Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சிந்தாமணியில் விரைவில் திருமண மண்டபம்: மாநகராட்சி கமிஷனர்

Print PDF

தினமணி 12.08.2010

சிந்தாமணியில் விரைவில் திருமண மண்டபம்: மாநகராட்சி கமிஷனர்

மதுரை, ஆக.11: மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி சார்பில் விரைவில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என, கமிஷனர் எஸ். செபாஸ்டின் தெரிவித்தார்.

மாநகராட்சி மண்டலத்துக்கு உள்பட்ட 44 முதல் 59 வரையிலான வார்டுகளின் மக்கள் குறைதீர் கூட்டம், மேயர் கோ.தேன்மொழி தலைமையில் நடைபெற்றது. கமிஷனர் செபாஸ்டின் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், குடிநீரில் சாக்கடை கலப்பதை சரி செய்தல், பாதாளச் சாக்கடை அமைத்தல், தெரு விளக்கு வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் மேயரிடம் அளிக்கப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கிழக்கு மண்டலம் சார்பில் சிந்தாமணி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான காலியிடத்தில் திருமண மண்டபம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அப்பகுதியில் கட்டப்படும் என கமிஷனர் தெரிவித்தார். முகாமில் மண்டல அதிகாரிகள், உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரிகளுக்கு கடைகள்

Print PDF

தினமணி 12.08.2010

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரிகளுக்கு கடைகள்

மதுரை, ஆக. 11: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வாழை இலை வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கக் கோரிய மனுவை, மதுரை மாநகராட்சி 30 நாள்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

இதுகுறித்து, மதுரை சென்ட்ரல் மார்க்கெட் வாழை இலை கமிஷன் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு:

பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் கமிஷன் அடிப்படையில் வாழை இலை வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கென கடைகள் அங்கு ஒதுக்கப்பட்டு, பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. எங்கள் சங்கத்தில் 19 பேர் உறுப்பினர்களாக உள்ளோம்.

சென்ட்ரல் மார்க்கெட் இடநெருக்கடி காரணமாக, மாட்டுத்தாவணிக்கு மாற்றப்பட உள்ளது. எங்களுக்கு அங்கு மேற்குப் பகுதியில் கடைகளை ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தோம். அதில் நடவடிக்கை இல்லை.

மேற்குப் பகுதி கடைகள் வேறு வர்த்தகர்களுக்கு ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது. அந்தப் பகுதி கடைகளுக்கு முன்பணமான ரூ.60,000 பெற்றுக்கொண்டு, வாழை இலை வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தருமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால், மனுதாரர்கள் ஏற்கெனவே அளித்துள்ள மனுவை 30 நாள்களுக்குள் மதுரை மாநகராட்சி ஆணையர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

 

அம்பை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் துணை முதல்வர் திறக்கிறார்

Print PDF

தினகரன் 05.08.2010

அம்பை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிய கட்டிடம் துணை முதல்வர் திறக்கிறார்

அம்பை, ஆக.5 : அம்பை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடு தல் கட்டிடத்தை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் பொதுமக்கள் குடிநீர் கட்ட ணம், சொத்துவரி செலுத்துவதற்கான கூடுதல் கவுன்டர்கள், நகராட்சி தலைவருக்கான அறை, நிர்வாக அதிகாரி அறை மற்றும் கூட்ட அரங்கு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. ரூ.50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய கட்டிடத்தை நாளை 6ம் தேதி துணை முதல்வர் மு..ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இவ்விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், கலெக்டர் ஜெயராமன், நகராட்சி தலைவர் பிரபாகரபாண்டியன், நிர்வாக அதிகாரி அண்ணாமலை, துணைத்தலைவர் அந்தோணிச்சாமி மற்றும் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடந்தது. காசி மணி தலைமை வகித்தார். ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் விஜயன், வேல்சாமி, சுரண்டை நகர செயலாளர் முத்துக்குமார், ஓவியர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரணி ஊராட்சி தலைவர் அருணோதயம் வரவேற்றார்.

துணை முதல்வர் மு..ஸ்டாலின் வருகை குறித்து ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் பேசினார்.

கூட்டத்தில் கோவை செம்மொழி மாநாட்டை சிறப்புற நடத்திய முதல்வர் கருணாநிதி, 25 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய கனிமொழி எம்.பி.யை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாளை தென்காசி வரும் துணை முதல்வர் ஸ்டாலினுக்கு எல்லைப்புளியில் சிறப்பான வரவேற்பு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் ரவிச்சந்திரன், சுதன், தளவாய்சாமி, பொன்பாண்டி, நியூட்டன், பரசுராமன், சீனித்துரை, ஆசிரியர் ராஜவேல், வைத்தீஸ்வரி, அந்தோணிசாமி, தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இடையர்தவணை ஊராட்சி தலைவர் ராமசாமி நன்றி கூறினார்.

அம்பையில் கட்டப்பட்டுள்ள புதிய நகராட்சி அலுவலகத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறக்கிறார்.
 


Page 156 of 238