Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

கோபியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

Print PDF

தினமணி 21.06.2010

கோபியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

கோபி, ஜூன் 20: நம்பியூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சமும், அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டம் சார்பில் ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நம்பியூர்-கோபி சாலையில் உள்ள பழைய பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பேரூராட்சித் தலைவர் கீதாமுரளி தலைமையில் நடைபெற்றது. நம்பியூர் பேரூர் கழக திமுக செயலாளர் பி.கே.முத்துச்சாமி முன்னிலை வகித்தார்.

திருப்பூர் மக்களைவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜவஹர் வரவேற்றார். மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.வி.சரவணன் கலந்து கொண்டு பேரூராட்சி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் .. திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

அரசு கட்டிடம் திறப்பு விழா

Print PDF

தினமலர் 21.06.2010

அரசு கட்டிடம் திறப்பு விழா

ஈரோடு: சூரம்பட்டி நகராட்சியில் மத்திய அரசு நிதி 2.5 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம் மற்றும் ஈரோடு எம்.எல்.., தொகுதி நிதி ஐந்து லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கழிப்பிடம் ஆகியவற்றை ஈரோடு எம்.எல்.., ராஜா திறந்து வைத்தார்.
சூரம்பட்டி நகராட்சி தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் மேரியம்மாள், நகராட்சி துணைத் தலைவர் கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

*வெண்டிபாளையத்தில் நியமன எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்ட நிதி 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் திறப்புவிழாவுக்கு காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். தமிழக நியமன எம்.எல்.ஏ., ஆஸ்கர் சி. நிக்லி சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.

 

நுங்கம்பாக்கத்தில் உள்ளது போல் லிப்ட் வசதியுடன் 6 நடைபாதை மேம்பாலம் டிசம்பருக்குள் முடிவடையும்

Print PDF

தினகரன் 17.06.2010

நுங்கம்பாக்கத்தில் உள்ளது போல் லிப்ட் வசதியுடன் 6 நடைபாதை மேம்பாலம் டிசம்பருக்குள் முடிவடையும்

சென்னை, ஜூன் 17: நுங்கம்பாக்கத்தில் உள்ளது போல் மின்தூக்கி வசதியுடன் கூடிய 6 நடைபாதை மேம்பாலம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியுள்ளன. டிசம்பருக்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள சில இடங்களில் சாலைகளை கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் கன்பத் ஓட்டல் அருகே மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபாதை மேம்பாலம் கட்டப்பட்டது. பின்னர், மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலமாக மாற்றப்பட்டது.

இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சியின் 2010&2011ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 6 முக்கிய சாலைகளில் மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

அதன்படி ராஜாஜிசாலையில் கடற்கரை ரயில் நிலையம் அருகில், என்.எஸ்.சி. போஸ் சாலையில் பாரிமுனை பஸ் நிலையம் அருகில், வாலாஜா சாலையில் பெல்ஸ் சாலை சந்திப்பு மற்றும் காயிதே&மில்லத் சாலை சந்திப்பு, காந்தி இர்வின் சாலையில் எழும்பூர் ரயில் நிலையம் அருகில், துர்காபாய் தேஷ்முக் சாலையில் சத்யா ஸ்டூடியோ அருகில் மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

என்எஸ்சி போஸ் சாலை, பெல்ஸ் சாலை, காயிதே மில்லத் சாலை ஆகிய மூன்று இடங்களில் நடைபாதை மேம்பாலம் அமைக்க ஒப்பந்தங்கள் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களில் ஜூலை மாதம் இறுதியில் டெண்டர் கோரப்படும். பின்னர் ஆறு நடைமேம்பால பணிகளுக்கான டெண்டர், அதிகாரிகள் மற்றும் நிலைக்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, குறைந்த (எல்&1) விலைக்கு டெண்டர் கோரப்பட்ட நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்படும்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறும்போது, "சென்னையில் புதிதாக அமைக்கப்பட உள்ள 6 மின்தூக்கி வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட (டெண்டர்) பணிகள் துவங்கியுள்ளது. ஒவ்வொரு பாலமும் ரூ.1 கோடி செலவில் 5.5 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். ஒரே நேரத்தில் 15 பேர் மின்தூக்கியில் ஏறி, சாலையை கடக்க முடியும். இந்த பணிகள் ஆகஸ்டில் துவங்கி டிசம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

 


Page 164 of 238