Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

திருவண்ணாமலை நகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள்: 2011 ஜனவரியில் முடிவடையும்: எம்எல்ஏ தகவல்

Print PDF

தினமணி 02.06.2010

திருவண்ணாமலை நகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள்: 2011 ஜனவரியில் முடிவடையும்: எம்எல்ஏ தகவல்

திருவண்ணாமலை, ஜூன் 1: திருவண்ணாமலை நகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் 2011-ம் ஆண்டு ஜனவரியில் முடிவடையும் என எம்எல்ஏ கு.பிச்சாண்டி கூறினார்.

திருவண்ணாமலை நகரில் மொத்தம் உள்ள 39 வார்டுகளில் முதல்கட்டமாக 21 வார்டுகளில் 47.6 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதித்து, புதைச் சாக்கடை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம் ரூ.37.87 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியின் மூலம் 12 ஆயிரம் வீடுகள் மற்றும் வர்த்தக இணைப்புகள் தரப்படுகின்றன. இதனால் 77,404 மக்கள் பயன் அடைவர்.

கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டப் பணிகளில் இதுவரை 85 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை 40.5 கி.மீ. தூரத்துக்கு கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தூரத்துக்கு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்றுவரும் புதைச் சாக்கடை திட்டப் பணிகளை மணலூர்பேட்டை சாலை, வேட்டவலம் சாலை உள்ளிட்ட இடங்களில் எம்எல்ஏ கு.பிச்சாண்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். 'புதைச் சாக்கடை திட்டப் பணிகள் வரும் 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் பணிகள் முடிவடையும்' என எம்எல்ஏ கூறினார்.

நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன், துணைத் தலைவர் ஆர்.செல்வம், பாதாள சாக்கடை திட்ட நிர்வாக பொறியாளர் முருகன், நகராட்சி ஆணையர் சேகர், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் ஆர்.ரகுபதி, ஏ.பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 02 June 2010 08:00
 

உயர் கோபுர மின் விளக்கு துவக்க விழா

Print PDF
தினகரன்   31.05.2010

உயர் கோபுர மின் விளக்கு துவக்க விழா

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர் டவுன் பஞ்சாயத்தில் உயர் கோபுர மின் விளக்கு துவக்க விழா நடந்தது.

அமைச்சர் துரைமுருகன் தலைமை வகித்தார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் உயர் கோபுர மின் விளக்கை இயக்கி வைத்தார். கலெக்டர் ராஜேந்திரன், எம்.பி., அப்துல் ரகுமான், முன்னாள் எம்.பி., முகமது சகி, கழிஞ்சூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டிடம் திறப்பு விழா: வேலூர் அடுத்த திருவலம் டவுன் பஞ்சாயத்தில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் மற்றும் டவுன் பஞ்சாயத்து முதல் மாடிக் கட்டிடம் திறப்பு விழா நடந்தது. கலெக்டர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் எம்.பி., முகமது சகி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஷிலா ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 18 August 2012 09:10
 

பாதாள சாக்கடை தூர் வார இயந்திரங்கள் ரூ.12 லட்சத்தில் வாங்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர்      28.05.2010

பாதாள சாக்கடை தூர் வார இயந்திரங்கள் ரூ.12 லட்சத்தில் வாங்க மாநகராட்சி முடிவு

திருப்பூர் : பாதாள சாக்கடை திட்ட குழிகளில் கழிவுகளை தூர்வார, இரண்டு இயந்திரங்கள் வாங்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, 12 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. திட மற்றும் திரவக்கழிவுகளை அகற்றுவதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. மாநகராட்சியில் திடக்கழிவுகளை அள்ளுவதற்கு 13 "டுவின் கன்டெய்னர் டம்பர் பிளேசர்' வாகனங்கள் உள்ளன.

குப்பை தொட்டிகள், "டம்பர் பிளேசர்' மூலம் பாறைக் குழிகளுக்கு எடுத்துச் செல்லப் படுகின்றன. தற்போது, வீதிகளில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் போதுமானதாக இல்லை.அதனால், கூடுதலாக 80 குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வாங்கப்பட உள்ளன. அவையும் செயல்பாட்டுக்கு காண்டு வரப்பட்டால், "டம்பர் பிளேசர்'களின் எண்ணிக்கை போதாது.

எனவே, கூடுதலாக இரண்டு "டம்பர் பிளேசர்' வாங்க, மாநகராட்சி நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. இதற்காக, 30.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு டிரைவர் பணியிடங்களை ற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

எட்டாவது வார்டு நாவலர் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் தேங்கும் கழிவு நீரை அகற்ற, பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மின்மோட்டார் அமைத்துள்ளனர். அதற்கான மின்கட்டணத்தை யும் செலுத்தி வருகின்றனர். அந்த மின் மோட்டாரை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க முன்வந்துள்ளது. மின்கட்டணத்தை செலுத்தவும் முடிவு செய்துள்ளது.

பாதாள சாக்கடை திட்டத்தில் "மேன் ஹோல்' குழிகளில் கழிவுகளைத் தூர்வாரும் இயந்திரங்கள் இரண்டு வாங்கப்பட உள்ளன. இதற்காக 11 லட்சத்து 99 ஆயிரத்து 442 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை தொடர்பான தீர்மானங்கள், வரும் 31ம் தேதி நடக்கும் மாநகராட்சி கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்படுகிறது.

 


Page 171 of 238