Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

பழுதடைந்த பழைய பஸ் நிலைய விடுதி

Print PDF

தினமணி 24.08.2010

பழுதடைந்த பழைய பஸ் நிலைய விடுதி

சேலம், ஆக. 23: சேலம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள பழுதடைந்த விடுதி கட்டடங்களை மாநகராட்சி ஆணையாளர் கே.எஸ்.பழனிசாமி, திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.

சேலம் பழைய பஸ் நிலையத்தில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைகளுக்கு மேலே தங்கும் விடுதி உள்ளது. இதில், சுமார் 20 அறைகள் உள்ளன. இவை யாவும் பஸ் நிலையம் அமைக்கப்பட்டபோது கட்டப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இந்தக் கட்டடங்கள் பழுதடைந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் ஆபத்தான நிலையில் கட்டடம் இருப்பது குறித்தும், இதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் கட்டடத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சேலம் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் பேரில், ஆணையர் பழனிச்சாமி பஸ் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி கட்டடங்களை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, பஸ் நிலையத்தில் உள்ள தங்கும் விடுதி, தனியார் வசம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இது, பழுதுபார்க்கப்பட்டு சுமார் 15 ஆண்டுகள் ஆன நிலையில் இங்குள்ள கட்டடங்கள் மழையில் ஊறி, மோசமான நிலையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் மாநகராட்சிப் பொறியாளர்கள் இதை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்கின்றனர்.

அதன் பேரிலேயே கட்டடத்தின் தரம் குறித்துக் கூற முடியும். இதை இடித்துவிட்டு கட்டுவதா, பழுதுபார்ப்பதா என்பது அதன் பிறகு முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

Last Updated on Tuesday, 24 August 2010 09:56
 

ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

Print PDF

தினகரன் 24.08.2010

ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி, ஆக.24: தூத்துக்குடி 1வது, 2வது ரயில்வே கேட்களில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.

தூத்துக்குடியில் ரூ.4.95 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலகத்தை கடந்த 5ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டா லின் திறந்து வைத்தார். இங்கு நேற்று முதல் கூட்டம் நடந்தது. முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசியதாவது:

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்பு பணி 2ம் கட்டமாக துவங்கி நடந்து வருகிறது. அண்ணாநகரில் இருந்து திரேஸ்புரம் வரை சாலை அமைக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. பாதாளசாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட பகுதிகளில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கவும், பராமரிக்கவும் ரூ.10 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்வர், துணைமுதல்வர் விரைவில் ஒப்புதல் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நகர போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதமாக 1, 2வது ரயில்வே கேட் பகுதிகளில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சிக்கு மேயர் கஸ்தூரிதங்கம், கமிஷனர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைமுக பொறுப்பு கழக உறுப்பினர் பெரியசாமி, பொறியாளர் ராஜகோபால், மாவட்ட திமுக துணை செயலாளர் அருணா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார். அருகில் மேயர் கஸ்தூரிதங்கம்.

 

விடுபட்ட இடங்களுக்கு விரைவில் பாதாள சாக்கடை திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 20.08.2010

விடுபட்ட இடங்களுக்கு விரைவில் பாதாள சாக்கடை திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி முடிவு

கரூர், ஆக. 20: விடுபட்ட இடங்களுக்கு பாதாள சாக் கடை அமைக்கவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் கரூர் நகராட்சி முடிவு செய்துள் ளது.

கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சி பகுதிகளில் உள்ள காவிரி மற்றும் அமரா வதி ஆறுகள் மாசுபடுவதை தவிர்க்கும் பொருட்டு தேசிய நதிநீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.35 கோடி யில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் மானியத் தொகை, நகராட்சிகளின் பங்களிப்பு தொகையுடன் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தினால் திட் டம் நிறைவேற்றப்பட்டு வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 9 ஆயிரம் இணைப்புகள் வரையே வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் கணக்கிடப்பட்டு இந்த இணைப்பு பிரித்து கொடுக்கப்பட்டு வருகிறது. கரூர் பாலம்மாள்புரத்தில் கரூர் மற்றும் இனாம் கரூர் நகராட்சிகளில் இருந்து வெளியேற்றப்படும் பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

கரூர் நகராட்சியை பொறுத்தளவில் பாதாள சாக்கடை பணிகள் முடிவுற்ற 36 வார்டுகளிலும் 25,112 கி.மீ திட்டப்பணிகள் விடுபட்டுள்ளது என கண்டறிப்பட்டிருக்கிறது. இப்பகுதிக்கு இணைப்புகளை வழங்க நகராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த பகுதிகளில் புதைவடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டால்தான் திட்டப்பணியினை முழுமை யாக செயல்படுத்த இயலும் என்பதால் பாதாள சாக் கடை திட்டப்பணிகள் விடு பட்ட பகுதிகளில் பணி மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு திட்ட ஆலோசகரை நியமனம் செய்யவும், அதற்குண்டான கட்டணத்தை திட்ட செயலாக்க நிதியிலிருந்து, வழங்க அனுமதி வேண்டி நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுமதி கேட்டு முன்மொழிவு அனுப்பப்பட்டிருக்கிறது என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 20 August 2010 09:53
 


Page 152 of 238