Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

ரூ. 2.8 லட்சத்தில் 52 குப்பை சேகரிக்கும் வண்டிகள்

Print PDF

தினமணி 15.06.2010

ரூ. 2.8 லட்சத்தில் 52 குப்பை சேகரிக்கும் வண்டிகள்

போடி, ஜூன் 14: போடியில் குப்பைகளைச் சேகரிப்பதற்காக ரூ. 2.8 லட்சம் செலவில் வாங்கப்பட்ட 52 குப்பை வண்டிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன. போடி நகரில் 33 வார்டுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இவற்றில் சேகரிக்கப்படும் குப்பைகள் பழைய குப்பைக் கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்தக் கிடங்கில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாகச் சேர்ந்ததால், உரம் தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், சிறைக்காடு பகுதியில் புதிய குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. இதில் பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்த்து, மக்கும் தன்மை கொண்ட குப்பைகளை மட்டும் சேகரித்து, உரம் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

போடி நகரை குப்பைகளற்ற நகராக அறிவித்தும், 100 சதவீத பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றவும் நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், நகராட்சித் தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, போடி நகரில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வீடுகளில் சேரும் குப்பைகளைச் சேகரிப்பதற்காக நகராட்சி சார்பில் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் 52 குப்பை சேகரிக்கும் தள்ளுவண்டிகள் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றின் மூலம் காய்கறிக் கழிவுகள் போன்ற மக்கும் தன்மையுடைய குப்பைகள் தனியாகவும், பிளாஸ்டிக் பொருள்கள் உள்ளிட்ட மக்காத தன்மை கொண்ட குப்பைகள் தனியாகவும் சேகரிக்கப்படும். இந்த வண்டிகளை பயன்பாட்டுக்கு வழங்கும் நிகழ்ச்சி, நகராட்சி அலுவலகத்தில நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் ரதியாபானு தலைமை வகித்தார். ஆணையர் முன்னிலை வகித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். லட்சுமணன் தொடங்கிவைத்து பேசுகையில், போடி நகரை குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத நகராக மற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். குப்பைகளைச் சாலைகளில் கொட்டாமல், அவற்றைச் சேகரிக்க வரும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

சுகாதாரப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றார் அவர். சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், தியாகராஜன், சேகர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

கோவை மாநகராட்சிக்கு 4 புதிய பொக்லைன்கள்

Print PDF

தினமணி 15.06.2010

கோவை மாநகராட்சிக்கு 4 புதிய பொக்லைன்கள்

கோவை, ஜூன் 14: கோவை மாநகராட்சிக்கு, மாநில அரசு சார்பில் 4 பொக்லைன் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் 12-வது நிதிக்குழு முடிவின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் அரசின் மானியமாக ரூ. 96 லட்சம் ஒதுக்கப்பட்டது. இத் தொகையில் தலா ரூ. 16 லட்சம் மதிப்பிலான 4 பொக்லைன் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களை மேயர் ஆர்.வெங்கடாசலம் கொடி அசைத்து துவக்கிவைத்தார் (படம்). ஒவ்வொரு மண்டலங்களுக்கும் தலா ஒரு இயந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்தல், சாலையோர மட்புதர்களை அகற்றுதல், குளக்கரைகளில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்கு இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் நா.கார்த்திக், கிழக்கு மண்டலத் தலைவர் எஸ்.எம்.சாமி, எதிர்கட்சித் தலைவர் வெ..உதயக்குமார், சுகாதாரக் குழுத் தலைவர் பி.நாச்சிமுத்து, கவுன்சிலர்கள் ஷோபனா செல்வன், முருகேசன், அப்துல்நாசர் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

மாநகராட்சி இலவச விநியோகம் ராஜாஜிநகர் மக்களுக்கு கழிவுகளை சேகரிக்க தொட்டி

Print PDF

தினகரன் 14.06.2010

மாநகராட்சி இலவச விநியோகம் ராஜாஜிநகர் மக்களுக்கு கழிவுகளை சேகரிக்க தொட்டி

பெங்களூர், ஜூன் 14:பெங்களூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் பொதுமக்களையும் ஈடுபடுத்தும்பொருட்டு, ராஜாஜிநகர் பகுதியிலுள்ள வீடுகளில் கழிவுகளை தரம்பிரித்து சேகரிக்க இலவசமாக குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டன.

பெங்களூர் மாநகராட்சி எல்லையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திடக்கழிவுபொருட்களை உலர்பொருள் மற்றும் ஈரப்பொருள் என தனித்தனியாக பிரிக்க சிகப்பு மற்றும் நீலநிற குப்பைத்தொட்டிகளை மாநகராட்சி வழங்கி வருகிறது.

பெங்களூர், ராஜாஜிநகர் முதலாவது ஆர்பிளாக்கில் வசித்துவரும் 360 குடும்பங்களுக்கு சிகப்பு மற்றும் நீலநிற குப்பைதொட்டிகள் அளிக்கப்பட்டன.திடக்கழிவு மேலாண்மையில் மக்களையும் ஈடுபடுத்துவதற்காக இத்திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. ராஜாஜிநகரில் இத்திட்டத்தை எம்.எல்.. என்.எல்.நரேந்திரபாபு துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,‘எல்லா பகுதிகளிலும் கழிவுபொருட்களை தனித்தனியாக பிரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அவசியம். எனினும், இத்திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் கடினமானபணியாகும். பெங்களூர் போன்ற நகரில் திடக்கழிவுமேலாண்மை பெரும்சவாலாகி வருகிறது.’ என்றார்.

அப்பகுதி கவுன்சிலர் எஸ்.ஹரீஷ் கூறுகையில்,‘திடக்கழிவு மேலாண்மை தொடர்பான விஷயங்கள் கருத்தரங்குகளில் விவாதப்பொருளாக மட்டும் இருக்கக்கூடாது. குப்பைகளை உலர்பொருள்மற்றும் ஈரப்பொருள் என தனித்தனியாக பிரிக்க பொதுமக்கள் பழகினால், எதிர்கால சந்ததியினர் எந்த சிக்கலும் இல்லாமல் வாழலாம். இத்திட்டத்தில் நம் குடும் பத்தலைவிகள் பெரும்பங்குவகிக்கிறார்கள். சமையல் அறைகளில் அதிக நேரம் செலவிடும் பெண்மணிகள், அங்கு குப்பைகளை சேகரிக்கிறார்கள். ஈரப்ªபாருட்களை மட்டும் தனியாக பிரித்தெடுத்தால், அதனை இயற்கை உரமாக மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழலுக்கு பாதகமில்லாமல் பயன்படுத்தலாம்.’ என்றார். வீதிவீதியாக சென்ற எம்.எல்.. மற்றும் கவுன்சிலர்கள் எல்லா குடும்பங்களுக்கும் சிகப்பு(உலர்பொருட்கள்), நீலநிற(ஈரப்பொருட்கள்) குப்பைதொட்டிகளை வழங்கினர்.

 


Page 166 of 238