Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ.33.42 லட்சம் மதிப்பில் திரு.வி.க., பாலம் சீரமைப்பு

Print PDF

தினமலர் 22.07.2010

ரூ.33.42 லட்சம் மதிப்பில் திரு.வி.., பாலம் சீரமைப்பு

அடையாறு : அடையாறு திரு.வி.., மேம்பாலம் 33.42 லட்சம் ரூபாய் செலவில் பக்கவாட்டு சுவர் எழுப்பி சீரமைக்கும் பணி துவங்கியது.அடையாறு திரு.வி.., மேம்பாலம் 35 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது. இதன் வழியாக நாள் ஒன்றுக்கு பல்லாயிரக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பாலம் முறையாக பராமரிக்காமல் விட்டதால், பக்கவாட்டிலுள்ள தடுப்பு சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன.விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டுமென "தினமலர்' நாளிதழ் படத்துடன் செய்தி வெளியிட்டு வந்தது. இதன், நடவடிக்கையாக தற்போது 33.42 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.இது குறித்து மாநகராட்சியின் பாலங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடையாறு திரு.வி.., மேம்பாலத்தை மாநகராட்சியின் 10வது மண்டலம் சார்பில் சீரமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி திட்ட மதிப்பீடு தயாரித்து 33.42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி டெண்டர் விடப்பட்டு தற்போது, ஆரம்பக் கட்ட பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மேம்பாலத்திலுள்ள பக்கவாட்டு சுவர்கள் அகற்றப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைக்கப்படவுள்ளன. அதில், அழகான ஓவியங்களும் வரைப்படவுள்ளது' என்றார்.

 

ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் மாதம் பணிகள் முடியும் போக்குவரத்து நெரிசல் குறையும்

Print PDF

தினமலர் 21.07.2010

ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அக்டோபர் மாதம் பணிகள் முடியும் போக்குவரத்து நெரிசல் குறையும்

சென்னை, ஜூலை 21: ரங்கராஜபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி அக்டோபரில் முடிக்கப்படவுள்ளது.

தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வடக்கு உஸ்மான் சாலை& மகாலிங்கபுரம் சாலை, உஸ்மான் சாலை&துரைசாமி சாலை, கோமதி நாராயண சாலை&திருமலை சாலை ஆகிய சாலை சந்திப்புகளில் மாநகராட்சி சார்பில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது.

இது தவிர, ரங்கராஜபுரத்தையும் வடக்கு தி.நகர் பகுதியையும் இணைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க ரங்கராஜபுரம் ரயில்வே சந்திப்பின் குறுக்கே மேம்பாலம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, இந்த சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி 2008 ஜூலையில் தொடங்கியது. இங்கு ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே கட்டுமான பணிகளை ரயில்வே துறை ரூ.8 கோடியில் மேற்கொண்டுள்ளது. மற்ற பணிகளை மாநகராட்சி ரூ.15.75 கோடியில் நிறைவேற்றுகிறது.

இந்த மேம்பாலம் 962 மீட்டர் நீளம் கொண்டது. வடக்கு உஸ்மான் சாலை சந்திப்பில் தொடங்கும் பசுல்லா சாலையில் இருவழி போக்குவரத்துக்கு ஏற்ப 8.5 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் இருக்கும். ரங்கராஜபுரம் பகுதியில் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இடது பக்கமாக திரும்பி பசுல்லா சாலைக்கு வரும் மேம்பாலமும் 6.5 மீட்டர் அகலத்தில் இருக்கும். பசுல்லா சாலையில் இருந்து இடது பக்கமாக திரும்பி ரங்கராஜபுரத்திற்கு (சுப்பிரமணியன் நகர்) செல்வதற்காக அமைக்கப்படும் மேம்பாலத்தின் அகலம் 6.5மீட்டராக இருக்கும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ்லக்கானி கூறுகையில், ‘ரங்கராஜபுரம் மேம்பாலம் ரூ.23.75 கோடி செலவில் கட்டப்படுகிறது. இதில் ரயில்வே பங்களிப்பு ரூ.8 கோடியாகும். தற்போது 70 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபருக்குள் பணிகள் முடிக்கப்படும். ரங்கராஜபுரம், மேற்குமாம் பலம், அசோக்நகர் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் இந்த மேம்பாலத்தின் மூலம் பயன் அடைவார்கள். இந்த மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் கோடம்பாக்கம் மேம்பாலம், தி.நகர் துரைசாமிசாலை வாகன சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் ஓரளவு வாகன நெரிசல் குறையும்என்றார்.

 

பாதாளச் சாக்கடையில் தூர்வாரும் இயந்திரம் திருப்பூர் மாநகராட்சியில் தயார்

Print PDF

தினமணி 21.07.2010

பாதாளச் சாக்கடையில் தூர்வாரும் இயந்திரம் திருப்பூர் மாநகராட்சியில் தயார்

திருப்பூர், ஜூலை 20: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்படும் பாதாளச் சாக்கடை திட்டத்தில் ஏற்படும் அடைப்புகளை தூர்வார ரூ. 12 லட்சம் மதிப்பில் 2 இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் செயல்பாட்டை மேயர் க.செல்வராஜ் செவ்வாய்க்கிழமை துவக்கி வைத்தார்.

÷திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் தற்போது 37 வார்டுகளில் மட்டும் பாதாளச் சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்ய ஆங்காங்கே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

÷அடைப்பு ஏற்படும் சமயங்களில் அக் குழாய்களின் வழியே ஆட்கள் இறங்கி சரிசெய்யும் நிலை இருந்து வந்தது. இதனால், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை அடுத்து, அடைப்புகளை அகற்றும் இயந்திரங்கள் வாங்க வேண்டும் என்று மாநகராட்சிக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.

÷அதன் அடிப்படையில், மொத்தம் ரூ. 12 லட்சம் மதிப்பில் பாதாளச் சாக்கடையில் தூர்வாரும் இரு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களுக்கு அரசு 100 சதவீதம் மானியம் வழங்கியுள்ளது. இந்த இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் மாநகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை விளக்கிக் காட்டப்பட்டது.

÷இந்த இயந்திரங்களின் செயல்பாட்டை மேயர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார். ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி, பொறியாளர் கௌதமன், மாநகர நல அலுவலர் கே.ஆர்.ஜவஹர்லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 160 of 238