Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ஆரோக்கியபுரம் & புதுவிளை இணைப்பு பாலம் திறப்பு

Print PDF

தினகரன் 22.07.2010

ஆரோக்கியபுரம் & புதுவிளை இணைப்பு பாலம் திறப்பு

திங்கள்சந்தை, ஜுலை 22: திங்கள் நகர் தேர்வுநிலைப்பேரூராட்சிக்குட்பட்ட ஆரோக்கியபுரம் & புதுவிளை பகுதிக்கு ரூ2 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.

விழாவுக்கு கவுன்சிலர் சேவியர் ராஜமணி தலைமை வகித்தார். பேரூ ராட்சி தலைவி ராஜம், ஒன்றிய முன்னாள் தி.மு.க அவைத்தலைவர் புஷ்பராஜ், பேரூர் தி.மு.க முன்னாள் செயலர் பாலையன், சுப்பிரமணியம் மாவட்ட பிரதிநிதி சர்ச்சில் வேல்குமார், பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் ஜோசப் ராஜ், ஹெலன்டேவிட்சன் எம்.பி ஆகியோர் புதிய பாலத்தை திறந்து வைத்து பேசினார். விழாவில் ஊர்பொது மக்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விரைவாக குப்பை அகற்ற நவீன வாகனம் அறிமுகம்

Print PDF

தினகரன்   22.07.2010

விரைவாக குப்பை அகற்ற நவீன வாகனம் அறிமுகம்

சென்னை, ஜூலை 22: குப்பையை நவீன முறையில் அகற்ற ரூ9ட்சத்தில் க்ராப்ளர்களுடன் கூடிய எக்ஸ்ளேட்டர் வாகனங்களை மாநகராட்சி வாங்கி யுள்ளது. சாலைகளில் மேடு, பள்ளங்களை சரிசெய்வதற்காக ரூ20.67லட்சத்தில் 2 சாலை உருளைகள், குப்பை மாற்று வளாகத்தில் இருந்து குப்பையை கனரக வாகனங்களில் எடுத்துச் செல்ல வசதியாக, இரண்டு க்ராப்ளர்களுடன் கூடிய எக்ஸ்ளேட்டர்வாகனங்கள் ரூ94லட்சத்திலும் மாநகராட்சி புதிதாக வாங்கியுள்ளது.

இந்த வாகனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி புதுப்பேட்டை மாநகராட்சி பணிமனையில் நேற்று நடந்தது. இதை தொடங்கி வைத்து, மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ‘சாலைகளை சீரமைக்கவும், பூங்காக்களை பராமரிக்கவும், நவீன முறையில் குப்பை அகற்றவும் என பல்வேறு பணிகளுக்காக

கடந்த 4 ஆண்டுகளில் ரூ 41.2கோடி மதிப்பில் காம்பேக்டர்கள், கனரக வாகனங்கள், முன் பளுதூக்கி இயந்திரம் என 340 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தற்காலிக ஓட்டுனர்களாக பணியாற்றும் 62 பேர் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர்என்றார்.

 

நவீன முறையில் குப்பை அகற்ற, மாநகராட்சி வாங்கிய புதிய வாகனத்தை மேயர் சுப்பிரமணியன் தொடங்கி வைக்கிறார்.

Last Updated on Thursday, 22 July 2010 09:52
 

ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட செல்லூர் காய்கறி மார்க்கெட் திறப்பு

Print PDF

தினமணி 22.07.2010

ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட செல்லூர் காய்கறி மார்க்கெட் திறப்பு

மதுரை, ஜூலை 21: மதுரை செல்லூரில் மாநகராட்சி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட காய்கறி மார்க்கெட் புதன்கிழமை திறக்கப்பட்டது.

மேயர் கோ.தேன்மொழி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் எஸ். செபாஸ்டின், துணை மேயர் பி.எம். மன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் கே.எஸ்.கே. ராஜேந்திரன் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கமிஷனர் பேசுகையில், இந்த மார்கெட்டில் தற்போது 105 கடைகள் கட்டப்பட்டுள்ளன. மார்க்கெட்டின் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வியாபாரிகளின் வருகையையொட்டி இந்த மார்க்கெட்டில் புதிய கடைகள் கட்டுவதற்கு மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மார்க்கெட் திறப்புக்குப் பின்னர் கடைகளின் செயல்பாடுகளை மேயர், கமிஷனர், மண்டலத் தலைவர் க. இசக்கிமுத்து, மக்கள் தொடர்பு அலுவலர் ரா.பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்ó.

அங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகளிடம், கடைக்கு தினமும் விதிக்கப்பட்டுள்ள வாடகைக்கு மேல் யாரிடமும் கூடுதலாகப் பணம் கொடுத்து ஏமாந்துவிடவேண்டாம் என்று அறிவுறுத்தினார். திறப்பு விழா நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளர் சக்திவேல், கவுன்சிலர் பாண்டியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செல்லூர் காய்கறி மார்க்கெட்டின் மொத்தப் பரப்பு 6.50 ஏக்கர். இதில், கடைகள் மட்டும் 6,800 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளன. மார்க்கெட்டில் ஏசி ஷீட் கூரை, கான்கிரீட் தளம், மின் விளக்கு வசதி, மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 


Page 159 of 238