Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

உள்ளாட்சிகளில் கட்டமைப்பு வசதி: கணக்கெடுக்க உத்தரவு

Print PDF

தினமலர்    25.05.2010

உள்ளாட்சிகளில் கட்டமைப்பு வசதி: கணக்கெடுக்க உத்தரவு

விருதுநகர் : உள்ளாட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த புள்ளியியல் துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எவ்வாறு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைந்துள்ளதா, இன்னும் தேவையான வசதிகள் எது என முழுமையாக கிராம ஊராட்சிகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. மாவட்டங்களில் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் தனி எண் வழங்கப்பட்டு உள்ளது. அதில் எந்த எண்ணை அதிகாரிகள் தேர்வு செய்கின்றனரோ, அந்த கிராமத்தில் புள்ளியியல் துறையினர் முழுமையாக தகவல்கள் சேகரித்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிராமங்களில் புள்ளியியல் துறையினரும், பேரூராட்சி, நகராட்சிப்பகுதிகளில் வளர்ச்சித்துறையினரும் இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர

 

லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

Print PDF

தினமணி 21.05.2010

லக்கம்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டடம் திறப்பு

கோபி, மே 20: கோபி அருகே உள்ள லக்கம்பட்டி பேரூராட்சிக்கு தாட்கோ மூலம் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. புதிய கட்டட திறப்பு விழா பேரூராட்சித் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

பேரூராட்சி புதிய அலுவலக கட்டடத்தை முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி திறந்து வைத்துப் பேசினார் (படம்).

அவர் பேசுகையில், கடந்த ஒராண்டில் மட்டும் லக்கம்பட்டி பேரூராட்சியில் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே யாரும் உருவாக்க முடியாத திட்டம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்றார்.

பேரூராட்சி துணைத் தலைவர் துரைசாமி வரவேற்றார். நிர்வாக அதிகாரி முருகேசன் நன்றி கூறினார். முன்னாள் எம்.எல்.ஏ கோ..வெங்கிடு, கோபி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சரஸ்வதி குமாரசாமி, கோபி நகர திமுக செயலாளர் கோ.வெ.மணிமாறன், லக்கம்பட்டி பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

 

 

முருகன் கோவில் வளாகத்தில் ரூ.5.50 லட்சத்தில் காட்சி கோபுரம்

Print PDF

தினமலர்     21.05.2010

முருகன் கோவில் வளாகத்தில் ரூ.5.50 லட்சத்தில் காட்சி கோபுரம்

மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவில் வளாகத்தில் காட்சி முனை கோபுரம் அமைக்க, சுற்றுலா மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழ்ந்துள்ள மஞ்சூரில், பென்ஸ்டாக், அவலாஞ்சி, அப்பர்பவானி, அன்னமலை முருகன் கோவில் முக்கிய இடம் வகிக்கின்றன. கோடைசீசனில், ஊட்டி, குன்னூர் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் பலர், மஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளையும் பார்வையிட வருகின்றனர்.

மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் தரிசிக்கவும், இங்குள்ள இயற்கை காட்சிகளை ரசிக்கவும் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது; வருவோர் வசதிக்காக, கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் அன்னமலை முருகன் கோவிலில் காட்சி முனை கோபுரம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; 3 லட்சத்தில் காட்சிமுனை கோபுரம், காட்சி முனைக்கு செல்ல வசதியாக 2.5 லட்சத்தில் நடைபாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு, பூமி பூஜை நடத்தப்பட்டது.

 


Page 173 of 238