திட்டச்சாலைக்காக வரையறுக்கப்பட்ட இடங்களின் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நடந்துள்ள ஊழல் பணத்தை வைத்தே, திட்டச்சாலை இடங்களை விலை கொடுத்து வாங்கியிருக்கலாம். ஆனால், கடந்த 1996ம் ஆண்டிலிருந்து அடுத்தடுத்து பொறுப்புகளுக்கு வந்த மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளும், மாநகராட்சி அதிகாரிகளும் "பணம் குவிப்பதில்' காட்டிய அக்கறையை திட்டச்சாலைகள் அமைப்பதில் காட்டாதது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இருந்த எல்லா மாமன்ற மக்கள் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு இப்போதுள்ள சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டுகின்றனர். அது மட்டுமின்றி, இதுவரை "சும்மா' கிடந்த நிலங்களையும் "பிளாட்' போட்டு விற்கும் வேலையிலும் இறங்கி விட்டனர். இதற்காக, திட்டச் சாலைகளை நில உபயோக மாற்றம் செய்யவும், அகலத்தை குறைக்கவும் அடுத்தடுத்து மாநகராட்சி மன்றத்தில் தீர்மானங்கள் முன்மொழியப்படுகின்றன. கோவை ராமநாதபுரத்தில் 100 அடி திட்டச் சாலையை 60 அடியாக குறைக்க இந்த மன்றம் ஏற்கனவே பரிந்துரைத்து அனுப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, மசக்காளிபாளையத்தில் உள்ள 80 அடி திட்டச் சாலையை 60 அடியாக குறைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. இதேபோல, இன்னும் பல திட்டச்சாலைகளுக்கான இடங்கள், சத்தமின்றி கபளீகரம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்கின்றன. பீளமேட்டில் வருங்கால வைப்பு நிதி குடியிருப்புக்கு நடுவே செல்லும் திட்டச்சாலையை முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐகோர்ட் அறிவுறுத்தி, மாதங்கள் பல கடந்தும் ஒரு நடவடிக்கையும் இல்லை.

இந்த இடங்களை மாநகராட்சி எடுக்காததற்கு நிதிப்பற்றாக்குறை மட்டுமே காரணமில்லை; இந்த இடங்களுக்கு இன்றுள்ள சந்தை மதிப்பு பல கோடி ரூபாய் என்பதும் முக்கிய காரணம். இதேபோல, பூங்காக்களுக்குள் கட்டடம் கட்டுவது, சாலை அமைப்பது என பல வழிகளிலும் நகர ஊரமைப்பு விதிகளையும், கோர்ட் உத்தரவுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மீறி வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சிலரது கூட்டணியில் மாயமாகி வரும் திட்டச்சாலைகள் மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களால், கோவை நகரின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகி வருகிறது. தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் திட்டச் சாலைகள், இணைப்புச் சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கான இடங் கள் எல்லாம் தனியார் கைக்கு மாறி விடும் அபாயமிருக்கிறது. இவ்விஷயத்தில், தமிழக அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

"நகராத' திட்ட அலுவலர்: கோவை மாநகராட்சி நகர திட்ட அலுவலராக 7 ஆண்டுகளாக மாற்றமின்றி பணியாற்றி வரும் சவுந்தரராஜன், இந்த திட்டச்சாலைகள் மற்றும் பொது ஒதுக் கீட்டு இடங்களை காப் பாற்ற எந்த வகையிலும் முயற்சி எடுக்கவில்லை. கோவையிலிருந்து மாறாமல் இருப்பதற்காக மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவுடன் மன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்ததில் இருந்தே, இவர் இங்கு தொடர்ந்து பணியாற்றுவதால் இரு தரப்பினரும் அடையும் பலன்கள் குறித்த கேள்விகள் எழுகின்றன.

- நமது நிருபர் -

 

நகர நல மையத்துக்கு இடம் தேர்வு

Print PDF

தினமணி 26.08.2010

நகர நல மையத்துக்கு இடம் தேர்வு

திண்டிவனம்,ஆக. 25: திண்டிவனம் நகர மக்களுக்கு நல மையம் அமைப்பதற்கான இடமாக நகராட்சியின் சமுதாயக் கூடத்தை நகர்மன்றத் தலைவர் தலைமையில் அதிகாரிகள் புதன்கிழமை தேர்வு செய்தனர்

நகரில் ஏற்கெனவே இரண்டு இடங்களில் நல மையம் அமைக்கப்பட்டுள்ளது. கிடங்கல் 2 மற்றும் அவரப்பாக்கம் ஆகிய இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த நல மையம் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் போனது.

÷இந்நிலையில் நகராட்சியின்கீழ் இயங்கி வரும் சமுதாயக் கூடம் அமைந்துள்ள இடத்தை தாற்காலிக நல மையம் அமைப்பதற்காக நகர்மன்றத் தலைவர் பூபாலன் தலைமையில் ஆணையர் முருகேசன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு இந்த இடத்தை தேர்வு செய்தனர்.

÷இங்கு அமையவுள்ள நல மையத்தில் ஒரு மருத்துவ அதிகாரி, இரண்டு மகப்பேறு உதவியாளர், மகப்பேறு உதவியாளர் என மொத்தம் 7 இடங்களுக்கு பணியாளர் நியமிக்கப்பட்டு நகர நல மையம் செயல்பட உள்ளதாக ஆணையர் முருகேசன் கூறினார்.

 


Page 149 of 238