Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

நகராட்சி அலுவலகம் கட்டும் பணி விறுவிறு

Print PDF

தினமலர் 14.06.2010

நகராட்சி அலுவலகம் கட்டும் பணி விறுவிறு

திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்காக கட்டப்பட்டு வரும் புதிய அலுவலக பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் 2011ல் திருப்பூர் மாநகராட்சியுடன் நல்லூர் நகராட்சி இணைக்கப்பட உள்ளது. அப்போது, நல்லூர் நகராட்சி அலுவலகம் கிழக்கு மண்டல அலுவலகமாக செயல்படும். அதற்கேற்ப, புதிய அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. கட்டுமான பணிகள் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; அப்பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எலக்ட்ரீசியன் ஒர்க், அறைகளுக்கு டைல்ஸ் ஒட்டுதல், பூச்சு வேலை என 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. மதில் சுவர் அமைத்தல், நிலம் சமன் செய்தல் மற்றும் படி களுக்கு டைல்ஸ் ஒட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள், 15 நாட்களுக்குள் முடிந்து விடும். செம்மொழி மாநாடு முடிவதற்குள் கட்டட பணி அனைத்தும் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நகராட்சி தலைவி விஜயலட்சுமி கூறுகையில், ""செம்மொழி மாநாட்டுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர் கோவை வருவதால், அப்போது அவர்களுக்கு நேரம் கிடைத்தால், திறப்பு விழா செய்வதற்கான வாய்ப்புள்ளது. இம்முடிவு, இன்னும் உறுதி செய்யப்படவில்லை,'' என்றார்.

 

பேரூராட்சி மன்றத்துக்கு புதிய கட்டிடம்

Print PDF

தினகரன் 10.06.2010

பேரூராட்சி மன்றத்துக்கு புதிய கட்டிடம்

பண்ருட்டி, ஜூன் 10: பண் ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சி அலுவலக கட்டிடம் மிக சிறியதாக உள்ளது. இதன் காரணமாக அலுவலக பணிகள், மன்ற கூட்டம் நடத்த முடியவில்லை.

இதன் தொடர்ச்சியாக பேரூராட்சி மன்ற செயல் பாடுகளை அதிக அளவில் செயல்படுத்தப்பட முடியவில்லை. அரசுக்கு புதிய கட் டிடம் கட்ட பேரூராட்சி மன்றம் கோரிக்கை வைத் தது. இதன் பேரில் அரசு அடிப்படை கட்டமைப்பு பற்றாக்குறை ஈடு செய்யும் மானிய நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் சீத்தாராமன் ஆலோசனைப்படி செயல் அலுவலர் ராம்குமார் மேற்பார்வையில் கட்டிடம் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது.

கட்டுமான பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி துரைராஜ், துணைத்தலைவர் அருணாசலம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.

 

சாலைகளைச் சுத்தம் செய்ய நவீன வாகனங்கள்

Print PDF

தினமணி 10.06.2010

சாலைகளைச் சுத்தம் செய்ய நவீன வாகனங்கள்

கோவை, ஜூன் 9: கோவை மாநகராட்சி சார்பில் வாங்கப்பட்டுள்ள சாலைகளைச் சுத்தம் செய்யும் நவீன துப்புரவு வாகனத்தின் இயக்கத்தை, துணை முதல்வர் மு..ஸ்டாலின் புதன்கிழமை துவக்கி வைத்தார்.

÷கோவை நகரின் பிரதான சாலைகளான அவிநாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை ஆகியவற்றில் சாலையோரம் மற்றும் தடுப்புகளின் ஓரங்களில் சேரக்கூடிய மண், தூசு துகள்களைச் சுத்தப்படுத்த இந்த வாகனம் பயன்படுத்தப்படும்.

÷திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ. 1.30 லட்சத்தில் 3 துப்புரவு வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. இவற்றில் இரண்டு, தலா 6.5 டன் கொள்ளளவு உடையவை. மற்றொன்று 5 டன் கொள்ளளவு கொண்டது.

இந்த துப்புரவு வாகனத்தில் நாளொன்றுக்கு 40 கி.மீ. தூரம் சுத்தப்படுத்த முடியும்.

÷முதல்கட்டமாக ஒரு துப்புரவு வாகனம் வந்துள்ளது. இதை துணை முதல்வர் ஸ்டாலின் புதன்கிழமை பார்வையிட்டு துவக்கி வைத்தார். மற்ற இரு வாகனங்கள், செம்மொழி மாநாட்டுக்குள் வரவழைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

÷தலா 8 மணி நேர அளவில் இரண்டு ஷிப்டுகளாக இந்த வாகனத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட இந்த இயந்திரம், புனேவைச் சேர்ந்த டீலரிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

÷உள்நாட்டு தயாரிப்பான லாரி சேஸில் இந்த இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை விற்பனை செய்த நிறுவனத்தினரே வாகனத்தை இயக்கும் பணியை, மூன்று மாதங்களுக்கு மேற்கொள்வர். அதன் பிறகு இப்பணியை டெண்டர் மூலம் தனியாரிடம் ஒப்படைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

 


Page 168 of 238