Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

464 சிறப்பு வகை மின் விளக்குகளால் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் கடற்கரை நேப்பியர் பாலம்; மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

Print PDF

மாலை மலர் 28.07.2010

464 சிறப்பு வகை மின் விளக்குகளால் ஒளி வெள்ளத்தில் மிதக்கும் கடற்கரை நேப்பியர் பாலம்; மு..ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

464 சிறப்பு வகை மின் விளக்குகளால்
 
 ஒளி வெள்ளத்தில் மிதக்கும்
 
 கடற்கரை நேப்பியர் பாலம்;
 
 மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜூலை. 28- உலகிலேயே 2-வது நீளமான கடற்கரையான மெரீனாவில் ரூ.26 கோடி செலவில் அழகிய பூங்கா, நடை பாதை அமைக்கப்பட்டு தற்போது புதுபொலிவுடன் திகழ்கிறது.

இதற்கு மேலும் எழில் சேர்க்கும் வகையில் நேப்பியர் பாலத்தை மின் விளக்குகளால் அலங்கரித்து மக்களை கவரும் வகையில் மேலும் அழகு படுத்தப்படும் என்று துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி ஆஸ்திரேலிய நாட்டு சிட்னி பாலம் போல் நேப்பியர் பாலத்தை அழகு படுத்தும் பணி நடந்து வந்தது.

வெளிநாட்டு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 464 சிறப்பு வகை மின் விளக்குகள் நேப்பியர் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1 கோடியே 62 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.

தேவைக்கேற்ப ஒளியின் தன்மையை கட்டுப்படுத்தி பிரகாசிக்கும் வகையில் இந்தவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் வெளிப்புற, உட்புற பகுதி, விளிம்பு, அடிப்பகுதி, வாகனம் செல்லும் பகுதி, நடைபாதை ஆகிய 6 இடங்களில் வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் பாலம் தண்ணீரில் மிதப்பது போல் காட்சி அளிப்பதோடு பாலத்தின் முழு வடிவமும் தண்ணீரிலும் தெரியும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இன்றி விளக்கு வெளிச்சம் அமைக்கப்பட்டுள்ளது.

பாலத்தின் மேலே மல்டிகலரிலும், கீழே புளூ கலரிலும் வெளிச்சம் தெரிகிறது.

இந்தியாவில் வேறு எங்கும் இது போல் இல்லை. ஒளி வெள்ளத்தில் மிதக்கும் நேப்பியர் பாலத்தை பொதுமக்கள் பலர் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள்.

நேப்பியர் பாலத்தில் சிறப்பு வகை அலங்கார மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளதை இன்று இரவு 8 மணிக்கு துணை முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேயர் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி கமிஷனர் ராகேஷ் லக்கானி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.

1869-ம் ஆண்டு சென்னை ஆளுனராக இருந்த நேப்பியர் இந்த பாலத்தை வடிவமைத்து கட்டினார். கூவத்துக்கு நடுவில் அமைந்துள்ள இந்த பாலத்தை கடந்த 2000-ம் ஆண்டில் மேயராக இருந்த மு..ஸ்டாலின் விரிவுபடுத்தி நடைபாதை வசதியுடன் கட்டினார். சென்னைக்கு பெருமை சேர்க்கும் வகையில் இப்போது பாலம் மேலும் அழகு படுத்தப்பட்டுள்ளது.

 

குடிநீர் கசிவு சீர் செய்யும் வாகனம்

Print PDF

தினகரன் 28.07.2010ச்

குடிநீர் கசிவு சீர் செய்யும் வாகனம்

கோவை, ஜூலை 28: கோவை மாநகராட்சியில் குடிநீர் கசிவு சீர் செய்யும் வாகனம் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் குடிநீர் குழாய் உடைப்பி னால், கசிவினால் குடிநீர் இழப்பு ஏற்படுவதாக தெரியவந்தது.

இதைதொடர்ந்து, தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, சேலம், திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி, வே லூர், திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் 8 நகராட்சிக ளில் குடிநீர் கசிவு சீர் செய் யும் வாகனம் வாங்கப்பட் டது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், இரண்டாம் பகுதி திட்டத்தின் கீழ் 14.53 லட்ச ரூபாய் செலவில் குடிநீர் கசிவு சீர் செய்யும் வாகனத் தை வாங்கியது. இதை கோவை மாநகர மேயர் வெங்கடாசலம் நேற்று இயக்கி துவக்கினார். இதில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் கார்த்திக், எதிர்கட்சி தலைவர் உதயகுமார், சுகா தார குழு தலைவர் நாச்சிமு த்து, கணக்கு குழு தலைவர் தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வாகனத்தில், குடிநீர் கசிவு சீர் செய்யும் வாகனத்தில் டெலி மெட்டிரி வசதியுள்ளது. நிலத்தடியில் குடிநீர் குழாய் விரிசல் விட்டிருந் தால், அழுத்தம் அதிகமாக காணப்பட்டால், வெடிப்பு ஏற்பட்டிருந்தால் தெளிவாக காண முடியும்.

அந்த இடத்தில், டிரில்லர் மூலம் ரோடு மற்றும் கான்கிரீட்டை தோண்டி எடுத்து, குழாயை உடனடியாக சீர மைக்க முடியும். வாகனத்தில் இன்டர் நெட், ஒயர்லெஸ், ஜெனரேட் டர், ரோடு, கான்கிரீட் உடைக்கும் கருவிகள், மண் தோண்டும் கருவி, கசிவு நீரை உறிஞ்சி எடுக்கும் கருவி, மோட்டார் உள்ளிட்ட வசதி கள் இருக்கிறது.

குடிநீரில் மாசு கலந்திருந் தால் உடனடியாக பரிசோதிக்க, குளோரின் அள வை கண்டறிய தனி ஆய்வ கம் அமைக்கப்பட்டுள்ளது. குழாய் சீரமைப்பு பணி களை நடத்த மாநகராட்சி பொறியியல் பிரிவில் தனி சீரமைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இளம் பொறியா ளர் மற்றும் 5 அலுவலர்கள் பணியாற்றுவார்கள். பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக அந்த இடத்திற்கு சென்று குடிநீர் கசிவு சரி செய்யப்படும். புகார் தெரிவிக்க 94892 06030, காந்திபார்க் குடிநீர் தொட்டி வளாகம் 2471009, பாரதிபார்க் குடிநீர் தொ ட்டி வளாகம் 2442236, வரதராஜபுரம் நீர் தேக்க தொ ட்டி வளாகம் 2591333, கண பதி 2511911, சுங்கம் 2312267 என்ற தொலைபேசி எண் களில் தொடர்பு கொள்ள லாம்.

 

குடிநீர்க் கசிவு சரிசெய்யும் வாகனம் மாநகராட்சியில் அறிமுகம்

Print PDF

தினமணி 28.07.2010

குடிநீர்க் கசிவு சரிசெய்யும் வாகனம் மாநகராட்சியில் அறிமுகம்

கோவை, ஜூலை 27: கோவை மாநகராட்சியில் குடிநீர்க் கசிவை சரிசெய்ய பிரத்யேக வாகனம் வாங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் பிரதான குடிநீர்க் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அதேபோல வார்டு பகுதிகளிலும் குடிநீர்க் கசிவு ஏற்படுவதால் குடிநீர் விரயமாகிறது. இதை சரிசெய்ய உடனடியாகச் செல்ல முடியாத நிலையும் உள்ளது.

எனவே குடிநீர்க் கசிவை சரிசெய்ய பிரத்யேக வாகனம் மாநகராட்சிக்கு வாங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மானியத்தொகையில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ. 14.53 லட்சம். மினி பஸ் போல தோற்றம் அளிக்கும் இந்த வாகனத்தில், குடிநீர்க் கசிவை சரிசெய்யும் அனைத்து உபகரணங்களும் இருக்கும்.

ஜெனரேட்டர், வயர்லெஸ், இணைய இணைப்புடன் கூடிய மடிகணினி (லேப்டாப்), மொபைல் ஆய்வுக்கூடம், குடிநீரின் தரத்தை ஆய்வு செய்யும் கருவிகளும் இருக்கும். குடிநீர்க் கட்டணத்தை கணக்கிட்டு உடனடியாக ரசீது கொடுக்கக்கூடிய வசதியும் உள்ளது. மாநகராட்சி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனத்தை மேயர் ஆர்.வெங்கடாசலம் கொடி அசைத்து துவக்கிவைத்தார் (படம்).

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர். இந்த வாகனத்தைப் பயன்படுத்த தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. உதவிப் பொறியாளர் கதிர்வேல் மேற்பார்வையில் டேப் இன்ஸ்பெக்டர், ஒரு பிட்டர், 5 தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடிநீர்க் கசிவு தொடர்பான தகவல்கள் தெரிந்தால், 94892 06030 என்ற செல்போனில் தகவல் தெரிவிக்கலாம்.

 


Page 158 of 238