Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

செங்கல்பட்டு நகராட்சி அவலம் வீணாய் கிடக்கும் குடிநீர் லாரிகள்

Print PDF

தினகரன் 20.07.2010

செங்கல்பட்டு நகராட்சி அவலம் வீணாய் கிடக்கும் குடிநீர் லாரிகள்

செங்கல்பட்டு, ஜூலை 20: செங்கல்பட்டு நகராட்சியின் மலைமேட்டு பகுதிகளான அனுமந்தபுத்தேரி, ராமர்பாளையம் ஆகிய இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்தப் பகுதிகளுக்கு லாரிகள் மூலமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 30வது வார்டு விநாயகர் கோயில் தெரு, 21 வது வார்டு ராமர் பாளையம் ஆகிய பகுதிகளில் 3 ஆண்டுகளுக்கு முன், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டன.

ஆனால், இதுவரை குடிநீர் நிரப்பவில்லை. மிகப்பிரம்மாண்டமான தொட்டியாக இருப்பதால், சிலர் அதன் மறைவில் இரவு நேரத்தில் மது குடிக்கின்றனர். லாரிகளில் கொண்டு வரப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. நகராட்சி குடிநீர் லாரிகள் பழுதடைந்து கிடக்கின்றன.

இதனால் தனியார் லாரி, டிராக்டரிலும் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. போதுமான அளவுக்கு நகராட்சி குடிநீர் வழங்காததால், மக்கள் காசு கொடுத்து குடிநீர் வாங்குகின்றனர். குடிநீர் தொட்டிகளை சீர்படுத்தி தண்ணீர் நிரப்பி தினமும் சப்ளை செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

பழுதான சாலையை சீரமைக்க ரூ.1.1 கோடியில் நவீன இயந்திரம்

Print PDF

தினகரன் 30.06.2010

பழுதான சாலையை சீரமைக்க ரூ.1.1 கோடியில் நவீன இயந்திரம்

புதுடெல்லி, ஜூன் 30: பள்ளங்களை மூடி சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.1.1 கோடி மதிப்பிலான நவீன இயந்திரம் ஒன்றை மாநகராட்சி வாங்கியுள்ளது.

டெல்லியில் அக்டோபர் மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இதனால் நவீன சாலைகள் அமைத்தல், சாலைகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை டெல்லி மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. பல இடங்களில் சாலைகளின் நடுவே பெரிய பள்ளங்கள் உள்ளன. அவற்றை சீரமைக்க இங்கிலாந்து நாட்டில் இருந்து ரூ.1.1 கோடி மதிப்பில் ஒரு நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

அந்த இயந்திரம் மூலம் சாலையில் உள்ள பள்ளத்தை 30 நிமிடங்களுக்குள் சரிப்படுத்தி சாலையை சீரமைக்க முடியும். இயந்திரத்தின் மூலம் சாலையை சீரமைக்கும் பணி மோதி நகரில் அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது,‘ இந்த இயந்திரத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்து, திருப்தி ஏற்பட்டால், மேலும் பல இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்என்றார்.

Last Updated on Wednesday, 30 June 2010 11:48
 

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம் ஆகஸ்ட் 5ல் ஸ்டாலின் திறக்கிறார்

Print PDF

தினகரன் 29.06.2010

தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிடம் ஆகஸ்ட் 5ல் ஸ்டாலின் திறக்கிறார்

தூத்துக்குடி, ஜூன் 29: தூத்துக்குடி மாநகராட்சி புதிய கட்டிட திறப்பு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது. துணை முதல்வர் மு.. ஸ்டாலின் கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

இது குறித்து கலெக்டர் பிரகாஷ் அளித்த பேட்டி:

தூத்துக்குடி மாநகராட்சிக்கு பழைய பஸ் நிலையம் அருகில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது.

புதிய கட்டிடத்தை துணை முதல்வர் மு.. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தொடர்ந்து அவர் ஆயிரத்து 250 சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதிக்கடன், மானியக்கடனுதவி வழங்குகிறார்.

மேலும் 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 7ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மீதமுள்ளவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இரண்டு ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை மாவட்டத்தில் உள்ள 8ஆயிரத்து 683 பேருக்கு 11 ஆயிரத்து 800 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மின் மயானத்தை பொறுத்தவரை அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து அனுமதி சான்று கிடைத்ததும் உடனடியாக திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து கலெக்டர் பிரகாஷ், மகளிர் திட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட ஜேசிபி மற்றும் ஹெவி கிரேன் ஆப்பரேட்டர் பயிற்சியை நிறைவு செய்த 50 இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்சியில் டிஆர்ஓ. துரை. ரவிச்சந்திரன், மகளிர் திட்ட அலுவலர் பொறுப்பு வகிதாபாணு, சப்கலெக்டர்கள் லதா, இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 162 of 238