Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Infrastructure

அன்னமலை முருகன் கோயில் வளாகத்தில் ரூ.5.5 லட்சத்தில் காட்சிமுனை கோபுரம்

Print PDF

தினகரன்    20.05.2010

அன்னமலை முருகன் கோயில் வளாகத்தில் ரூ.5.5 லட்சத்தில் காட்சிமுனை கோபுரம்

மஞ்சூர், மே 20: அன்னமலை முருகன் கோயில் வளாகத்தில் காட்சிமுனை கோபுரம் அமைக்க சுற்றுலா மேம்பாட்டு

கழகம் ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

குந்தா பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிகள் ஏராளமாக உள்ளது. இவற்றில் அப்பர்பவானி, அவலாஞ்சி, பென்ஸ்டாக், அன்னமலை முருகன் கோயில், மஞ்சகம்பை சத்திய நாகராஜர், ஹெத்தையம்மன் கோயில் உள்ளிட்டவை முக்கியமானதாகும்.

சீசனை முன்னிட்டு ஊட்டி, குன்னூர் ஆகிய பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குந்தா பகுதியிலுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் ஓணிகண்டி அருகேயுள்ள மலை மீது அன்னமலை முருகன் கோயில் உள்ளது.

இப்பகுதியை சுற்றிலும் இயற்கை காட்சிகள் சூழ்ந்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் ஒலி மாசு இல்லாத அமைதியான இயற்கை சூழல் நிறைந்த பகுதியாக இருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் வழிபாட்டிற்கு பின் பல மணி நேரம் இங்கே தங்குகின்றனர். இக்கோயிலுக்கு வரும் பயணிகள் எண்ணிக் கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது.

இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் வசதிக்காக கீழ்குந்தா பேரூரா ட்சி சார்பில் காட்சிமுனை கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் ரூ.3 லட்சத்தில் காட்சிமுனை கோபுரமும், காட்சிக்கு முனைக்கு செல்ல ரூ.2.5 லட்சத்தில் நடை பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.அன்னமலை முருகன் கோயில் முன்புறமுள்ள சிவன் கோயில் அருகே இந்த காட்சி முனை கோபு ரம் அமைய உள்ளது. இது சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற் பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

 

துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

Print PDF

தினமணி    18.05.2010

துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் திறப்பு

விருத்தாசலம்
, மே 15: விருத்தாசலம் நகராட்சி சார்பில், சாத்துக்கூடல் சாலையில் துப்புரவு ஆய்வாளர் அலுவலகக் கட்டடத் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

÷நகரமன்ற தலைவர் வ..முருகன் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசினார். நகர்மன்ற உறுப்பினர் ராமு வரவேற்றார். நகராட்சி ஆணையர் திருவண்ணாமலை தலைமை தாங்கினார்.

÷நகர்மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, துப்புரவு அலுவலர் பரமசிவம், நகர்மன்ற உறுப்பினர் சாவித்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷நகர்மன்ற உறுப்பினர்கள் கர்ணன், பாபு, அன்பழகன், துப்புரவு ஆய்வாளர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சிவப்பிரகாசம், துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்தமிழன், ஆறுமுகம், சுப்பிரமணியன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

காமன்வெல்த் போட்டிக்கான மாநகராட்சி கட்டுமான பணி இம்மாதத்தில் முடியும்

Print PDF

தினகரன்    18.05.2010

காமன்வெல்த் போட்டிக்கான மாநகராட்சி கட்டுமான பணி இம்மாதத்தில் முடியும்

புதுடெல்லி, மே 18:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் அனைத்தும் இம்மாதத்துடன் முடிவடையும் என்று மேயர் பிருத்விராஜ் சகானி கூறினார்.

இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் நடக்க இருக்கின்றன. அதற்காக சில கட்டுமான பணிகள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளை நிறைவேற்றுவதில் மாநகராட்சி விரைந்து செயல்பட்டு வருகிறது.

மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தும் இம்மாதத்துடன் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை பணிகள் தாமதம் ஆனாலும் ஜூனுக்குள் அதை செய்து முடிப்போம்.

நகரை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை. காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கும் முன்னர் அத்தகைய நிலையை உருவாக்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நகரின் கவுரவம் மட்டும் அல்ல, நாட்டின் கவுரமே உயரும்.

திட்டப் பணிகளை நிறைவேற்ற மாநகராட்சியிடம் போதுமான நிதி இல்லை என்பது உண்மைதான். இதுபற்றி முதல்வர் ஷீலா தீட்சித்தை சந்தித்து பேசினேன். அப்போது மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது உட்பட பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.2,000 கோடி கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

அதற்கு முதல்வர், திட்டவாரியாக செலவுத்தொகையை குறித்து தரும்படி கேட்டுள்ளார். அதை வைத்து நிதி அமைச்சருடன் ஆலோசித்து நிதி உதவி செய்வதாக முதல்வர் கூறியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பணி புரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்க உடனே நிதி உதவி தேவைப்படுகிறது. இவ்வாறு மேயர் பிருத்விராஜ் சகானி கூறினார்.

 


Page 175 of 238