Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

மயிலாடி உழவர்சந்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்

Print PDF

தினகரன் 20.08.2010

மயிலாடி உழவர்சந்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்

அஞ்சுகிராமம், ஆக. 20: மயி லாடி பேரூராட்சி அலுவலகத்தில் வாரசந்தை, சுகாதார வளாகம் மற்றும் படிப்பகம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகித்தார். அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு வாரசந்தை, சுகாதார அலுவலகம் மற் றும் படிப்பகத்தை திறந்து வைத்துபேசினார். அவர் கூறியதாவது:

தி.மு.. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. வாக்குறுதியில் இடம்பெறாத ஏழைகளின் உயிர்காக்கும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பல நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் மூலம் பல லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர். 5 லட் சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மயிலாடி பேரூராட்சி வளர்ச்சி பணிகளுக்கு அரசு சார்பில் ரூ.2 கோடி 65 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று 55 பணிகளும், சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து ரூ. 31 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்று 18 பணி களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மயிலாடி உழவர்சந் தையை மயிலாடி பேரூ ராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது குறித்து மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை நடத்தி விரைவில் பேரூ ராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கன்னியாகுமரி தொகுதி மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு தமிழக துணை முதல்வர் 70 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இப்பணிகள் ஓர் ஆண்டுக்குள் முடியும். இவ்வாறு அவர் பேசி னார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு தலைவர் ஜி.எம்.ஷா, தென்னக ரயில்வே ஆலோ சனை குழு உறுப்பினர் தாமரை பாரதி, தொலைபேசி ஆலோசனை குழு உறுப்பினர் பொன்.சின்னத்துரை, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் சோமு, பேரூராட்சி தலைவர் அழகப்பபுரம் டேவிட், கொட்டாரம் யோபு, சுசீந்திரம் சுப்பிரமணியபிள்ளை, அகஸ்தீஸ்வரம் பொன்னம்பெருமாள், தேரூர் முத்து, அரசு வக்கீல் மதியழகன், மயிலாடி பேரூ ராட்சி கவுன்சிலர்கள், துணைதலைவர் சிவதாணு உள்பட பலர் கலந்து கொண்டனர். மயிலாடி பேரூராட்சி செயலர் அலு வலர் செண்பக பாண்டியன் நன்றி கூறினார்.

 

மேம்பாலம் 29ம் தேதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

Print PDF

தினமலர் 19.08.2010

மேம்பாலம் 29ம் தேதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

பட்டாபிராம் : ""பட்டாபிராம், திருநின்றவூர் மேம்பாலம் உள்ளிட்ட ஐந்து பாலங்கள் வரும் 29ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,'' என நெடுஞ்சாலை துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், திருநின்றவூரில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்பாலங்களை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் பார்வையிட்டார். பின், நிருபர்களிடம் கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாபிராம், திருநின்றவூர் ரயில்வே மேம்பாலங்களும், வெள்ளவேடு, செங்குன்றம் மற்றும் கேசவராஜகுப்பம் சாலையில் 31.17 கோடி செலவில் ஐந்து பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.வண்டலூர் - நெமிலிச்சேரி வரை ரூ.1,082 கோடி செலவில் அமையவுள்ள ஆறு வழிப்பாதை திட்டம், போரூர் சிக்னலில் ரூ.35 கோடி செலவில் அமையவுள்ள நான்குவழி உயர்மட்ட மேம்பாலம், முகப்பேர் அருகே கூவம் ஆற்றில் ரூ.16 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம், சடையங்குப்பம் பக்கிங்காம் கால்வாயில் ரூ.16.5 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்படவுள்ளன. வரும் 29ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், கட்டி முடிக்கப்பட்ட பாலங்களை திறந்து வைத்து, புதிய திட்டத்திற்கான அடிக்கல் நாட்டுகிறார்.இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Last Updated on Thursday, 19 August 2010 08:35
 

சாக்கடை வசதி: பூமி பூஜை

Print PDF

தினமணி 18.08.2010

சாக்கடை வசதி: பூமி பூஜை

காரைக்கால், ஆக. 17 : கோட்டுச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோயில்பத்து, வேட்டைக்காரன் தெருவில் சாக்கடை வசதி ஏற்படுத்துவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கோயில்பத்து, வேட்டைக்காரன் தெருவில் புதிதாக சாக்கடை வசதி ஏற்படுத்துவதற்கு ரூ. 7.12 லட்சம் மதிப்பீடு தயார் செய்து காரைக்கால் நகராட்சி சார்பில் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

இதற்கான பூமி பூஜையில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி. ஓமலிங்கம் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் நகராட்சி உதவிப் பொறியாளர் ரவி, இளநிலைப் பொறியாளர் அருள்மொழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். திட்டப் பணியை குறித்த காலத்துக்குள் முடித்துவிடுமாறு அதிகாரிகளை பேரவை உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

 


Page 153 of 238