Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

சேலம் மாநகராட்சியில் ரூ.27 லட்சத்தில் குப்பை தொட்டிகள்

Print PDF

தினகரன் 07.06.2010

சேலம் மாநகராட்சியில் ரூ.27 லட்சத்தில் குப்பை தொட்டிகள்

சேலம், ஜூன் 7: சேலம் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்தில் குப்பை வண்டிகள், குப்பை தொட்டிகள் வாங்கப்பட உள்ளது.

சேலம் மாநகராட்சியில் நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகள் உள்ளன. இதில் 21 வார்டுகளில் தனியார் நிறுவனமும், மற்ற வார்டுகளில் மாநகராட்சியும் துப்புரவு பணிகளை மேற்கொள்கிறது. இந்நிலையில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள நவீன குப்பை தொட்டிகள், தள்ளுவண்டிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த குடிசைப்பகுதி குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி உள்கட்டமைப்பு பணிகளில் ஒரு பகுதியாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்தில் 125 குப்பை அள்ளும் தள்ளுவண்டிகள், 36 இரும்பு குப்பை தொட்டிகள் வாங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்

Print PDF

தினகரன் 02.06.2010

திருவண்ணாமலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள்

திருவண்ணாமலை,ஜூன் 2: திருவண்ணாமலை நகராட்சியில் கடந்த 2006ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணியை துணை முதல்வர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 21 வார்டுகளில் 47.60 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் குழாய்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.37.87 கோடி செலவில் முதற்கட்ட திட்டப்பணிகள் நடைபெறுகிறது. இதன் மூலம் 12 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக இணைப்புகள் வழங்கப்பட உள்ளது.

இதுவரை 40.50 கி.மீ. நீளத்திற்கு கழிவுநீர் கால்வாய்கள் ஏற்படுத்தப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆழ்துளை கிணறுகள், கழிவு நீரேற்றும் நிலைய பணிகள் 90 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. 75 சதவீத வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

இப்பணிகளுக்காக இதுவரை ரூ.17.11 கோடி செலவிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் வருகிற ஜனவரி 2011க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நேற்று கு.பிச்சாண்டி எம்.எல்.. ஆய்வு செய்தார்.

மணலூர்பேட்டை சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையம், கல்நகர் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பைப்லைன் அமைக்கும் பணிகள், வேட்டவலம் சாலையில் உள்ள கழிவு நீரேற்று நிலையம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். மேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது, நகராட்சி தலைவர் இரா.திருமகன், துணை தலைவர் ஆர்.செல்வம், ஆணையாளர் சேகர், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் முருகன், உதவி நிர்வாக பொறியாளர்கள் ஆர்.ரகுபதி, .பெருமாள், நகராட்சி கவுன்சிலர் இல.குணசேகரன் மற்றும் துரைவெங்கட் ஆகியோர் உடனிருந்தனர்.

 

ஆற்காட்டில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Print PDF

தினகரன் 02.06.2010

ஆற்காட்டில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

ஆற்காடு, ஜூன் 2: ஆற்காட்டிற்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர முயற்சி எடுப்போம் என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

ஆற்காட்டில் தமிழக அரசின் இலவச கலர் டிவி வழங்கும் விழா அண்ணாசிலை அருகில் நேற்று மாலை நடந்தது.

விழாவிற்கு ராணிப்பேட்டை எம்.எல்.. ஆர் காந்தி தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் பொன். ராஜசேகர், நகர திமுக செயலாளர் ஏ.வி. சரவணன், முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் வரவேற்றார். நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துக்கொண்டு 6981 பேருக்கு இலவச கலர் டிவிகளை வழங்கி பேசியதாவது:

தேர்தலின்போது பலர் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள் ஆனால் ஓட்டு வாங்கிக்கொண்டு எதுவும் செய்ய மாட்டார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் கருணாநிதி மட்டும்தான்.

குடிசைகளே இல்லாத அளவிற்கு கான்கிரிட் வீடுகள் கட்ட நிதியை ஒதுக்கியுள்ளார். ஆற்காடு தாலுகாவில் 44 ஆயிரம் பேருக்கு இலவச டிவி வழங்கப்பட்டது. வேலு£ர் மாவட்டத்தில் 5,82,231 பேருக்கு இலவச கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் சொர்க்க லோக ஆட்சி நடைபெறுகிறது. 87 வயதிலும் உழைக்கும் முதல்வர் கருணாநிதி தெய்வ பிறவியாக கருதப்பட வேண்டியவர்.

ஆற்காடு நகருக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் இங்கு கோரிக்கை வைத்தார். விரைவில் அவரையும், மாவட்ட செயலாளர் காந்தியையும் அழைத்துக்கொண்டு துணை முதல்வர் மு.. ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையை எடுத்து வைத்து அந்த திட்டம் செயல்பட முயற்சி எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் எம்.பி. முகமது சகி, முன்னாள் எம்.எல்.. பி.என். சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.கே. சுந்தரமூர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் கே. மணி, ஒன்றிய திமுக செயலாளர் எம்.வி.பாண்டுரங்கன், தாசில்தார் ராணி, வட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன், கிராம நிர்வாக அலுவலர் சந்திரபூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


Page 170 of 238