Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

உடுமலை ரோடுகளில் குவியும் மண்ணை அள்ள 20 வண்டிகள் நகராட்சி வாங்கியது

Print PDF

தினகரன் 04.08.2010

உடுமலை ரோடுகளில் குவியும் மண்ணை அள்ள 20 வண்டிகள் நகராட்சி வாங்கியது

உடுமலை,ஆக.4: உடுமலை ரோடுகளில் குவியும் மண்ணை அப்புறப்படுத்த 20 வண்டிகளை நகராட்சி நிர்வாகம் வாங்கி உள்ளது.

உடுமலையில் பொள் ளாச்சி& பழனி ரோடு, தாரா புரம் ரோடு, தளி ரோடு, ராஜேந்திரா ரோடு, திருப்பூர் ரோடு ஆகிய பகுதிகளில் மண் குவிந்துள்ளது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அடித்து வரப்படும் மண் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. காற்றில் இந்த மண் பறப்பதால் ரோட்டில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்களில் விழுந்து அதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் ரூ.1.75 லட்சத்தில் 20 வண்டிகளை வாங்கி உள்ளது. மண்ணை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் கொண்டு போய் கொட்டுவதற்கு இந்த வண்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இத்தகவலை நகராட்சி சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

உடுமலை ரோடுகளில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்றி சுத்தப்படுத்த நகராட்சி நிர்வாகம் 20 வண்டிகளை தருவித்துள்ளது.

 

கோரிப்பாளையத்தில் ரூ.3 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம்

Print PDF

தினமணி 03.08.2010

கோரிப்பாளையத்தில் ரூ.3 கோடியில் நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம்

மதுரை,ஆக. 2: மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.3 கோடி செலவில் நகரும் படிக்கட்டுகளுடன் நடைமேம்பாலம் கட்டப்பட உள்ளது. அப்பகுதி போக்குவரத்தை சீராக்க மாநகராட்சி உதவியுடன் மாநகர் போலீஸôர் இந்தத் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.

மதுரை மாநகரில் போக்குவரத்தைச் சீராக்க பல்வேறு நடவடிக்கைகளை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியன் மேற்கொண்டுவருகிறார். மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களையும் போலீஸôர் மேற்கொண்டுவருகின்றனர்.

பெரியார் பஸ்நிலையப் பகுதியில் கட்டபொம்மன் சிலையைச் சுற்றியிருந்த பெரிய ரவுண்டான அமைப்பை குறுகியதாக்கி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது நல்ல பலனை அளித்துள்ளது.

கோரிப்பாளையம் பகுதியில் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களுக்குச் செல்வோரும் கோரிப்பாளையத்தையே வழியாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதன் காரணமாக கோரிப்பாளையம் பகுதியில் காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

தினமும் சுமார் 1 லட்சம் வாகனங்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை பகுதியை கடந்துசெல்வதாகவும் போக்குவரத்துப் போலீஸôர் கூறுகின்றனர். தற்போது தத்தனேரி ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறுவதால், பாலம் ஸ்டேஷன் சாலையில் இருந்து கோரிப்பாளையம் வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தத்தனேரி ரயில்வே மேம்பாலம் பணிமுடிந்து போக்குவரத்து தொடங்கினால், திண்டுக்கல் பகுதியிலிருந்து திருச்சி, சிவகங்கை என பல பகுதிகளுக்கும், மாட்டுத்தாவணி பஸ் நிலையப் பகுதிக்கும் செல்லவேண்டிய அனைத்துவகை வாகனங்களும் கோரிப்பாளையத்தைக் கடந்துசெல்ல நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் கோரிப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகும் எனவும் போக்குவரத்து போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து கோரிப்பாளையம் தேவர் சிலை பின்புறம் தற்போது பாதசாரிகள் சிக்னலைக் கடக்கும் வழியில் சுமார் 25 அடி உயரத்தில் நடைமேம்பாலம் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இப்பாலம் ரூ.3 கோடியில் அமைக்கப்படும் நிலையில் பாதசாரிகள் பாலத்தில் ஏறும் இடத்திலும், இறங்கும் இடத்திலும் நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக கோரிப்பாளையத்தில் பாலம் அமையும் இடத்தில் மாநகராட்சி பொறியாளர்கள் பாலம் அமையும் பகுதியை அளவீடு செய்து இத் திட்டத்தை இறுதிசெய்துள்ளனர்.

நகரும் படிக்கட்டுடன் கோரிப்பாளையத்தில் 2 இடங்களில் நடைமேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து சிக்கல் முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மருத்துவமனை சுரங்கப்பாதை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் அவசர சிகிச்சை வழியின் முன் அமைக்கப்பட்ட சுரங்க நடைபாதை தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. இதற்குக் காரணம், மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், நோயாளிகள் சுரங்கப்பாதை படிக்கட்டில் ஏறி இறங்க முடியாமல் சாலையைக் கடந்துசெல்கின்றனர்.

ஆகவே மருத்துவமனை முன் உள்ள சுரங்க நடைபாதையிலும் நகரும் படிக்கட்டுகள் அமைத்தால் பொதுமக்கள் அதிகளவில் அவ்வழியைப் பயன்படுத்தும் நிலை ஏற்படும்.

கோரிப்பாளையத்தில் நகரும் படிக்கட்டுடன் நடைமேம்பாலம் அமைக்கும் போது சுரங்கப்பாதையிலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்க மாநகராட்சி முன்வரவேண்டும் என்பதே பொதுமக்களது கோரிக்கையாகும்.

 

மறு சீரமைப்பில் 21 வார்டுகளுடன் சிறிய தொகுதியானது, மதுரை தெற்கு

Print PDF

தினகரன் 03.08.2010

மறு சீரமைப்பில் 21 வார்டுகளுடன் சிறிய தொகுதியானது, மதுரை தெற்கு

மதுரை ஆக. 3: மதுரை பழைய கிழக்கு தொகுதி மறுசீரமைப்பில் மாவட்டத்திலேயே சிறியதாக மதுரை தெற்கு தொகுதியாக உருவாகியுள்ளது. இதில் தெற்குவாசல், மதிச்சியம், ஆழ்வார்புரம் பகுதிகள் இணைந்துள்ளன.

மதுரை நகரின் பழைய கிழக்கு தொகுதி தற்போது, "மதுரை தெற்கு" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய மத்திய தொகுதியில் இருந்த 39வது வார்டு, 43வது வார்டுகளான தெற்குவாசல் பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும் பழைய மேற்கு தொகுதியில் இருந்த 9வது வார்டு (மதிச்சியம்), 10வது வார்டு (ஆழ்வார்புரம்), 16வது வார்டு (செல்லூர் மார்க்கெட், திருவாப்புடையார் கோயில் பகுதி) புதிதாக தெற்கு தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 21 வார்டுகள் இடம் பெற்றுள்ளன.

அதன் விவரம்:

39&வது வார்டு:&

தெற்கு வாசலில் ஆரம்பமாகி, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, தெற்கு வெளி வீதி, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, சின்னக்கடை தெரு, பாண்டியவேளாளர் தெரு, தென்னோலைக்கார தெருக்கள்.

43&வது வார்டு:&

நாடார் வித்தியாசாலை தெரு, சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் பள்ளம், செட்டியூரணி சந்து, பிள்ளையார் பாளையம் ரோடு, எப்.எப்.ரோடு, காஜா தெரு.

44&வது வார்டு:&

மஞ்சணக்கார தெரு, தெற்கு வெளி வீதி, தெற்கு வாசல் மார்க்கெட், மொய்தீன் ஆண்டவர் சந்து, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, ராமச்சந்திரபுரம், சிங்காரதோப்பு, மகால் 7, 8&வது தெருக்கள்.

45&வது வார்டு:&

பழைய மாகாளிபட்டி ரோடு, திரவுபதி அம்மன் கோயில் சந்து, முத்துகருப்பபிள்ளை சந்து, தவிட்டு சந்தையில் ஒரு பகுதி.

46&வது வார்டு:&

மகால் சுற்றுப் பகுதிகள்.

47&வது வார்டு:&

லட்சுமிபுரம், கீழவெளி வீதி, கான்பாளையம்.

48&வது வார்டு:&

ஓபுளாபடித்துறை, நெல்பேட்டை மீன் மார்க்கெட் பகுதி, கீழமாரட் வீதி, கீழமாசி வீதி, சுவாமி சன்னதி பகுதிகள்.

49&வது வார்டு:&

முனிச்சாலை, இஸ்மாயில்புரம்

50&வது வார்டு:&

சவுராஷ்டிரா மேல் நிலைப்பள்ளி பின் பகுதி, கீழசந்தை பேட்டை.

51&வது வார்டு:&

பங்கஜம் காலனி, நிர்மலா மேல் நிலைப்பள்ளி பகுதி, தெப்பக்குளத்தை அடுத்து மாநகராட்சி எல்லை வரை.

52&வது வார்டு:&

மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் முக்தீஸ்வரர் கோயில் பகுதி, சிமெண்ட் ரோட்டின் ஒரு பகுதி, டீச்சர்ஸ் காலனி, அனுப்பானடியில் ஒரு பகுதி.

53&வது வார்டு:&

அனுப்பானடி.

54&வது வார்டு:&

நவரத்தினபுரம். அபிராமி தியேட்டர் பகுதிகள், குயவர்பாளையம்.

55&வது வார்டு:&

பாலரெங்கபுரம், பி.பி.ரோடு, சி.எம்.ஆர்.ரோடு, சின்னகண்மாய், மகாகணபதி நகர், கார்ப்பரேசன் காலனி.

56&வது வார்டு:&

காமராஜர்புரம், என்.எம்.ஆர்.ரோடு, ஜோசப் தெரு, முத்துராலிங்க தேவர் தெரு, வைத்தியநாதய்யர் தெரு, பாரதியார் தெரு.

57&வது வார்டு:&

செயின்ட் மேரீஸ், இந்திராநகர், சிந்தாமணி ரோடு, நாகுபிள்ளை தோப்பு.

58&வது வார்டு:&

கீரைத்துறை .

59&வது வார்டு:

வில்லாபுரம்.

நகரின் வட பகுதியில் 9&வது வார்டு:&

மதிச்சியம், காந்திநகர், ராமராயர் மண்டபம், செனாய்நகரில் 4 தெருக்கள்.

10&வது வார்டு:&

ஆழ்வார்புரம், மூங்கில் கடை தெரு, வைகை வடகரை, புளியந்தோப்பு.

16&வது வார்டு:&

செல்லூர் மார்க்கெட், பாலம் ஸ்டேஷன் ரோடு, திருவாப்புடையார் கோயில் பகுதி, வைகை ஆற்றின் ஓரம் கீழ தோப்பு, மேலத்தோப்பு.

வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு

மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் இந்த தொகுதியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு. இதன் வாக்காளர் வரைவு பட்டியல்:& மொத்தம்:& 1,49,005, ஆண்:& 74,759, பெண்:& 74,246 ஆழ்வார்புரம், மதிச்சியம், தெற்கு வாசல் புதிதாக சேர்க்கப்பட்டது

 


Page 157 of 238