Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

தெற்கு மண்டல அலுவலகம் ஆக.30-ல் திறப்பு

Print PDF

தினமணி 26.08.2010

தெற்கு மண்டல அலுவலகம் ஆக.30-ல் திறப்பு

மதுரை, ஆக. 25: மதுரையில் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் வரும் 30-ம் தேதி திறக்கப்படவுள்ளது என, மாநகராட்சி கமிஷனர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் தெரிவித்துள்ளதாவது: மதுரை மாநகராட்சி சார்பில் மேலமாரட் வீதியில் தெற்கு மண்டல அலுவலகம் ரூ.2 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 31 முதல் 43 வரையும் 60 முதல் 65 வரையான 19 வார்டுகள் தெற்கு மண்டலத்துக்கு உள்பட்டவை. புதிய அலுவலகத்தை வரும் 30-ம் தேதி மேயர் கோ. தேன்மொழி திறந்து வைக்கிறார். துணை மேயர் பி.எம். மன்னன் முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார்.

 

அண்ணா நகர் ஆர்ச், நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் ரூ120கோடியில் 2 மேம்பாலம்; ஒரு சுரங்கப் பாலம் ? வி.சி.மணி

Print PDF

தினகரன் 26.08.2010

அண்ணா நகர் ஆர்ச், நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் ரூ120கோடியில் 2 மேம்பாலம்; ஒரு சுரங்கப் பாலம் ? வி.சி.மணி

சென்னை, ஆக. 26: நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு மற்றும் அண்ணா நகர் ஆர்ச் சந்திப்பு பகுதியில் ரூ20 கோடி செலவில் இரண்டு மேம்பாலம், ஒரு சுரங்கப்பாலம் கட்டப்பட உள்ளது. இதன்மூலம் சிக்னலில் சிக்காமல் வாகனங்கள் செல்ல முடியும்.

சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்து இல்லாத நிலையை உருவாக்கவும் நெடுஞ்சாலைகளில் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணியை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் மேற்கொண்டு வருகிறது.

சென்னை பிரதான சாலையாக திகழும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (.வெ.ரா நெடுஞ்சாலை), அண்ணா நகரின் நுழைவு பகுதியாக இருக்கும் அண்ணா நகர் ஆர்ச் சந்திப்பிலும், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை அண்ணா நகருடன் இணைக்கும் முக்கிய சாலைகளான நெல்சன் மாணிக்கம் சாலை & பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் பல ஆயிரம் வாகனங்கள் தினசரி செல்கின்றன. அதனால் நெரிசலில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்.

இதை கருத்தில் கொண்டு நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு, அண்ணா நகர் ஆர்ச் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னலே இல்லாமல் வாகனங்கள் விரைவாக செல்லும் வகையில், அதிகநவீன தொழில்நுட்பத்துடன் சுரங்கப்பாதை உள்ளடக்கிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி பெங்களூரைச் சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து சிக்னலே இல்லாத மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கான வரைபடத்தை தயாரித்து தமிழக அரசு நெடுஞ்சாலை துறையிடம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தின்படி நெல்சன் மாணிக்கம் மற்றும் அண்ணா நகர் ஆர்ச் சந்திப்புகளில் சிக்னலில் வாகனங்கள் நிற்காமல் செல்ல வசதியாக இரண்டு மேம்பாலங் களும், ஒரு சுரங்க பாலமும் கட்டப்பட உள்ளது. முதல் மேம்பாலம் நெல்சன் மாணிக்கம் சாலையில் தொடங்கி, தற்போது சிக்னல் உள்ள (ஈவெரா நெடுஞ்சாலை) பகுதியையும் தாண்டி, அண்ணா ஆர்ச் பகுதியில் வந்து இறங்கும். இது ஒரு வழி பாதையாக இருக்கும். நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள் இந்தப் பாலத்தில் செல்லலாம்.

2வது மேம்பாலம் நெல்சன் மாணிக்கம் சாலை, ஈவெரா நெடுஞ்சாலை சிக்னல் அருகில் இருந்து தொடங்கி, அண்ணா நகர் ஆர்ச் சிக்னல் பகுதிக்கு மேலே சென்று அண்ணாநகர் 3வது அவின்யூ சாலையில் முடியும். இதே பாலத்தில், நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து வலது பக்கம் திரும்பி சென்ட்ரல் செல்பவர்களும் ஏறிச் செல்லலாம். இவர்களுக்கு வசதியாக இந்த பாலத்தின் மத்தியில், அதாவது ஆர்ச் தாண்டியதும், ஒரு தனி பாதை மூலிகை பண்ணை வழியாக, கீழே இறங்கி பூந்தமல்லி சாலையில் தரை பகுதிக்கு வந்து இணைக்கப்படும்.

மேலும் நெல்சன் மாணிக்கம் சாலையில் இருந்து வருகிறவர்கள் முதல் பாலத்துக்கு கீழே வந்து, 2வது பாலத்தில் ஏறி, அண்ணா நகர் செல்லலாம். ஈவெரா நெடுஞ்சாலையில் வருகிறவர்களும் 2வது பாலத்தில் ஏறி அண்ணா நகர் செல்லலாம். கீழே இப்போதுள்ள சாலையில், கோயம்பேடு செல்கிறவர்கள் நேராக சிக்னலில் நிற்காமல் போகலாம்; வரலாம்.

3வது பாலம் சுரங்க பாலமாக கட்டப்பட உள்ளது. இந்த பாலம் அண்ணா நகர் 3வது அவின்யூவில் இருந்து துவங்கி அண்ணா நகர் ஆர்ச் சிக்னல் பகுதி வழியாக திரும்பி, கோயம்பேடு செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தரை பாதையில் இணைக்கப்படும். இந்த சுரங்க பாலத்தில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள் மட்டுமே செல்ல முடியும்.

இந்த பகுதியில் இரண்டு மேம்பாலம், ஒரு சுரங்க பாலம் அமைந்தாலும், கோயம்பேடு & சென்ட்ரல், சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு செல்பவர்கள் வழக்கமான பாதையில் செல்லலாம். இதில் எந்த மாற்றமும் இருக்காது. மூன்று பாலங்களும் 600 மீட்டர் முதல் 700 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும்.

ரூ120 கோடியில் இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பாலம் அமைப்பதற்கான வரை படம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணி துவங்குவதற்கான டெண்டர் விடப்படும். இந்த பாலம் பணிகள் முடிந்தால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலையில் எல்லா வாகனங்களும் தங்குதடையின்றி செல்ல முடியும்.

 

பயன்பாடின்றி எரிவாயு தகன மேடை பண்ருட்டியில் ரூ.58 லட்சம் வீண்

Print PDF

தினமலர் 26.08.2010

பயன்பாடின்றி எரிவாயு தகன மேடை பண்ருட்டியில் ரூ.58 லட்சம் வீண்

பண்ருட்டி : பண்ருட்டியில் 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையோரம் நகராட்சி சார்பில் 43 லட்சம் ரூபாய் செலவில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது. ஆற்றங்கரையோரம் உள்ளதால் மழைக் காலத்தில் வெள்ளத்தில் வீணாகி விடும் என்பதால் 15 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட்டால் ஆன சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுற்றுச்சுவர், தியான மண்டபம், ஆர்ச், சாலை அமைக்க கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு முடிவு செய்யப்பட்டு 15 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் துவங்கி பாதியில் நின்றது. இதற்கிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி காடாம்புலியூர் வருகை தந்த துணை முதல்வர் ஸ்டாலின் நவீன எரிவாயு தகன மேடையை துவக்கி வைத்தார். அதன் பின் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அனாதை பிணத்தை எரித்து சோதனை செய்தனர். ஆனால் தியான மண்டபம் உள்ளிட்ட பணிகள் முடிவு பெறாத நிலையில் உள்ளது. அரசு திட்டபடி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணிகளை முடிக்காமல் ஒன்னரை ஆண்டை வீணடித்துள்ளதால் தற்போது திட்ட மதிப்பீடு உயர்ந்துள்ளது மட்டுமின்றி எரிவாயு மிஷன் செயல் படாமல் வீணாகி வருகிறது.

 


Page 150 of 238