Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

வளவனூர் பேரூராட்சியில் கடைகள் பொது ஏலம்

Print PDF

தினமலர்    21.05.2010

வளவனூர் பேரூராட்சியில் கடைகள் பொது ஏலம்

விழுப்புரம்: வளவனூர் பேரூராட் சியில் புதிதாக கட் டப் பட்ட புதிய கடைகள் ஒரு லட் சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

வளவனூர் நான்கு முனை ரோட்டின் அருகே அண்ணா மறுமலர்ச்சி திட் டத்தின் கீழ் புதிதாக ஒன்பது கடைகள் கட்டப் பட்டுள்ளன. இந்த கடைகள் இந்தாண்டு ஏப்ரல் முதல் வரும் 2011ம் ஆண்டு மார்ச் முடிய ஒவ் வொரு கடைகளும் ஆயிரத்து 350 ரூபாய் முதல் ஆயிரத்து 550 ரூபாய் வரை பொது ஏலம் விடப் பட்டன. இவை ஒரு லட் சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டது. ஏலம் எடுத்தவர்களிடம் கடையின் சாவியை பேரூராட்சி சேர்மன் சம் பத் வழங்கினார். துணை சேர்மன் சரபோஜி, செயல் அலுவவலர் கன்னியப் பன், இளநிலை உதவியா ளர் ஷேக்லத்தீப், கவுன்சிலர்கள் குமாரி ராமு, ஷெரீப், குமார், விஜயா சேகர், தி.மு.., நகர துணை செயலாளர் பெரியசாமி, ரகுமான், ராதா ஆகி யோர் உடனிருந்தனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடை சாவிகளும் வழங்கப்பட் டது.

 

கொசு உற்பத்தியை தடுக்க ஐஐடி உதவி கேட்டு மாநகராட்சி கடிதம்

Print PDF

தினகரன்    20.05.2010

கொசு உற்பத்தியை தடுக்க ஐஐடி உதவி கேட்டு மாநகராட்சி கடிதம்

புதுடெல்லி, மே 20: மழைநீர் வடிகால்களில் கொசு உற்பத்தியை தடுக்க தேவையான தீர்வுகளை தரும்படி டெல்லி ஐ..டி.க்கும், இன்ஜினியரிங் கல்லூரிக்கும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

டெல்லியில் முக்கிய சாலைகளின் இருபுறங்களிலும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சாலையில் தேங்கும் மழைநீர், தெருக்கள், வாகன நிறுத்தங்கள் போன்றவற்றில் இருந்து வரும் மழைநீர் இந்த வடிகால்கள் மூலம்தான் வெளியேற்றப்படுகிறது.

மழைக்காலங்களில் இந்த வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கும். அப்போது இவை கொசுக்களின் உற்பத்தி இடங்களாக மாறிவிடுகின்றன. கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்போது, அவை மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவுகின்றன. இந்நிலையில் அடுத்து வரும் மழைக்காலத்தில் வடிகால்களில் கொசு உற்பத்தியை தடுக்க என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை தரும்படி ஐ..டி. மற்றும் டெல்லி இன்ஜினியரிங் கல்லூரி ஆகியவற்றுக்கு மாநகராட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி என்.கே.யாதவ் கூறுகையில், ‘’மழைநீர் வடிகால்களில் உள்ள மூடிகள் ஒரு நபரால் தூக்க முடியாது. மேலும், மழைக்காலங்களில் அதை திறந்தாலும் தண்ணீர் நிரம்பி இருக்கும் என்பதால், அவற்றில் கொசு மருந்தை தெளிக்க முடியாது. இதனால்தான் ஐ..டி. மற்றும் இன்ஜினியரிங் கல்லூரி உதவியை கேட்டுள்ளோம்" என்றார்.

 

நகராட்சி கவுன்சிலின் ‘போசர்’ வாகனத்தால் பசுமை பெறும் மரங்கள்

Print PDF

தினகரன்     20.05.2010

நகராட்சி கவுன்சிலின் போசர்வாகனத்தால் பசுமை பெறும் மரங்கள்

புதுடெல்லி, மே 20: புதுடெல்லி நகராட்சி கவுன்சில் வாங்கியுள்ள நவீன போசர் வாகனத்தால் மரங்கள், தூசுகளை இழந்து பசுமை பெற்று வருகின்றன.

‘சுத்தமான நகரம்; பசுமையான நகரம்’ என்று புதுடெல்லி நகராட்சி கவுன்சில் ஆங்காங்கே விளம்பரம் செய்துள்ளதை பார்த்திருக்கலாம். யாராவது பசுமையான நகரத்தை ஏற்படுத்த என்ன முயற்சி மேற்கொண்டீர்கள் என்று இனி நகராட்சி கவுன்சிலை பார்த்து கேட்க முடியாது.

ஏனெனில், நகராட்சி கவுன்சில் பகுதியில், உள்ள மரங்களில் உள்ள தூசுகளையும், அழுக்குகளையும் அகற்றி அவற்றை பசுமையாக்க அதிநவீன வாகனத்தை வாங்கி அதை தினமும் இயக்கியும் வருகிறது.

டெல்லியில் பெருகி வரும் வாகனத்தால் புகை, தூசி, அழுக்குகள் மிக அதிகமாக உள்ளன. இதனால் பசுமையான மரங்கள் கூட நிறம்மங்கி காணப்படுகின்றன. எப்போதாவது மழை பெய்யும்போது, இந்த மரங்களா இவ்வளவு நிறம் மாறியிருந்தது என்று வியக்கும் அளவுக்கு தூசி, அழுக்குகளால் நிறம் மாறிக்கிடக்கின்றன.

இந்நிலையில், மரங்களுக்கு புத்துணர்ச்சி அளித்து அவற்றின் பசுமையை காப்பதற்காக வாட்டர் போசர்என்ற நவீன வாகனத்தை நகராட்சி கவுன்சில் வாங்கியுள்ளது.இதில் அழுத்தத்தை கூட்டியோ, குறைத்தோ தண்ணீரை பீய்ச்சி அடிக்க முடியும். இதன்படி, ஒவ்வொரு பகுதியாக சென்று அங்கு மழை போல் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக இருக்கும் மரங்கள் மீது தண்ணீர் பீய் ச்சி அடிக்கப்படுகிறது. அதிக அழுக்கு இருப்பதாக கருதப்படும் மரங்களுக்கு தனியாக தண்ணீர் பீய்ச்சப்படுகிறது. சுருக்கமாக சொன்னால் மரங்களை குளிப்பாட்டப்படுகின்றன. இதனால் ஒரு சில நிமிடங்களில் மரங்கள் பச்சை பசேல் என்று கண்ணுக்கு விருந்தாக காட்சியளிக்கின்றன.

இந்த போசர் வாகனம் காலையில் 7 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் இயக்கப்படுகிறது. நகராட்சி கவுன்சிலின் தீயணைப்பு பிரிவு வீரர்கள் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

போசர் வாகனத்தின் இன்னொரு விசேஷம், இதை தீயணைப்பு வாகனமாகவும் பயன்படுத்தலாம். மொத்தம் 12,000 லிட்டர் தண்ணீர் நிரப்பும் வசதிக் கொண்ட போசரில், 13.5 மீட்டர் உயரம் வரை நீளும் தன்மை கொண்ட ஏணி உள்ளது. இது தவிர சாக்கடை அடை ப்பு ஏற்பட்டால், அங்கிருந்து தண்ணீரை உறிஞ்சி அதை சரி செய்ய முடியும். இப்படி பல்முறை பயன்பாட்டுக்கு உரிய வகையில் போசர் வாகனம் அமைந்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனத்தின் மூலம் நேற்று முன்தினம் நிதி மார்க் பகுதியில் உள்ள மரங்கள் குளிப்பாட்டப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி கவுன்சிலின் தலைமை தீயணைப்பு அதிகாரி ஜஸ்பீர் சிங் கூறுகையில், "மரங்களை குளிப்பாட்டுவதற்காக வாங்கப்பட்ட நவீன வாகனம் இது. இதுவரையில் வேறு எந்த நகரிலும் இதுபோன்ற முயற்சி எடுக்கப்படவில்லை. தினமும் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து, அங்கு மரங்களை சுத்தம் செய்து வருகிறோம். இதன் மூலம் தீயணைப்பு வீரர்களும் பயிற்சி பெற முடிகிறது" என்றார்.

 


Page 174 of 238